Saturday, January 8, 2011

மார்கழி சிறப்பு

மாதத்தில் நான் மார்கழி " என்றான் கிருஷ்ணன்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்று சிலரும் திறக்காத கோயில்களும் திறக்கும் சிறந்த மாதம் என்றும் ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல்லையும் உளுந்தையும் சேமிக்கும் மாதம் என்றும் சிலரும் , தை மாதத்தில் கொண்டாடும் அறுவடை விழாவைச் சிறப்பாக கொண்டாட மார்கழி மாதத்தில் கரும்பு , நெல் , உளுந்து , வாழை , மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள்மார்கழி இல்லை , அதனால் அது சூன்யமாதம் இல்லை என்றும் சிலரும் கூறுகின்றனர்.
போதாக்குறைக்கு ' மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான். ''
மார்கழி மாதத்தில் அதிகாலை சூரியனிடத்து ஒளிர்ந்து வீசுகின்ற சூரிய கதிர்'ஓஸோஸான்' , மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.
சிவபெருமான் நஞ்சுண்டதைத் தடுத்து , அந்த நஞ்சு அவருடைய நீண்ட ஆயுளுக்காகசெய்த சக்தி அவருடைய நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரைஅன்று விரதமிருக்கிறார்கள். திருமால் அறிதுயல் கெடுத்துக் கண்விழிப்பதுவைகுண்ட ஏகாதசியன்றுதான். அது மார்கழி மாதத்தில்தான் வருகிறது.மார்கழி மாதத்தில் கோலங்கள் இடப்படாத இல்லங்களில் கூட கோலமிட்டு , நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசனிக்காய் பூவையாவது வைப்பதற்கு முயல்வார்கள்

No comments:

Post a Comment