Saturday, January 29, 2011

திரிசங்கு சொர்க்கம்

திரிசங்கு சொர்க்கம்

தனது பூதவுடலுடன் சொர்க்கம் போக எண்ணிய திரிசங்கு என்னும் அரசன், அதை அடையும் முயற்சிக்கு யாரிடமிருந்தும் உதவி கிடைக்காததோடு, கூடவே விகார ரூபத்தையும் சாபமாக பெற்றான். அவனுக்கு விசுவாமித்திரர் உதவ யாகம் நடத்துகிறார். அவனை அப்படியே சொர்க்கத்துக்கு மேலே அனுப்ப, இந்திரனால் அவன் கீழே தள்ளப்பட, கோபம் கொண்ட விஸ்வாமித்திரர் அவனை ஆகாயத்திலேயே அந்தரத்தில் நிறுத்தி அவனை சுற்றி இன்னொரு சொர்க்கம் படைக்க ஆரம்பிக்கிறார். பயந்துபோன தேவர்கள் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டு, அந்த சொர்க்க நிர்மாணம் ஆனவரை அப்படியே விட்டுவிட கெஞ்சுகிறார்கள். அந்த சொர்க்கம்தான் திரிசங்கு சொர்க்கம், அதாவது பூமியும் இல்லை, சொர்க்கமும் இல்லை.
இஷ்வாகுவாம் சத்து மன்னனான திரிசங்கு என்பவன் தன் பூத உடலோடு சொர்க்கத்திற்குச் செல்ல பிரியப்பட்டான். தன் விருப்பத்தை குலகுருவான வசிஷ்டரிடமும் தெரிவித்தான். வசிஷ்டரோ அது நடக்காத காரியம் எனக் கூறி விட்டார். அதனால் வேறு பலரிடம் போய் கூறினான். ஆனால் பயன் இல்லை. வசிஷ்டரது புதல்வர்களிடம் போய் தன் விருப்பத்தைக் கூறவே அவர்கள் அவனை ஹரிஜனாகப் போகும் படி சபித்து விட்டார்கள்.
சாபத்தின் காரணமாக திரி சங்குவின் உடலின் நிறம் மாறி கருப்பாகிவிட்டது. ஆடைகள் அழுக்கடைந்து போட்டிருந்த தங்க ஆபரணங்கள் எல்லாம் இரும்பாக மாறிவிட்டன. முடிவில் திரிசங்கு வசிஷ்டரின் கடும் பகைவரான விசுவாமித்திரரை அணுகி நடந்ததை எல்லாம் கூறி தன்னை எப்படியாவது பூத உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்ப வேண்டுமென்று வேண்டிக்கொண்டான்.
விசுவாமித்திரரும் "நீ சற்ரும் கவலைப்படாதே உன்னை இதே உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன்" எனக் கூறி அதற்காக ஒரு யாகமும் செய்யலானார். அந்த யாகத்தைக் காண எல்லா முனிவர்களும் வந்திருந்தனர். ஆனால் விசுவாமித்திரரின் புதல்வர்களும், மகோதயன் என்பவனும் வரவில்லை. அவர்களைக் கடுமையாக அவர் சபித்தார்
யாகத்தில் அவிர்பாகத்தை வாங்கிக் கொள்ள தேவர்கள் வரவில்லை. விசுவாமித்திரர் அதற்காக மனம் கலங்கவில்லை. தன்தபோ பலத்தால் திரிசங்குவை உடலோடு சொர்க்கத் திர்கு அனுப்பினார். திரிசங்குவின் உடல் பூஉலகிலிருந்து தேவ லோகத்திற்குக் கிளம்பியது.சொர்க்கத்திற்கு வரும் திரிசங்குவிற்கு இடம் கொடுப்பதற்கு வருத்து இந்திரன் முதலிய தேவர்கள் அவனைக் கீழே தள்ளிவிட்டார்கள். திரிசங்கு தலைகீழாகக் கீழே விழலானான். உடனே விசுவாமித்திரர் வேறொரு சப்தரிஷி மண்டலம், நட்சத்திரங்கள் முதலியவற்றை சிருஷ்டித்து புதிதாக தேவர்களையும் சிருஷ்டி செய்யப் போவதாக அறிவித்தார்.
உடனே தேவர்களும் ரிஷிகளும் பயந்து நடுங்கி விசுவாமித்திரரிடம் ஓடிவந்தனர். ஹரிஜனான திரிசங்கு விற்கு எப்படி சொர்க்கத்தில் இடம் அளிப்பது என்று தயங்கியே அவனை வரவிடாது தடுத்ததாகக் கூறினர். விசுவாமித்திரரோ "நான் திரிசங்குவை பூத உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்புவதாக வாக்களித்து விட்டேன். அது நடந்தே தீர வேண்டும்" என்றார். அதன் பின் திரிசங்கு புதிதாக சிருஷ்டி செய்யப்பட்ட சொர்க்கத்தில் இருக்க ஏற்பாடாயிற்று. இது திரிசங்கு சொர்க்கம் எனப் பெற்றது.



No comments:

Post a Comment