Tuesday, January 25, 2011

குங்குமம்

குங்குமம்
குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள்.

அதை கலப்படமில்லாமல் நாமே குங்குமத்தை தயாரிக்கலாம்
தேவையானவை
நல்ல எலுமிச்சை பழங்கள், கொடி எலுமிச்சை மிகவும் நல்லது.
மஞ்சள் துண்டுகள்
வெண்காரம்
படிகாரம்
எலுமிச்சையை நறுக்கி சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு மண் கலங்களை உபயோகிப்பது நல்லது.
வெண்காரம், படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் கலக்க வேண்டும்.வெண்காரம், படிகாரத்தை சிறிது அதிகமாகசேர்த்தால் சிவப்பு நிறம் கூடுதலாக இருக்கும். ஆனால் அது தோலுக்கு அவ்வளவு நல்லதல்ல.
இக்கலவையினை நிழலில் நீர் வற்றுமளவிற்கு காயவைத்து எடுத்துக்கொளள்ளவும்
(இச்செய்முறையை ஹயக்ரீவப் பெருமாள் அகத்தியருக்கு உபதேசித்ததாக வரலாறு கூறிகிறது.)
குங்குமம் வைப்பதன் நன்மைகள்!

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவைமூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண்அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதகிடைக்கும்.
ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு.உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக்கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும்.
குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது. இந்தச் சக்தி பெண்களுக்குமிகவும் நல்லது. இதனால்தான் நம் வீட்டுப் பெண்கள், பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக்கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்!





No comments:

Post a Comment