Friday, January 7, 2011

சிதம்பர ரகசியம் ?!

சிதம்பர ரகசியம் ?!


பூலோக கைலாசம் என்று சொல்லப்படுகிற தில்லைவனத்தில் வியாக்ரபாத மகரிஷியும் ( புலிக்கால் முனிவர் ) , பதஞ்சலி மகரிஷியும் ( ஆதிசேஷன் ) இறைவனுடைய தாண்டவத்தைக் கண்ணாரத் தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் . அவர்களுக்கு ஆடிக் காண்பிப்பதற்காக ஈசுவரன் 3,000 முனிவர்களோடு வந்தார் . சிதம்பரத்தில்தான் அப்போது மகரிஷிகளுக்காக தாண்டவம் ஆடிக் காட்டினார் ஈசன் . மகரிஷிகளின் விருப்பப்படி ஈசன் அங்கேயே கோயில் கொண்டு விட்டார் . கூட வந்த 3,000 முனிவர்களும் அங்கேயே தங்கிவிட்டார்கள் . அவர்கள்தாம் 'தில்லை மூவாயிரம் ' பொது தீட்சிதர்கள் .

நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!

" சிதம்பர ரகசியம் என்றால் என்ன ?"

" புராணங்கள் அதைத் ' தஹ்ரம் ' என்கின்றன . உருவமின்றி இருப்பதால் ' அரூபம் ' என்றும் சொல்வார்கள் . இந்த ரகசிய ஸ்தானம் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும் , ஸ்ரீ நடராஜ மூர்த்திக்குப் பின்புறத்திலும் உள்ளது .

இது எப்பொழுதும் ' திரஸ்க்ரிணீ ' என்கிற நீல வஸ்திரத்தால் மூடியிருக்கும் . நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் சதா காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் . இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால் , நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும் . எந்தப் பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜன்ம விமோசனம் சித்திக்கும் .எளிமையாகச் சொன்னால் , சிதம்பர ரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும் !"

நான் பலதடவைகள் சிதம்பரம் கோயிலுக்குப் போயிருக்கிறேன்

ஒவ்வொருதடவையும் அந்த "சிதம்பர ரகசியம்" பார்த்திருக்கிறேன்

ஆனாலும் இன்னும் அது எனக்கு ரகசியமாகவே இருக்கிறது

ஒரு கதவின் துளையினூடே நம்மைப் பார்க்கச் சொல்கிறார்கள்

ஒரே இருட்டாக இருக்கிறது ஆனாலும் நடுநடுவே நட்சத்திரம் போல் எதோ

பளிச்சென்று தெரிந்து மறைகிறது அங்கிருக்கும்

தீட்சதிரிடம் கேட்டேன் இதுதான் ஆகாயத் தத்துவம் என்றார் ,அவர்

கூட்டத்தில் மிகவு பிசியாக இருந்ததால் அதற்கு மேல் நின்று

விளக்கவில்லை ,அந்த அறை இது போல் வைத்திருக்க எதாவது புராணக் கதை உள்ளதா

?வெளியில் நடராஜர் ஆடுவதற்கும் இதற்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா?அந்த

அறையை ஒரு 10 வினாடி வரைக்கூட நின்று பார்க்க விட மாட்டேன் என்கிறார்களே

அதி என்ன ரகசியம் அது நம் வாழ்க்கைகு எந்த விதத்தில் உதவும் என்று பல

கேள்விகள் என் மனதில் எழுகின்றன

இந்தச் சிதம்பர ரகசியம் என்பது அவ்வளவு எளிதாய்ப் புரிந்து கொள்ளக் கூடிய

விஷயம் இல்லை என்றே நம்புகின்றேன். நம் உடலில் மத்தியில் கவிழ்த்து வைத்த தாமரை

மலர் போன்ற இதயத்தின் நடுவில் உள்ள அணுவை விடச் சிறியதான மையப் புள்ளியையே

பரமாத்மாவின் இருப்பிடம் என்று சொல்லுவார்கள். அந்த மையப் புள்ளி

இருக்குமிடத்தைக் கண்டறிந்து, நம் யோகசக்தியின் மூலம் உள்ளொளியைக் காணுவது

யோகக் கலையின் தஹர வித்யா என்று அழைக்கப் படுகின்றது என்று நம்புகின்றேன் இந்த தஹர வித்யா முறையின் மூலம் கண்டறிந்த இறை சக்தியே ஜீவசக்தியாக
சிதம்பர ரகசியத்தில் உறைந்துள்ளது என்று ஐதீகம். இந்தப் பிரபஞ்சத்தின் இதயப்
பாகம் ஆன சிதம்பரம் நகரின் மையத்தில் உள்ள நடராஜர் சந்நதியில் நடராஜரின் ஊன்றிய

காலுக்குக் கீழே தான் பிரபஞ்சம் தோன்றும்போது ஏற்பட்ட வெற்றிடம் எனவும், இந்தப்

பரந்த பிரபஞ்சத்தின் மையப் புள்ளியின் மீது நின்று தான் நடராஜர் இடைவிடாமல்

நாட்டியமாடிக் கொண்டு, ஐந்தொழில்களையும் செய்து வருகின்றார் எனவும்

சொல்கின்றனர். அவரோட ஆட்டம் நின்றால் அனைத்தும் முடிந்துவிடும்

1 comment:

  1. very good but i want to ask you one thing, why everybody showing yoga for every questions. there is something than it brother , try to find it too...best wishes.

    ReplyDelete