Sunday, July 29, 2012

ச' இல்லாமல் நீ ஒரு ஸ்லோகம்

<மகாபாரதத்தை ஸ்லோக வடிவில், வியாசர் சமஸ்கிருதத்தில் எழுதிய காலத்தில் "ச' என்ற அக்ஷரத்தை (எழுத்து) அதிகமாக பயன்படுத்தியிருந்தார். ஒருமுறை, கவிப்பேரரசர் காளிதாசர் ஒரு காட்டுவழியே சென்றார். வழியில் வியாசர் சிலை இருந்தது. தன் ஆட்காட்டி விரலை சிலையின் தொப்புளுக்குள் விட்டு குடைந்தபடியே. ""நீர் பெரிய "ச'காரப் பிரியராச்சே! உம்மைப் போய் பெரிய கவிஞன் என்கிறார்களே! "ச' இல்லாமல் உம்மால் ஒரு ஸ்லோகம் எழுதி விட முடியுமா என்ன!'' என்று கேலியாகக் கேட்டார். அவ்வளவு தான்! தொப்புளுக்குள் சிக்கிய விரல் வெளியே வரவில்லை. சிலை பேசியது. ஆம்...சிலைக்குள் இருந்து வியாசரே பேசினார். ""அடேய் புத்திசாலி! "ச' இல்லாமல் நீ ஒரு ஸ்லோகம் சொல்லு, அப்படியானால் தான் விரல் விடுபடும்,'' என்றார். ""இதென்ன பிரமாதம்...சொல்கிறேன்,'' என ஆரம்பித்தவரை தடுத்த வியாசர், ""ஏற்கனவே நீ மனதில் தயாராய் வைத்துள்ளதை ஏற்கமாட்டேன். நான் சொல்லும் விஷயத்துக்கேற்ற ஸ்லோகம் சொல் பார்க்கலாம்,'' என்றவர், ""திரவுபதிக்கு பஞ்சபாண்டவர்கள் எவ்வெப்போது என்னென்ன முறை ஆக வேண்டும், சொல் பார்க்கலாம்,'' எனக் கேட்டார். காளிதாசர் படுவேகமாக ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார். விரல் விடுபட்டது. வியாசர் அவர் முன் தோன்றி, ""நான் பாரதத்துக்காக ஒரு லட்சம் ஸ்லோகம் எழுதினேன். எழுதியவர் மகாகணபதி. ஆனால், இப்போது நீ சொன்னது போல, பாரதத்தில் ஒரு ஸ்லோகம் கூட அழகாக வரவில்லை,'' என்று பாராட்டினார். வியாசரையும் விட சிறந்த கவிஞர் காளிதாசர் என்பது இதிலிருந்து தெரிகிற விஷயம்.

No comments:

Post a Comment