Tuesday, September 11, 2012

8 வகை கிருஷ்ணர்கள்

.சந்தான கோபால கிருஷ்ணர்:யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 2.பாலகிருஷ்ணன்:தவழும் கோலம். பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம். 3.காளிய கிருஷ்ணன்:காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன். 4.கோவர்த்தனதாரி:கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம். 5.ராதா-கிருஷ்ணன்(வேணுகோபாலன்):வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன். 6.முரளீதரன்:இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன்,ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. 7.மதன கோபால்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன். 8.பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

No comments:

Post a Comment