Saturday, December 29, 2012

ஸ்ரீவித்யா உபாசனை: சிறு கண்ணோட்டம்.

ஸ்ரீவித்யா உபாசனை: சிறு கண்ணோட்டம்.
தெய்விக ஞானத்தைத் தேடும் ஸ்ரீவித்யா உபாசனையில் நான்கு நிலைகள் உள்ளன. 1) மந்திர சித்தி - மூலபீஜமந்திரங்களை உச்சாடனம் மூலம் அடைதல் 2) யந்த்ர சாஸ்திரம் - ஸ்ரீசக்கரம் போன்ற யந்த்ரங்களை பூஜித்து உபாசனை செய்தல் (மஹாமேரு, பிந்து தத்துவம், மஹத்துவம், நாற்பத்தி முக்கோணசித்தி). 3) தாந்திர சாஸ்திரம் - மந்திர உச்சாடனத்தில் நன்கு தேர்ச்சி பெற்று, மந்திரங்களை கைகளின் அசைவினால் (முத்திரை) வாய்மூலம் உச்சரிக்காமல் துரிததேவ ஆராதனை செய்தல் 4) யோக சாஸ்திரம்: புலன்கள், எண்ணம், சித்தவிருத்தி ஆகியவற்றை மன ஓய்வுக் கலை மூலம் அடக்கி யோக சித்தி பெறுதல். யோகமார்க்கத்தில் மந்திரசித்தியிலிருந்து ப்ரணவ சமாதிவரை 30 நிலைகள் உள்ளன. யோக சாதனையில், ஸ்ரீவித்யாமார்க்கமே உன்னதமான, சிறப்பான, பாதுகாப்பான வழிமுறை ஆகும்.
ஸ்ரீவித்யாயோக மார்க்கத்தின் இறுதிக்கட்டம் என்பது 36 தத்துவங்களைத் தாண்டுவதையே குறிக்கும். அவை உடல் தத்துவம் (1 முதல் 24),ஆன்ம தத்துவம் (25 முதல் 31), வித்யாதத்துவம் (32முதல் 36 வரை) ஆகும். 36ஆவது தத்துவம் ஆன்ம தத்துவம். யோகிகள் ஆன்மதத்துவத்தில் பல நாள்கள் தங்க நேரிடும். அதையும் தாண்டினால் அன்னையின் கிருபை.
சாதகன் குரு உபதேசம் பெற்று முறைப்படி இவற்றைச் செய்ய வேண்டும். அன்னையைத் துதிப்போம். அருள்பெறுவோம்.

1 comment:

  1. What is the meaning of Lalithambigai sitting on Shiva and also the meaning of five Murthy's sitting below the petam.

    ReplyDelete