பாஷாணம் என்றால் மருத்துவக் குறிப்புகளின் படி விஷத்தன்மை வாய்ந்த பொருள். வீரம், பூரம் என பல சித்த மருந்துகள் இப்படி உள்ளன. இவற்றை மற்றைய பொருட்களுடன் பக்குவமாகக் கலந்து சாப்பிடுவதற்கும், உடம்பில் பூசுவதற்கும் பல மருந்துகளை சித்தர்கள் கண்டுபிடித்தனர். சிற்ப சாஸ்திரத்தில் வண்டல் மண் சேற்றைப் புளிக்க வைத்து, பாஷாணங்களில் எட்டு பொருட்களைப் பக்குவமாகச் சேர்த்துப் பல மாதங்கள் ஊறவைத்த பின், அதனைக் கொண்டு விக்ரஹம் செய்யும் முறை கூறப்பட்டுள்ளது. இந்த முறையை "நவபாஷாணம்' என சித்த மருத்துவசாஸ்திரம் கூறுகிறது. "நவ' என்றால் "ஒன்பது' புளிக்க வைத்த வண்டல் சேறு மற்றும் எட்டு வகையான பாஷாணங்கள் சேர்ந்தது "நவபாஷாணம்' எனப்படும். இந்த முறையில் போகர் என்னும் சித்தர் வடிவமைத்ததே பழநியாண்டவர் விக்ரஹம். இங்கு அபிஷேகம் செய்த பால், பஞ்சாமிர்தம் ஆகியவை முருகனின் அருளோடு, நோய்களைப் போக்கும் மருந்தாகவும் ஆகிறது.
Thursday, June 13, 2013
"நவபாஷாணம்'

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment