Friday, June 14, 2013

ஆண்டு முழுவதும் வாழ்க்கை கரும்பாய் இனிக்கும்

அட்சய திரிதியை என்றாலே நகை, ஜவுளி, விதவிதமான உணவு வகைகள் என வீடுகள்தோறும் அசத்துவார்கள். ஜைனர்கள் அன்று கரும்புச்சாறு பருகுவார்கள். இதற்கு ஒரு கதை உண்டு.
ஆதிநாதர் என்ற ரிஷபதேவர் ஜைனமதத்தைச் சேர்ந்தவர். செல்வந்தரான இவர், அதை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டுத் துறவியானார். ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரர் இவரே. பசியெடுத்தால் கூட யாரிடமும் பசிக்கிறது என்று சொல்லமாட்டார். அவரைக் கண்ட மக்கள். ஒரு மகான் என தீர்மானித்து அவருக்கு பொன்னும்,பொருளும், விலையுயர்ந்த நவரத்தினங்களும் தானமாகத் தர முன்வந்தனர். ஆனால், அவருக்கு பசிக்கிறது என்பதை யாரும் உணரவில்லை. பசிக்கு உணவும் தரவில்லை. உடனடியாக ஆதிநாதர், ஒரு முடிவுக்கு வந்தவராக நிரந்தரமாக உண்ணாவிரதத்தில் அமர்ந்து விட்டார்.
ஒரு வருடம் ஓடிவிட்டது. ஆதிநாதரின் பேரனான "ஸ்ரேயன்சா குமாரா' அவரைக் காண வந்தான். தாத்தா பசியுடன் இருப்பதை புரிந்து கொண்ட அவன் ஒரு கோப்பைக் கரும்புச்சாற்றைக் கொடுத்தான். அதை அருந்திய ஆதிநாதர் தன் விரதத்தை பூர்த்தி செய்தார். அந்த நாள் அட்சய திரிதியை நன்னாளாக இருந்தது. இதன் நினைவாக, ஜைனர்கள் இந்நாளில் உண்ணாநோன்பு இருந்து, மாலையில் கரும்புச்சாறு பருகி நிறைவு செய்வர்.
இதன்மூலம் ஆண்டு முழுவதும் வாழ்க்கை கரும்பாய் இனிக்கும் என நம்புகின்றனர்

No comments:

Post a Comment