Friday, June 14, 2013

கருணை மிக்க கடவுள

தற்பெருமை மிக்க மன்னனின் நாட்டில், பார்வை இல்லாத கவிஞர் ஒருவர் இருந்தார். கவிதை எழுதுவதில் வல்லவரான அவரின் புகழ் நாடெங்கும்பரவியது. தன்னை விட அவருக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை அறிந்த மன்னன் பொறாமைப்பட்டான். அவரை அவமானப்படுத்த எண்ணி அரண்மனைக்கு வரவழைத்தான்.
""கவிஞரே! என் சந்தேகத்தை தீர்க்கவே அரண்மனைக்கு அழைத்தேன்.''
""நல்லது மன்னா! கேளுங்கள்,''.
""கடவுள் மனிதனுக்கு குறை ஏதாவது வைத்துவிட்டால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு நிறையையும் வைப்பார் என்பார்களே! ஆனால், உம் விஷயத்தில் அந்த உண்மை பொருந்தவில்லையே. பார்க்கும் சக்தியற்ற உமக்கு என்ன நிறை இருக்கிறது? கடவுளுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை?,''
""மன்னா! கடவுளைப் பழிக்காதீர்கள். அவர் கருணைமிக்கவர். எனக்கு அருளை வாரி வழங்கிஇருக்கிறார்...''
"" உமக்கு பைத்தியமா! உம் பார்வையைப் பறித்த கடவுள் கருணையே உருவானவர் என்றால் எப்படி நம்ப முடியும்?'' மன்னரின் கேள்விக்கு புலவர் பதிலளித்தார்.
""மன்னா! கருணை மிக்க கடவுளைப் பற்றி, நீங்கள் பேசுவதைக் காதால் கேட்பதே மனதிற்கு வேதனை அளிக்கிறது. கண்களால் வேறு உங்களைப் பார்த்து மேலும் வேதனைப்படக்கூடாது என்பதற்காகவே அந்தக் கடவுள் பார்வை தரவில்லை போலும்,''என்றார் கவிஞர். மன்னன் வாயடைத்து போனான்.

No comments:

Post a Comment