7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் திருமணம் நடக்கக் காரணமான கிரகமாக இருக்கிறது. இதில் சுக்கிரனுக்கும் முக்கிய பங்கு உண்டு. சுக்கிரன் கடகம், சிம்மம், ஆகிய வீடுகளில் பகையாகவும், கன்னி வீட்டில் நீசமாகவும் வருகிறார். இந்த வகையில் ஜாதகம் அமையப்பெற்றவர்களுக்கு சுக்கிரனால் திருமணதோஷம் ஏற்படும்.
இத்தகைய தோஷம் உள்ளவர்கள் உங்கள் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக் கிழமை விரதமிருந்து 27 வாரம் ராகு காலத்தில் நெய் விளக்கு போட்டு வர திருமண தோஷம் நீங்கும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமணஞ்சேரி சென்று, அங்குள்ள சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாளை வழிபட்டு வந்தால் 90 நாட்களில் திருமண தோஷம் நீங்கும்.
திருமண தோஷம் உள்ள பெண்கள் தங்கள் உறவுகளில் வயதுக்கு வராத கன்னியாக உள்ள சிறுமியை ஒரு வியாழக்கிழமை தங்கள் வீட்டிற்கு வரவழைத்து விருந்து கொடுத்து சந்தனம் மஞ்சள் வண்ண ஜாக்கெட் துணி ஐந்து மஞ்சள் கிழங்கு ,குங்குமம்,கண்ணாடி வளையல்கள் மல்லிகைப் பூ ஆகியவற்றோடு காணிக்கையும் ஒரு தட்டில் வைத்து கொடுக்க வேண்டும்
No comments:
Post a Comment