கோயிலில் தெப்பக்குளம் இருப்பதன் நோக்கம் என்ன?
திருக்குளம் என்ற பெயர் தான் முக்கியம். அதில் தெப்பம் விடுவதால் தெப்பக்குளமாகி விட்டது. திருக்குளம் அடிப்படையிலேயே சிந்திப்போம். ஒரு கோயிலில் மூல மூர்த்தியாக விளங்கும் தெய்வம் எப்படி முக்கியமோ, அதுபோலவே தீர்த்தம் (திருக்குளம்), தலவிருட்சம் ஆகிய இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் சிறப்பாக அமையும் கோயில் தான் க்ஷேத்திரம் என போற்றப்படும். இம்மூன்றுமே அத்திருக்கோயிலின் வரலாற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கும். திருக்குளத்தில் நீராடி, தெய்வத்தை தரிசித்து, தலவிருட்சத்தை வலம் வந்தால் தான் கோயில் தரிசனம் முழுமையடையும். ஒவ்வொரு கோயில் திருக்குளத்திற்கும் புராண வரலாற்றுச் சிறப்பு உண்டு. இதில் நீராடினால், இறையருளால் பாவம் நீங்கி மங்களமாக வாழலாம் என்பது திண்ணம். எவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு வந்தாலும் திருக்குளங்கள் பெரும்பாலும் வற்றுவதில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு இதுவே ஒரு வரப்பிரசாதம் தானே

No comments:
Post a Comment