Thursday, August 22, 2013

கூரை பிய்ந்து பணம் கொட்ட என்ன செய்வது?

கூரை பிய்ந்து பணம் கொட்ட என்ன செய்வது?
 
-
 
*உதவி செய்ய விரும்பினால், அதை நல்லொழுக்கம் கொண்டவர்க்கே செய்ய வேண்டும். தீயவர்களுக்குச் செய்யும் உதவி நமக்கே கெடுதலாக அமைந்துவிடும்.
*மனைவி செய்யும் தவறு கணவரைச் சேரும். அதுபோல, மக்கள் செய்யும் தவறுக்கு அரசாங்கம் தான் பொறுப்பு. நிர்வாகச் சீர்கேடுகளை தடுத்து நிறுத்தவேண்டிய கடமை அதிகாரிகளுக்கே உண்டு.
*விண்ணில் எங்கோ இருக்கும் நிலவின் குளிர்ந்த ஒளி பட்டு சிவந்த அல்லி மலர்கள் மலர்வது போல, அன்பு காட்டும் தலைவர்கள் எவ்வளவு தூரத்தில்இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.
*சந்தனமரம் தன்னைத் தியாகம் செய்து மற்றவருக்கு நறுமணம் வழங்குவது போல, நற்குணம் கொண்டவர்கள் தன் குடும்பத்திற்காக தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள்.
*கண்களுக்கு அழகு தருவது கருணை நிறைந்த பார்வை. தாட்சண்யம் இல்லாத கண்கள் பயனற்றவை. கால்களுக்குப் பெருமை தீயவழியில் நடைபோடாமல் இருப்பதாகும்.
*உலக வாழ்வில் கொண்டுள்ள ஆசையில் ஆயிரத்தில் ஒருபங்கை ஆண்டவனுக்குச் செலுத்தினால் கூட மனித வாழ்வு பயனுள்ளதாகி விடும்.
*மக்கள் குறை தீர்ப்பது நல்ல ஆட்சியாளரின் அடையாளம். கல்வி கற்றதன் பயன் கற்ற வழியில் நல்ல ஒழுக்கத்துடன் நடப்பதாகும். ஒருவருக்குஒருவர் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்வது குடிமக்களின்கடமையாகும்.
*கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு பணத்தைக் கொட்டும் என்பார்கள். இந்தவாக்கியத்தை தவறாகப் புரிந்து கொண்டு சோம்பேறியாகத்திரியக்கூடாது. உழைக்க மறுப்பவனுக்கு ஒருபோதும் செல்வம் சேராது.
*செய்த தானதர்மத்தைப் பிறர் பெருமையாகக் கருத வேண்டும் என்றஎண்ணத்துடன் பிறரிடம் சொல்வது கூடாது.
*நண்பனைப் போல நடித்து ஏமாற்றும் நயவஞ்சகனை விட, நேருக்கு நேர் மோதத் தயாராகும் எதிரி நல்லவன்.
*அதிக படிப்பு, செல்வம், செல்வாக்கு பெற்றதை எண்ணி கர்வம் கொள்பவர்கள் அற்பமானவர்கள். இவை மூன்றும் நல்லவர்களிடம் இருந்தால்உலகிற்கே நன்மை உண்டாகும்.
*பாலுக்கு சர்க்கரைபோதவில்லை என்பான் செல்வந்தன். சோறுக்கு உப்பில்லையே என்றுஅழுவான் ஏழை.மனக்கவலை என்பது உலக மக்களுக்கு பொதுவானதாகும்.
*தண்ணீருக்குள் இருக்கும் முதலை, காட்டானையைக் கூட கவ்விக் கதற வைத்துக் கொன்றுவிடும். கரைக்கு வந்து விட்டால் பூனையைக் கூட பிடிக்க முடியாது. இதைப் போல மனிதர்கள் பலர் பணம், பதவி பலத்தால் ஆட்டம் போடுகிறார்கள்.
*எடுத்துக் கொண்ட செயலில் கண்ணும் கருத்துமாக இருந்து குறிக்கோளை எட்டுபவனே லட்சியவாதி.
*நாளை நாளை என்று நாட்களை ஒத்தி போடுவது கூடாது. வாழ்க்கை நிலையில்லாதது. இருக்கிறபோதே செய்ய நினைத்ததை உடனே செய்து விடுவது நல்லது.

No comments:

Post a Comment