Thursday, August 22, 2013

வாசலில் படிகாரக்கல்லை கட்டி தொங்கவிடுவது ஏன்?

பொறாமை, பேராசை, விரோதம் போன்ற தீய எண்ணங்களுடன் பிறர் நம்மை பார்க்கும்போது திருஷ்டிதோஷம் உண்டாகிறது. இதற்காக வீடுகளில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சூடம் சுற்றி கண்ணூறு கழிப்பதுண்டு. சிலர் தோஷம் நீங்க வாசலில் படிகாரக்கல்லைக் கட்டவும் செய்வர். படிகாரம் என்பது அழுக்கை நீக்கும் ஒன்று. பொறாமைப் பார்வையையும் நீக்கி நற்பார்வைகளை மட்டும் வீட்டுக்குள் அனுப்பும் என்ற நம்பிக்கை உள்ளதால் இந்த ஏற்பாடு

No comments:

Post a Comment