Sunday, October 20, 2013

கங்கையை விடப் புனிதம் மிகுந்தது காவிரி

கங்கையை விடப் புனிதம் மிகுந்தது காவிரி என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட காவிரியின் பெருமையைப் பற்றி, அகத்திய முனிவர் அரிச்சந்திரனுக்குச் சொன்னார். அப்படி அவர் சொல்லும்போது, ஏராளமான முனிவர்களும் அங்கே இருந்து கேட்டார்கள். அவர்களின் பெயர்களை எல்லாம் ஸ்ரீ துலா புராணம் சொல்கிறது. தவத்தில் சிறந்த அந்த மாமுனிவர்களின் பெயர்களை...ப் படிக்கும் புண்ணியமாவது நமக்குக் கிடைக்கட்டுமே! எந்த முனிவரின் பரம்பரையில் (கோத்திரத்தில்)பிறந்தோமோ அவர் பெயரும் இங்கே இடம் பெற்றிருந்தாலும் இடம் பெற்றிருக்கலாம்.
மங்கணர், அத்திரி, துர்வாசர், காசியபர், பிருகு, வீதிஹோத்ரர், வசிஷ்டர், வாமதேவர், ஜபாலி, கண்வர், மார்க்கண்டேயர்,விஸ்வாமித்திரர், காலவர், சாதாதபர், வியாசர், பராசரர், பைலவர், கௌதமர், பரத்வாஜர், உபயாஜர், யாஜர், அஸிதர், சதானந்தர், அகஸ்தியர், சுதீக்ஷணர், ஜாது கர்ணர், வால்மீகி, அஸிதர், சதானந்தர், கவஷர், மௌத் கலர், முக்தர், கவிமது ஹாச்ரயர், மண்டவ்யர், காந்தர், நாரதர், ஆசுரி, சத்யதபஸ், மதங்கர், சத்யவிரதர், பப்ரு, மரீசி, யக்ஞராசி, ஆபஸ்தம்பர், ஆஸ்வாலாயனர், கெனரர், புலகர், புலஸ்தியர், மருக்ரது, யாக்ஞ வல்கியர், யக்ஞகேது, போதாயனர், லிகிதர், சங்கர், ஜலப்லவர், தூமகேது, ஹேரதா, தௌம்யர்.
இவ்வளவு உத்தமர்களும் கேட்ட காவிரியின் பெருமையை நாமும் பார்க்கக்கூடிய புண்ணியம் கிடைத்திருக்கிறது. அகத்தியர் சொன்னது இதோ: புண்ணிய நதிகள் எல்லாம், ஐப்பசி மாதத்தில் வந்து காவிரியில் கலக்கின்றன. ஆகவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடினால், புண்ணிய தீர்த்தங்கள்
எல்லாவற்றிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கும்; முக்தியும் கிடைக்கும். தந்தை வழியில் ஏழு தலைமுறையினருக்கும், தாய் வழியில் ஏழு தலைமுறையினருக்கும் இப்போது நீராடுபவர்க்கும் சேர்த்து வைகுண்டம் கிடைக்கும்.
அப்படிக் காவிரியில் நீராடும்போது, இரண்டு கைகளாலும் ஏராளமான பூக்களை எடுத்து காவிரியில் சமர்ப்பித்து பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்யும் ஸ்ரீரங்கநாதரையும் மனதால் வணங்கி, நீராட வேண்டும். ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராடுவதாக சங்கல்பம் (தீர்மானம்) செய்பவர்கள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் உண்டு. அவை: பகலில் தூங்குவது, எண்ணெய் தேய்த்து நீராடுவது, ஷேவிங் மற்றும் முடிவெட்டிக் கொள்வது, தாம்பூலம் போடுவது, வீண் பேச்சு, ஆண்-பெண் சேர்வது, பாய்-மெத்தையில்படுப்பது, தானம் வாங்குவது, சாப்பிடக் கூடாதவைகளைச் சாப்பிடுவது, ஓட்டலிலோ அல்லது வெளியிலோ சாப்பிடுவது ஆகியவற்றைச் செய்யக் கூடாது.
அடுத்து, உணவு வகைகளில் விலக்க வேண்டியவை
எருமைப்பால், பழையது, முருங்கைக்காய்,சுரைக்காய், சிறுகீரை, தினை, கேழ்வரகு, துவரை, உளுந்து, கொள்ளு, மொச்சைக் கொட்டை, கத்தரிக்காய், பூசணிக்காய். இரவு உணவு, காலை சந்தி - மாலை சந்தி ஆகிய நேரங்களில் உணவு உண்ணக் கூடாது. பயப்பட வேண்டாம். இயன்றவரை கடைபிடித்து நீராடினாலும் பலன் உண்டு.

No comments:

Post a Comment