Monday, August 25, 2014

ஹோமத்தில் பசு நெய் :

கோயில்களிலும், வீடுகளிலும், திருமணம் போன்ற வைபவங்களின் போதும் செய்யும் ஹோமங்களின் போது, அதில் பசு நெய்யை விடுவார்கள்.
ஹோம குண்டங்களில் இடப்படும் பொருட்கள் எந்த தெய்வங்களுக்குரிய மந்திரத்தை உச்சரிக்கிறோமோ, அந்த தெய்வத்தை சென்று அடைகிறது என்பது ஐதீகம்.
ஆனால், அதை நாத்தீகர்கள் பலரும் குறை கூறுவது உண்டு. அதனால், ஹோமத்தில் விடப்படும் நெய் பற்றி அறிவியல் சொல்லும் சில உண்மைகளையும் இங்கே வெளியிடுகிறோம்.
அதாவது, பசுநெய்யை ஹோமத்தில் விடும் போது, அதனால், காற்றில் உள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் போடுவதால், அதில் இருந்து அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல் தொடர்பான நோய்கள் என பல நோய்களை தீர்க்கும் சக்தி பெற்றுள்ளவையாக இருக்கின்றன.
ஒரு வகையில், ஹோமத்தில் பசு நெய்யை விடுவது ஆன்மிக ரீதியாக பலனுண்டு என்பது போல அறிவியல் ரீதியாகவும் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதே உணமை

No comments:

Post a Comment