Monday, August 25, 2014

சிவாலய தரிசன விதிமுறை

சிவாலய தரிசன விதிமுறை
1,ஆலய தரிசனம் செய்வோர் நீராடி,தூய உடை அணிந்து திருநீறு, உருத்திராக்கம் போன்றவை அணிந்து கொண்ட செல்ல வேண்டும்
2,வெற்றிலை,பாக்கு,பழம்,தேங்காய்,மலர்கள் முதலிய வழிபாட்டுப்
பொருட்களைக் கொண்டு போகலாம்
3,முதலில் ஆலய கோபுரத்தை வணங்க வேண்டும்
4,உள்ளே சென்று,கொடி மரத்தின் முன்னே, ஆண்கள் தலை மோவாய்
இருகைகள் இரபுயங்கள்,ழுழந்தாளிரண்டு ஆகிய எட்டும் நிலத்தில் படுமாறு-(அஷ்டாங்க நமஸ்காரம்) வண்ஙக வேண்டும்
பெண்கள்,தலை இரகைகள்,இரு ழுழங்கால்கள் ஆகிய ஜந்தும் நிலத்தில்
படுமாறு(பஞ்சாங்க நமஸ்காரம்)வணங்க வேண்டும்
5,கொடி மரத்தின் எதிரில் வணங்கிய பின் நந்தி தேவரிடம் விடைபெற
வேண்டும்(மானசீகமாக விடைபெறுதல் மிக அவசியம்)
6,ந்நிதி தேவரிடம் விடை பெற்றுக் கொண்ட பிறகு விநாயகரை சிவபெருமானை ஜந்து முறையும் வலம் வந்து வணங்க வேண்டும்
7,சமயாச்சாரியர்கள்,அம்பாள்,நடராசப் பெருமான்,பிற தெய்வங்கள்
யாவற்றையும் வணங்கிவிட்டு,இறுதியாக சண்டேசுவர நாயனாரை அடைந்து
மும்முறை கைகளால் தாளமிட்டு,சிவதரிசனப் பலனைத் தந்தருளும்படி வேண்டுதல் அவசியமாகும்
8,சண்டேசுவர நாயனாரிடம் சிவதரிசனப் பலனைப் பெற்ற பிறகு கொடி மரத்தின் அருகில் வடக்கு முகமாக அமர்ந்து திரு ஜந்தெழுத்தை
(ஒம்சிவாய நம) 108முறை தியாத்தல் வேண்டும்
9,இறுதியாக பைரவரை வணங்கி சிவச் சொத்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என்று உறுதி கூறி கோயிலை விட்டு வெளியே வருதல் வேண்டும்
அன்றாடம் திருக்கோயில் செல்ல முடியாதவர்கள் குறிப்பிட்ட புண்ணய
நாட்களிலாவது அவசியம் சென்று வணங்க வேண்டும் கட்டாயமாக சிவத்தல யாத்திரைகளை மேற் கொள்ள வேண்டும்
இப்படி சிவபுண்ணியம் பெற விரும்பும் சைவப் பெருமக்கள் துலய தரிசனத்துடன் நின்றுவிடக் கூடாது எல்லா வித வழிபாட்டின் சாரமாவது
தூய உள்ளத்துடன் பிறருக்கு நன்மை செய்வதே ஆகும் ஏழை எளிய மக்கள் நோயுற்றவர்கள் அகியவர்களிடம் கடவுளை கண்டு அவர்கட்க்குச் சேவை செய்து உதவி செய்கின்றவர்கள்தான் சிவபெருமானின் இன்னருளுக்குப் பாத்திரமாகிறார்கள் சிவபெருமானின்
சேவை செய்ய விரும்புகிறவர்கள் அவருடைய படைப்புக்களாகிய உலகில்
உள்ள எல்லா ஜீவராசிகட்கும் சேவை செய்ய முற்பட வேண்டும்
சுயநலமின்மையே உண்மையான சமயப்பற்றுக்குச் சான்றாகும் ஒருவன்
எவ்வளவுக்குத் தன்னலமின்றிப் பிறருக்கென வாழ்கிறானோ அந்த அளவிற்கு அவன் ஆத்ம ஞானம் பெற்றுச் சிவபெருமான் அருகே இருக்கும் அருகதை யுள்ளவனாகிறான் அப்படியின்றி சுயநலமிக்க ஒருவன் எல்லா ஆலயங்கட்கும் சென்று அபிடேகம் ஆராதனை
செய்திருப்பினும்,அவன் சிவபெருமானை விட்டு வெகுதூராம் விலகியுள்ளவனே ஆகிறான் என்பது விவேகானந்த சுவாமிகளின் அருள்
வாக்காகும் எனவே கடவுளை வணங்கும் நாம் அனைவரும் மிகுந்த கருனை உடையவர்களாக இருத்தல் வேண்டும் கருணையால் மட்டும்
கருணாகரக் கடவுளை அடையலாம் அல்லது வேறு வழி இல்லை
சிவாலயங்களில் செய்யத்தகாதன
1,குளிக்காமல் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது
2,மேல் வேட்டி,சட்டை முதலிய அணிந்த செல்லக் கூடாது
3,வெற்றிலைபாக்கு அருந்துதல் எச்சில் துப்புதல் மலசலம் கழித்தல் முக்கு நீர் சிந்துதல் கூடாது
4,சிரித்தல் சண்டையிடுதல் வீண் வார்த்தைகள் பேசுதல் உறங்குதல் கூடாது
5,சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் குறுக்கே செல்லுதல் கூடாது
6,பலி பீடத்திற்கும் இறைவன் சன்னிதிக்கும் இடையே போதல் கூடாது
7,அபிடேகம் நடந்து கொண்டிருக்கும் போது உட்பிரகாரத்தில் வலம் வருதல் கூடாது
8,வழிபாட்டை அவசர அவசரமாக நிகழ்த்துதல் கூடாது
9,சுவாமிக்கு நேராகக் காலை நீட்டி வணங்குதல் கூடாது
10, ஈரமான ஆடை அணிந்து செல்லுதல் மயிர்கோதி முடித்தல் கூடாது
11,காலணி குடை முதலியன பெற்றுச் செல்லக் கூடாது  

No comments:

Post a Comment