Tuesday, September 2, 2014

ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம்:-

ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம்:-
ஸ்ரீ லட்சுமி சங்கு எனப்படும் வலம்புரிச் சங்கை வீட்டிற்குக் கொண்டுவந்து அதைக் கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி நமது வீட்டில் என்றும் இருந்து நமக்கு நன்மைகள் தரப் பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.
‘ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீதர 
கரஸ்தாய பயோநிதி ஜாதய 
ஸ்ரீதக்ஷ்ணாவர்த்த சங்காய 
ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ கராய பூஜ்யாய நமஹ’
நாம் வாங்கி வந்த சங்கை ஒரு நதிநீரை விட்டு சுத்தமாகக் கழுவி மஞ்சள் சந்தனம்> குங்குமம்> புஷ்பங்கள் ஆகியவற்றால் அலங்கரித்து தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி மேற்கூறிய மந்திரத்தை 11 முறைகள் சொல்லி வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பெரிய பூஜா முறைகள் எதுவும் செய்யாவிடினும் கூட தினமும் ஒரு ஊதுபத்தியாவது காட்டி மேற்கண்ட ஸ்துதியை இயன்ற அளவு சொல்லி வணங்கி வரலாம்.!

No comments:

Post a Comment