Friday, April 15, 2011

எப்போதெல்லாம் ஜபிக்கக் கூடாது?

எப்போதெல்லாம் ஜபிக்கக் கூடாது?

பேருந்து,ரயில்,விமானப்பயணத்தின் போதும்,சைக்கிள்,மோட்டார் சைக்கிள் வாகனப்பயணத்தின்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
தெருவில் நடந்துசெல்லும்போதும்,சாலையில் நடந்து செல்லும்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.அப்படி மீறி ஜபித்தால்,தடுமாறி கீழே விழுந்துவிடுவோம்.ஒருவேளை,வீம்புக்கென்று தொடர்ந்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,சில நாட்கள் கடந்தபின்னர்,விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
பிரசவ மருத்துவமனை,பிணவறை,மற்ற எந்த மருத்துவமனையிலும்,சுத்தமில்லாத எந்த இடத்திலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
வீட்டில் யாராவது அசைவம் சாப்பிட்டுவிட்டால்,அவர்கள் தூங்கும் அறையில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

குடும்பத்தோடு அசைவம் சாப்பிட்டுவிட்டால்,அன்றுமுதல் மூன்று நாட்களுக்கு அந்த வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

குடும்பத்தில் வயதானவர்கள் யாராவது இறந்துவிட்டால்,அந்த வீட்டில் குறைந்தது ஒரு மாதம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
துக்க வீடுகளுக்குச் சென்றால்,குறைந்தது ஐந்துநாட்கள் வரையிலும்,பிரசவம் ஆனவீடுகளுக்கு குழந்தை பிறந்த பத்துநாட்களுக்குள் சென்றால் ஐந்து நாட்கள் வரையிலும் சென்றவர் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
வீட்டில்,வீடு போன்ற அமைப்பில்,எதாவது ஒரு சுத்தமான விரிப்பில் அமர்ந்து மன அமைதியோடு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த ஓம்சிவசிவஓம் ஜபித்து முடியும் வரையிலும் யாரிடமும் பேசாமலிருப்பது அவசியம்.

கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும் ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்

கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும் ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்

ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே

நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே:

வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே

ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம:

தினமும் 30 நிமிடம் வீதம் முழு ஆண்டு முடியும் வரையிலும் அல்லது 90 நாட்களுக்கு வீட்டுப்பூஜையறையில் இதை ஜபித்து வர வேண்டும்.கல்வியில் பின் தங்கியுள்ள மாணவ மாணவியர் இதை ஜபிக்க கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்

தினசரி ஆன்மீகக் கடமைகள்

தினசரி ஆன்மீகக் கடமைகள்

நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு,அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர்,உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும்,மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும்,இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.
எந்த வீட்டினுள் நுழைந்ததும்,துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ,நறுமணம் கமழுகிறதோ,அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.
எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்றதோ,வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி விடப்படுகிறதோ,பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ,அங்கெல்லாம் செல்வம் குவியும்.
எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள் பேசப்படாமலிருக்குமோ,எங்கெல்லாம் விட்டுக்கொடுத்தலும்,இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.எந்த வீட்டில் நிர்வாணமாக குளிக்காமலும்,நிர்வாணமாக தூங்காமலும் இருக்கிறார்களோ,கணவனின் காமத் தேவைகளை மனைவியும்,மனைவியின் காமத் தேவைகளை கணவனும் மறுக்காமலும்,வெறுக்காமலும் நிறைவேற்றுகிறார்களோ அங்கே செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

நோய்களைத் தீர்க்க அருளும் தன்வந்திரிபகவானின் மந்திரங்கள்

தந்வந்தரி பகவான்
தந்வந்தரி பகவான் ஸ்ரீ விஷ்ணூவின் அம்சம். பகவானுக்கும், தேவர்களுக்கும் நமக்கும் வைத்தியர். ஆயுர் வேத சிருஷ்டி கர்த்தா நமக்கும் நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க வல்லவர். அவரை தியானித்தால் சகல வியாதிகளும் நீங்கும்.

நோய்களை தீர்க்கும் மந்திரம்:

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய
ஸர்வாமய நாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:

த்யான ஸ்லோகம்

சங்கம் சக்ர முபர்யதஸ்சக்ரயோர்
திவ்யௌஷதம் தக்ஷிணே
வாமேநாத்யகரேண ஸம்ப்ருத
ஸுதா கும்பம் ஜலுகாவளிம் /

பிப்ராண: கருணாம்ருத ஸூகசுர:
ஸர்வாமய த்வம் ஸக:
க்ஷிப்ரம் மே துரிதம் சிநந்து
பகவான் தந்வந்தரி : பாது ந :

.நமது முயற்ச்சியின் வெற்றி, .நம் குழ.ந்தைகள் படிப்பில் முன்னேற்றம், வேலையில் முன்னேற்றம் மற்றும் எடுத்த காரியம் வெற்றியடைய ஹயக்ரீவ பகவான் எப்போதும்.நமக்கு அருள் பாரிப்பார்.

ஸ்ரீ:

ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே //

வ்யாக்யாமுத்ராம் கரஸரஸிஜை: புஸ்தகம் ஸங்கசக்ரே
பிப்ரத் பிந்நஸ்படிகருசிரேபுண்டரீகே நிஷண்ண : /
அம்லாநஸ்ரீ அம்ருத விஸதை: அம்ஸூபி: ப்லாவயந்மாம்
ஆவிர்பூயாதநக மஹிமா மாநஸேவாகதீஸ :

ஏன் தியானம் செய்ய வேண்டும்?

தியானம் என்றால் என்ன?

பூஜைக்கோடி சமம் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரக்கோடி சமோ ஜெப:

ஜெபக்கோடி சமம் தியானம்

தியானக்கோடி சமோ யை:

 உத்திர கீதை

விளக்கம்:கோடி பூஜைகள் ஒரு ஸ்தோத்திரத்திற்குச் சமம்!
கோடிஸ்தோத்திரங்கள் ஒரு ஜெபத்திற்குச் சமம்!!
கோடி ஜெபங்கள் ஒரு தியானத்திற்குச் சமம்!!!
கோடிதியானங்கள் ஒரு லயத்திற்கு(மோட்சம்) சமம்!!!
எனவே,நாம் அனைவரும் தினமும் தியானம் செய்வோம்!!!

பிரம்மஹத்தி தோஷத்தின் முழுப்பரிமாணம்

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?

1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து செய்யாமல் இருத்தல்

2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது

3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது

4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது

5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது

6.உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது(ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்

2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்

3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்

4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்

5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது

6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்

Wednesday, April 13, 2011

கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம் செய்யும்

கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம் செய்யும்

விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள். எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு உணவிட வேண்டிய பொறுப்பிலும் இருக்கிறாள் அவள்.

தீயவற்றை அழித்தவள் நல்லவற்றை வளர்க்க வேண்டும் அல்லவா. எனவே தான் அரிசி மாவில் கோலமிடுகிறாள். இப்படி சாணம் தெளித்து கோலமிட்டால் அந்த இல்லத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்கிறது சாஸ்திரம்.

எப்படி போடுவது?
கணவன் வீட்டை விட்டு போகும் முன்பு போடவேண்டும். வேலைக்காரர்களை வைத்து போடக்கூடாது. கோலத்திற்கு காவியும் தீட்டினால் ‘ அங்கு பகவானும், லட்சுமியும்’ எழுந்தருள்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம்.

சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது ஒற்றைக் கோடு ஆகாது. அசுப காரியங்களுங்கு இரட்டை கோடு கோலம் போடக்கூடாது. இதை இலைக்கோலம் போடும் போடு கவனத்தில் கொள்ள வேண்டும். அரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும் என்பது நியதி. ஆனால் தற்போது சுண்ணாம்பு பவுடர் முதல் பலவித வண்ணங்களிலும் கோலமிடுவது நாகரீகமாகி விட்டது.

யோகாசனம்?

குனிந்து பெருக்குதல், கோலமிடுதல் எல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியதாகும்.

எனவே தினமும் வாசல் தெளித்து கோலமிட்டு மகாலட்சுமியை வரவேற்பதோடு, ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுப்போம்.

Sunday, April 10, 2011

கூடா நட்பு கேடு தரும்!

 கூடா நட்பு கேடு தரும்!
ஒரு குளக்கரையின் அருகில் இருந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது.


ஒருநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து கட்டிக்கொண்டது.
அப்போது மேலே பறந்து கொண்டிருந்த பருந்து ஒன்று இவைகளைப் பார்த்து கொத்த வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது.

தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து
கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.

அந்த சமயம்...தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைப் கண்ட பருந்து கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது.

அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது. இரண்டு விருந்து கிடைத்த சந்தோசத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது.  
நாம் அறியும் நீதி
நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும். இல்லையேல் தவளைக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் ஏற்படும்.

மஞ்சளின் பெருமை

மஞ்சளின் பெருமைஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவசியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு.
பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு,
குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்’ பூசப்படுகிறது.

அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.

மஞ்சளின் மருத்துவ குணம்

நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை.

மஞ்சளின் முக்கியத்துவம்:

இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.

சமையலில் மஞ்சளின் பங்கு
இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.

அழகு சாதனப் பொருள்

வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர்.

இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்’சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

நோய் தீர்க்கும் அருமருந்து மஞ்சள்

* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.

* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.

* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.

* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.

* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.

* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

Wednesday, April 6, 2011

இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனவே. அவற்றுக்கு ஒரே ஜாதகங்கள் இருக்குமா?

இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனவே. அவற்றுக்கு ஒரே ஜாதகங்கள் இருக்குமா?
இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனவே. அவற்றுக்கு ஒரே ஜாதகங்கள் இருக்குமா? அல்லது லேசாக வேறுபடுமா?இரட்டை குழந்தைகளுக்கு ஒரே ராசிக் கட்டம் அமையும். ஆயினும். பாவம், சப்தாம்சம், அஷ்டாம்சம், நவாம்சம் ஆகியன மாறுபடும்.
அஷ்ட வர்க்க பரல்களைப் பார்க்கும்போதும் இரு பிள்ளைகளுக்கும் பரல்களின் எண்ணிக்கை வித்தியாசப்படும்.
அதனால்தான் ஒத்த உருவமுள்ள இரட்டையர்களாக இருப்பினும் கல்வி, குணம், அவர்களுக்கு ஏற்படும் நோயின் தன்மை, வாழ்க்கைத் துணை அமைதல், குழந்தை பிறப்பு, ஆயுள் ஆகியன மாறுபடும்.
ராசிக்கட்டத்தில் ஒரே லக்னம், ஒரே நட்சத்திரம், ஒரே ராசி அமைவதால் அவர்களுக்கு ஒத்த இயல்புகள் சார்புத் தன்மை, உதாரணத்திற்கு... அவளுக்கு 2 இட்லின்னா எனக்கும் 2 இட்லி போதும், அவளுக்கு எடுத்த அதே நிற ஆடையை எனக்கும் எடுத்துக் கொடு என்பது போன்ற ஒரே மாதிரியான பிரியங்களைப் பார்க்கலாம்.10 மணி 1 நிமிடத்திற்கு முதல் குழந்தையும், 10 மணி 03 நிமிடத்திற்கு இரண்டாவது குழந்தையும் பிறக்கின்றன. இந்த இரண்டு நிமிட இடைவெளியைத்தான் ராசிக் கட்டத்தை உடைத்து மிகத் துல்லியமாக அந்த சப்தாம்சம், நவாம்சம், அஷ்டாம்சம் என கணக்கிட்டு பலன்கள் கூறுகிறோம்.

கோ பூஜை, கஜ பூஜை எதற்காக செய்யப்படுகிறது?

கோ பூஜை, கஜ பூஜை எதற்காக செய்யப்படுகிறது?

பூர்வ காலங்களில் பார்க்கப் போனால் துறவிகள் விரும்பி செய்யும் பூஜை கோ பூஜை. சங்கர மடம், அரவிந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்சர், விவேகானந்தர் என அனைத்து துறவிகளும் செய்தது கோ பூஜை.
பசுவிற்குள் தேவர்களும், மூவர்களும் இருப்பதாக ஐதீகம். தேவலோகப் பசுவின் படத்தை எடுத்துப் பார்த்தால் அதில் வாலிற்குப் பின் லட்சுமி இருப்பது போல் இருக்கும். அதனால்தான் இன்றும் பசுவின் வால் பகுதியை தொட்டுக் கும்பிடும் வழக்கம் நம்மிடம் உள்ளது.
பசு மாட்டின் குளம்பு முதல் கொம்பு வரை தேவர்களும், மூவர்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அறிவியல் பூர்வமாகப் பார்க்கப் போனால், பசுவின் கோமியம் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. சாணமும் அவ்வாறுதான். பாலும் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடிய அளவிற்கு உள்ளது.
மற்ற மிருகங்களின் பால் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும்படியாக இல்லை. கழுதையின் பால் வேண்டுமானால் மருத்துவத்திற்காக ஒரு பாலாடை அளவிற்கு மட்டுமே கொடுக்கும் படியாக உள்ளது. எனவே தினசரி குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவிற்கு பசும் பால் உள்ளது.
மேலும், சைவமாக இருப்பதாலும், சாதுவாக இருப்பாலும், நமக்குப் பயன்பாடாக இருப்பதாலும் அதனை நாம் உடன் வைத்திருக்கிறோம்.
பிரம்மஹத்தி தோஷம்!
எவ்வளவு பெரிய பிரம்மஹத்தி தோஷம் இருந்தாலும் பசுவைத் தானமாகக் கொடுத்துவிட்டால் அந்த தோஷம் எல்லாம் விலகும் என்று அதர்வன வேதங்கள் சொல்லி இருக்கிறது.
ராஜ ராஜ சோழன், சில பிராமணர்கள் உளவாளிகாளாக இருந்த காரணத்தால் அவர்களை தண்டித்தான். அதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதற்கு பரிகாரமாக பொன்னால் பசு செய்து அதற்குள் நுழைந்து வெளியே வந்து அந்த பொன் பசுவை தானமாகக் கொடுத்ததால் அவனது பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அதன்பிறகுதான் அவன் பெரிய கொடிய நோயில் இருந்து விடுபட்டதாக கூறும் சான்றுகள் உள்ளன.
ராஜ ராஜ சோழன், எல்லாக் கலைகளிலும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டார். அதுபோலத்தான் பரிகாரப் பூஜைகள் எல்லாம் பார்க்கப் போனால் தேவர்கள், மூவர்கள் பின்பற்றிய பூஜைகள் எல்லாம் ராஜ ராஜ சோழன் மூலமாகத்தான் உயிர்த்தெழுந்தது.
அப்போது கோ பூஜை என்பது மிக முக்கியத்துவம் பெற்று இருந்தது. தங்க பசுவின் வாய்ப் பகுதி வழியாக நுழைந்து வால் பகுதி வழியாக வெளியே வந்து அதனை தானமாகக் கொடுக்கும் பரிகாரத்தை ராஜ ராஜ சோழன் பல கோயில்களில் செய்துள்ளான்.
குறிப்பாக நண்டானூர் என்ற இடத்தில் இருக்கும் கற்கடேஸ்வரர் கோயிலில் (நண்டு சிவனை வழிபட்ட இடம்) இந்த பரிகாரத்தை ராஜ ராஜ சோழன் நிறைவேற்றியுள்ளான். அதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில இருந்து நீங்கியுள்ளான்.
ஆனால் சாதாரண மக்கள் இதுபோன்று பொன்னால் பசுவை செய்ய இயலாது என்பதற்காகத்தான் அகத்தீக் கீரையை பசுவிற்கு கொடுக்கிறார்கள். அகத்திக் கீரையைக் கொடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடும். எல்லா விதமான தோஷங்களும் கோ பூஜை செய்வதன் மூலமாக நீங்கி விடுகிறது.
கோ பூஜை என்பது, பொய் சொல்வதால் ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யும். உடலால் செய்யும் கொடுமையால் ஏற்படும் தோஷம், காம இச்சையைக் கட்டுப்படுத்தும் சக்தி அல்லது காமத்தால் அத்துமீறி செய்த பாவங்கள் போன்றவற்றை இந்த கோ பூஜை நீக்கும். அதனால்தான் கோ பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
அதனால்தான் அரசன் இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தால் லாயத்தில் குதிரை கட்டி இருப்பது போன்று, துறவிகள் இருக்கும் மடத்திற்குள் நுழைந்தால் பசு இருக்கும் காட்சியும் காணப்படும்.
பொய் சொல்லாமல் இருக்க முடியாது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பொய் சொல்லலாம். அரசு ரகசியங்கள் போன்றவற்றை மறைப்பதற்காக பொய்களை சொல்கின்றனர். அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களை நீக்கும். குறிப்பாக உடலில் ஏற்படும் நோய்களை கோ பூஜை நீக்கும். மிகவும் குறிப்பிட்டு சொல்வதென்றால் மன உளைச்சல், ஒவ்வொமையால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை நீக்கும்.
மாடு தொழுவத்தை பெருக்கி, சாணம், கோமியம் குழைந்து இருப்பதை தோலில் பூசினாலே பல தோல் நோய்கள் தீர்கின்றன.
ரமணரை ஒருவர் பார்க்க வந்திருந்தார். அவருக்கு தோல் வியாதி. எங்கெங்கோ சென்றும் குணமாகவில்லை. அவர் பெரிய தொழில் அதிபர். அவர் பல்வேறு பாவ செயல்களையும், பலரை காயப்படுத்தியும் உள்ளார். அதனால்தான் இந்த தோல்வியாதி என்று கூறி அவரை மாட்டுத் தொழுவத்தில் ஒரு மண்டலம் பணியாற்றச் சொன்னார். மாட்டிற்கு புல் போடுவதில் இருந்து சாணத்தை சுத்தம் செய்வது வரை எல்லாமே செய்யச் சொன்னார். ஒரு மாட்டை மட்டும் கையிலேயே பிடித்துக் கொண்டு மேய்த்து வா என்று சொன்னார். அந்த 48 நாட்களுக்குள் அவரது தோல் வியாதி சரியாகிவிட்டது.

ஒரு தேயிலைத் தோட்ட முதலாளிக்கு தொழு நோய் வரத் துவங்கியது. அவர் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தது, பிறன் மனை கவர்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு பரிகாரமாக, 5 பசுக்களை வாங்கி வீட்டில் பராமரித்து, அதில் இருந்து கறக்கும் பாலை ஏழை எளியவர்களுக்கு வழங்கு. மேலும் ஒரு காராம் பசு வாங்கி சிவன் கோயிலுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பசுக்களை பராமரித்து, பசுவை தானமாகக் கொடுத்த பின்னர் தொழு நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அழுகத் துவங்கிய விரல்கள் வளரத் துவங்கின. அதுபோன்ற ஆற்றல் பசுவிற்கு உண்டு.

காராம் பசு என்றால் அதன் காம்புகள் மிகச் சிறியதாக இருக்கும். மற்ற பசுக்களிடம் இருந்து இவை வேறுபடும். எல்லா புல்லையும் உண்ணாமல் தேர்ந்தெடுத்து சில புற்களை மட்டுமே உண்ணும். அதன் பால் அதிக சுவையுடையதாக இருக்கும். அதிக சக்தி கொண்டதாகவும் இருக்கும். அந்தப் பாலுக்கும் பல மருத்துவக் குணங்கள் உண்டு. பழைய சிவாலயங்களில் எல்லாம் பார்த்தால், ஓரிடத்தில் சிவலிங்கம் புதைந்து கிடந்தது. அந்த இடத்தில் காராம்பசு பால் சொரிந்தது. அதைப் பார்த்த மேய்ப்பவன் ஊரில் போய் சொல்ல அங்கு தோண்டிப் பார்த்தால் சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது போன்ற இதிகாசங்கள் இருக்கும்.
தேவ ரகசியங்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றலும் காராம்பசுவிற்கு உண்டு. தெய்வீக சக்தியை அறியும் ஆற்றல் படைத்ததால்தான் பசுவை கோமாதா என்றும் அழைக்கிறோம்.
எனவே எவ்வகையில் பார்த்தாலும் தெய்வீகத் தன்மை வாய்ந்த பசுவிற்கு பூஜை செய்வது மிகவும் சிறந்த காரியம்.
கஜ பூஜை!
இது மிகவும் வலிமையானது. பரிபாலன அதாவது அரசுக் கட்டிலில் அமருவதற்காக செய்யும் பூஜை. முதன்மை நாற்காலியில் உட்காருவதற்கான பூஜை. கஜகேசரி யோகம் என்று ஜாதகத்தில் ஒரு யோகம் சொல்லப்படுகிறது.
அதாவது ஜாதகத்தில் சந்திரனுக்கு நாலு, ஏழு, பத்தில் குரு உட்கார்ந்திருந்தால் கஜகேசரி யோகமாகும். இதுபோன்று அமைந்திருப்பவர்களுக்கு குரு தசையோ அல்லது சந்திர தசையோ நடந்தால் அப்போது அவர்கள் ராஜ யோகத்தை அடைவார்கள். நாட்டை ஆள்வார்கள். மற்ற கிரகங்களும் நன்றாக அமைந்தால் அரசையே ஆள்வார்கள்.
கஜகேசரி என்பது வெண்குற்றக் குடை தாங்கிய யானையின் மீது அமர்ந்து ராஜா வீதி உலா வருவார் அல்லவா அந்த யோகத்தை கஜ பூஜையின் மூலம் பெறலாம்.
அரசாட்சி புரிதல், அரசாலுதல், அரசு தொடர்பான வழக்கில் இருந்து விடுபடுதல் இதற்கெல்லாம் கஜ பூஜை துணையாக இருக்கும்.
ஒரு மடத்தில் துறவியாக இருந்தவர் கோ பூஜையைக் குறைத்து கஜ பூஜையை அதிகப்படுத்தினார். அப்போது பல மாநில முதலமைச்சர்கள் அந்த மடத்திற்கு வருவது அதிகரித்தது. எந்த முடிவு எடுப்பது என்றாலும் அந்த மடாதிபதியின் ஆலோசனையின்படிதான் நடந்தது. நீதிபதிகள், முதலமைச்சர்கள் என பலரது கார் அந்த மடத்தில்தான் இருந்தது.
ஆனால் இன்னார் இன்னார் இந்த இந்த பூஜை¨யை இந்த அளவிற்குத்தான் செய்ய வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. ஆனால் ஒரு மடாதிபதியாக இருந்து கொண்டு கஜ பூஜையை அதிகளவில் செய்ததால் அதற்கான பின் விளைவுகளையும் அவர் சந்திக்க வேண்டி வந்தது.
துறவி ஒருவர் அரசனாக முடியாது. அவ்வாறு இருக்க கஜ பூஜையை அதிகளவில் செய்யும் போது அரசனால் ஆபத்தும் ஏற்படும். அரசுப் பழிக்குள்ளாதல், அரசுக்கு எதிராகுதல் போன்றவை ஏற்படும். தற்போது அவர் கொலை வழக்கில் சிக்குண்டு நீதிமன்றம், ஜெயில் என அலைந்து கொண்டிருக்கிறார்.
எனவே அவர் கஜ பூஜை செய்ததற்கு ஈடாக கோ பூஜையும் செய்திருந்தால் இந்த அளவிற்கு பழிக்கு ஆளாகியிருக்க மாட்டார்.
கோ பூஜை என்பது எல்லாவற்றிற்கும் நல்லது. அதனை செய்வதால் சிறந்த பலன்களை அடையலாம். தற்காப்புக்கும் கோ பூஜை சிறந்தது. கோவை அதாவது பசுவை தானமாக கொடுப்பதும் நல்லது.
ஆனால் கஜ பூஜையை மட்டும் பார்த்துத்தான் செய்ய வேண்டும். கஜ பூஜையை செய்துவிட்டு சும்மா அங்கேயே இருந்து விடக் கூடாது. கஜம் என்றால் ஆற்றல். ஆற்றலை வைத்துக் கொண்டு ஒரே இடத்தில் இருக்கக் கூடாது. கஜ பூஜை செய்துவிட்டு எல்லையைத் தாண்டி போய்விட்டு வர வேண்டும். கஜ பூஜை ஒரு ஆற்றலைத் தரும். அந்த ஆற்றலை வைத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தால் வீட்டில் இருப்பவர்களை அடிக்க வைக்கும். அதுபோன்ற எதிர்மறை செயல்கள் ஏற்படும்.
மக்கள் கோ பூஜையை விரும்பி செய்தால் நல்லது.









துளசி

துளசி
வீட்டின் முன்புறம் அல்லது தூய்மையான எந்த இடத்திலும் துளசிச் செடியை வளர்ப்பது புண்ணியச் செயல். துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடிப்பாகத்தில் சிவனும், மத்தியில் விஷ்ணுவும், இருக்கின்றனர்.
12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 லசுக்கள், அசுவினித் தேவர் இருவர் ஆகியோர் துளசி இலையில் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. துளசி இலை, மருத்துவ குணங்கள் பொருந்தியதாகும். விஷக்கடிக்கு துளசி அருமருந்து.
துளசி செடி இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் அண்டாது. துளசி தீர்த்தம் கங்கை நீருக்குச் சமம். இவ்வளவு புண்ணியம் வாய்ந்த துளசிச் செடி ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம்

Tuesday, April 5, 2011

அகந்தையை அகற்றினால் சொர்க்கம் நிச்சயம்

அகந்தையை அகற்றினால் சொர்க்கம் நிச்சயம்
மிகப்பெரிய கோவில் ஒன்றில் பண்டிதர் ஒருவர் பல நாட்கள் புராண உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். படித்தவர்கள், பணக்காரர்கள் பலர் மனைவி மக்களுடன் காரிலும், வண்டிகளிலும் தவறாமல் வந்து புராணம் கேட்டனர்.
ஒரு ஆடு மேய்ப்பவனுக்கு புராணம் கேட்க ஆசை. அவன் படிப்பும், இல்லாதவன், சபையில் எல்லாருக்கும் சமமாக உட்காராமல் மூலையில் அமர்ந்து கதை கேட்டான்.
தினந்தோறும் சொற்பொழிவு நடந்தது. கடைசி நாளன்று புராண உபன்யாசம் செய்தவர் சபையில் இருந்தவர்களைப் பார்த்து “ இவ்வளவு நாள் புராணம் கேட்டீர்களே ! உங்களில் யார் சொர்க்கத்திற்குப் போகிறீர்கள் ?” என்று கேட்டார்.
ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அப்போது ஆடு மேய்ப்பவன் மட்டும், நான் போனால் போவேன் என்று கூறினான். சபை ஆச்சரியப்பட்டது. பெரியவர் விளக்கம் அளிக்குமாறு ஆடுமேய்ப்பவனிடம் கேட்டார். அப்போது “நான்“ என்ற அகந்தை போனால் சொர்க்கம் போகமுடியும் என்றான் அவன்!

Monday, April 4, 2011

வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க

வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க
இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது மங்களமானதாக கருதப்படுகிறது. அது அழகுத் தொடர்பானதும் கூட. மஞ்சளால் உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத்தை தான் வைத்துக்கொள்ள வேண்டும். குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி போன்ற இடங்களில் வைத்துக்கொள்வார்கள். அப்படி பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
வசியத்தில் இருந்து தப்பலாம்
வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், போன்றவை வழக்கத்தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
கழுத்தின் பின்பகுதி சடையால் மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில் பொட்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும். இந்த இடத்தில் பொட்டு வைத்துக்கொண்டவர்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும் ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது; வசியப்படுத்த முடியாது.
யோகசாஸ்திரம் கூறும் உண்மை
மூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில் இருந்து பிறக்கும் உள் ஒளி கண்டத்தில் தங்குகிறது. அவ்வொளி கபாலம் மூலம் புருவ மத்திக்கு வருகிறது. அகவொளி நிலைக்கும் இடங்களைப் பொட்டு வைத்து புலப்படுத்துவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள் அனைவரும் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில் வைத்துக்கொள்வது மரபு. ஒட்டுப் பொட்டுக்களை இட்டுக் கொள்ளுதல் சாஸ்திரத்திற்கு முரனானது ஆகும்.

Saturday, April 2, 2011

சூரிய குலம், சந்திர குலம்

சூரிய குலம், சந்திர குலம்

ஆதி காலத்தில், புராண காலத்தில் சூரிய வம்சம், சந்திர வம்சம் என்று சொல்கிறார்கள், நீங்கள் மாநிலத்திற்கு கூட, தமிழ்நாடு சூரியனை பிரதானமாகவும், மற்ற மாநிலத்தில் சந்திரனை பிரதானமாக வைத்து செய்கிறார்கள் என்று சொன்னீர்கள். சூரிய குலம், சந்திர குலம் என்பது கூட இதன் அடிப்படையிலானதா?
 இது சாஸ்திர அடிப்படையில் வரக்கூடியது. சிவ பெருமான் சூரிய வம்சம், கிருஷ்ண பரமாத்மா, விஷ்ணுவோட அம்சத்தை சந்திராம்சம் என்று சொல்வார்கள். முன்பு தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று எல்லாவற்றையும் ஐந்தாக்கினார்கள். தமிழர்கள் வாழ்வியல் தன்மையில் நிலம், நீர், நெருப்பு, காற்று, பூமி, சுற்றியிருக்கக் கூடிய அண்டம், பிண்டம் அதையும் ஐந்தாக்கிப் பார்த்தார்கள்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவற்றிற்கு என்னென்ன கடவுள், பாலை என்றால் வன தேவதைகள் என்றெல்லாம் வைத்திருந்தார்கள். அதுபோலதான் சூரிய குலம், சந்திர குலத்தையும் நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். சிவன் அழிக்கும் சக்தி உள்ளவர் என்பதால் சூரிய வம்சம். சந்திரன் ஆக்கும் சக்தி, திருமால் என்பதால் சந்திர குலத்திற்கும் வைத்தார்கள்

கை ரேகை பார்ப்பதில் ஆண்களுக்கு வலது கை, பெண்களுக்கு இடது கை என பார்ப்பது ஏன்?

கை ரேகை பார்ப்பதில் ஆண்களுக்கு வலது கை, பெண்களுக்கு இடது கை என பார்ப்பது ஏன்?

பொதுவாக உடற் கூறுகளில் நாம் சக்தி, சிவம் என்று சொல்கிறோம். சூரியக் கலை, சந்திரக் கலை அதுபோல, இரண்டையும் நீரையும், நெருப்பையும் கலந்ததுதான் எல்லாமே. நீர், நெருப்பு. இதைத்தான் நெருப்பை வந்து சிவனுக்கும், நீரை அம்பாளுக்கும் அதாவது, தனிந்த நிலை தன்னிலை, தனியா நிலை ஆண் நிலை என்று மாறி மாறி வரும்.
கை ரேகையைப் பொறுத்தவரையில் அவரவர்களை அந்தந்த நிலையிலேயே பார்க்கிறோம். சக்தி வந்து இடப்பாகம். சிவன் வந்து வலப்பாகம். அந்த வகையில் பார்க்கும் போது அந்த இயல்பான நிலையிலேயே பார்க்கிறோம்.
பெண்களைப் பொறுத்தவரையில், முக்கியமான கிரகங்கள் என்று சொன்னால் சந்திரனும், சுக்ரனும். பெண் ஆதிக்க கிரகங்கள் என்பது இந்த இரண்டு கிரகங்கள்தான்.
சந்திரன் மேடு என்பது சுண்டுவிரலிற்கு மிகவும் கீழே இருப்பது. கடைசி கட்டத்தில் இருப்பது, சுக்ரன் மேட்டிற்கு அடுத்ததாக இருப்பது. அதுதான் சந்திர மேடு. இந்த அமைப்புகள் என்பது இடக்கையைப் பார்க்கும் போது முழுமையாகத் தெரியும்.
சந்திரனையும், சுக்ரனையும் இடக்கையைப் பார்க்கும் போது அதனுடைய ஆதிக்கத்தை நாம் முழுமையாக உணரலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் நான் பார்ப்பது என்னவென்றால், யாராயிருந்தாலும் வலக்கை என்பது நிகழ்காலம் (பிரசண்ட்), இடக்கை என்பது எதிர்காலம்  அதுதான் உண்மை.
பெண்கள்தான் எல்லாவற்றிற்குமே பிரதானம். அதனால்தான் அவர்களுடைய இடக்கை பார்த்தால்தான் ஆடவருடைய உண்மையான நிலை தெரியவரும்.
ஒரு கணவன், மனைவி வருகிறார்கள். மனைவியினுடைய இடக்கையைப் பார்த்தாலே கணவனுடைய வலக்கையில் என்ன இருக்கிறது என்று சொல்லிவிடலாம்.

Friday, April 1, 2011

ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவர் எத்தனை பிறவி எடுப்பார் எனக் கூற முடியுமா?

ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவர் எத்தனை பிறவி எடுப்பார் எனக் கூற முடியுமா?

ஜோதிட ரீதியாக இதனைக் கூறமுடியும். பொதுவாக அந்த ஜாதகரின் லக்னாதிபதி எங்கு இருக்கிறார், யாருடன் சேர்ந்திருக்கிறார், எந்த நட்சத்திரப் பாகையில் உள்ளார் என்பதை வைத்து இது (தற்போது நடப்பது) எத்தனையாவது பிறவி என்பதைக் கணக்கிடுவோம்.
மோட்சக்காரகன் கேது மற்றும் மோட்ச ஸ்தானதிபதியின் நிலை ஆகியவற்றைக் கொண்டு அந்த ஜாதகர் இன்னும் எத்தனை பிறவி எடுப்பார் என்பதைக் கூற முடியும்

வரதட்சணை எப்போது துவங்கியது? இதனை ஆதரிக்கலாமா?

வரதட்சணை எப்போது துவங்கியது? இதனை ஆதரிக்கலாமா? வரதட்சணை வாங்குவது என்பது கண்டிக்கத்தக்க விடயம். புகுந்த வீட்டிற்கு வருவதற்காக ஒரு பெண் தட்சணை தருவது கூடாது. மாறாக மாப்பிள்ளை வீட்டார் விரும்பினால் தட்சணை கொடுத்து தங்கள் வீட்டு வரும் மகாலட்சுமியை (பெண்) அழைத்து வரலாம்.
ஒரு வீட்டிற்கு வரும் மருமகள் அந்த வீட்டின் மகாலட்சுமியாகவே கருதப்படுகிறாள். எனவே மகாலட்சுமியை வரதட்சணை கேட்டு சிரமப்படுத்தி அழைத்து வரக் கூடாது. வரதட்சணை பெறுவதால் புகுந்த வீட்டு உறவுகள் மீது மணமகளுக்கு வெறுப்பு ஏற்படும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
சங்க கால நூல்களில் வரதட்சணை என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அகநானூறு, புறநானூறு, கலிப்பா, பரிபாடல் ஆகிய நூல்களில் ஆடவரின் வீரத்தைப் பார்த்தே பெண் மாலையிட்டாள் என்று கூறுகின்றன. ஒரு பெண், ஆடவரை மணக்க பணம்/நகை/தங்கக் காசுகளை வரதட்சணையாக அளிக்க வேண்டும் என்று எந்த சங்ககால நூலிலும் கூறப்படவில்லை. ஆடவரும் அதை விரும்பவில்லை. ஜாதி பார்த்து திருமணம் செய்து கொள்வதும் அப்போது பெரியளவில் நடைபெறவில்லை.
கடந்த 30 முதல் 40 ஆண்டு காலத்திலேயே வரதட்சணை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. விரைவில் பெண் எடுப்பதற்கு வரதட்சணை கேட்கும் காலம் மாறி, வரதட்சணை கொடுக்கும் காலம் வரும்.
கடந்த 15 ஆண்டுகளாக ஜோதிட ரீதியாக ஆண் கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் உலகெங்கிலும் ஆண் குழந்தைகள் அதிகளவில் பிறந்துள்ளன. எனவே இன்னும் சில ஆண்டுகளில் மணப் பெண் கிடைப்பதே அரிதாகிவிடும் என்பதால், பெண் வீட்டில் வரதட்சணை கொடுத்து புகுந்த வீட்டிற்கு அழைத்து வரும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறும்.

இறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்?

இறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்?

இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.
இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.
வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

பெற்றோருக்கு பிள்ளை கொள்ளி வைக்க முடியாத நிலை ஏன் ஏற்படுகிறது?

பெற்றோருக்கு பிள்ளை கொள்ளி வைக்க முடியாத நிலை ஏன் ஏற்படுகிறது?
பெற்றோரின்
ஜாதகத்தில் பூர்வ புண்ணியாதிபதி (5க்கு உரியவர்), புத்திரக்காரகன் குரு ஆகிய இருவரும் 6ஆம் அதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது 8, 12இல் மறைந்திருந்தாலோ அல்லது 8, 12க்கு உரியவரின் தசை நடைபெறும் காலத்தில் 6க்கு உரியவனின் புக்தி நடந்தாலோ பெற்ற பிள்ளைகளால், பெற்றோரின் சிதைக்கு தீ மூட்ட முடியாத நிலை ஏற்படும்.ஒரு சில பெற்றோருக்கு பல பிள்ளைகள் இருந்தும், சிதைக்கு யாரும் தீ மூட்ட இயலாத சூழல் கூட ஏற்படும். எனவே, அதுபோன்ற கிரக அமைப்பு உள்ளவர்கள், பிள்ளைகளை தொலைதூர பயணம் செல்ல அனுமதிப்பதையும், வெளிமாநிலங்கள், அயல்நாடுகளில் தங்குவதை தவிர்க்கவும் அறிவுறுத்துவேன்.
பிள்ளை இல்லாதவர்களுக்கு யார் கொள்ளி வைக்கலாம்?
அவர் (பிள்ளை இல்லாதவர்) யாரைக் குறிப்பிடுகிறார்களோ அந்த நபர்தான் சம்பந்தப்பட்டவருக்கு கொள்ளி வைக்க வேண்டும். ஒரு சிலர் தன்னுடைய சிதைக்கு நெருப்பு வைக்க வேண்டியது யார் என்று உயில் கூட எழுதி வைத்து விடுவார்கள். அதில் தவறொன்றும் இல்லை.
யாருடைய பெயரையும் இறந்தவர் குறிப்பிடாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவரின் ரத்த சொந்தங்கள் (பெரியப்பா, சித்தப்பா மகன்) அவரது சிதைக்கு தீமூட்டலாம்

ஜோதிடத்தில் என்ன வகையான புண்ணியங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது?

ஜோதிடத்தில் என்ன வகையான புண்ணியங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது?
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் இன்றளவிலும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு தினசரி உணவு வழங்கி வருகிறார். அவரது சத்திரத்தில், 3 நட்சத்திர விடுதிகளில் ரூ.50க்கு விற்கப்படும் சாப்பாட்டிற்கு இணையாக முதல் தரமான உணவு வழங்கப்படுகிறது. இதைச் செய்வதற்காக அவர் யாரிடமும் நன்கொடை கேட்டுப் போனதில்லை. அன்னதானம் சாப்பிடுபவர்கள் நன்கொடை தர விரும்பினால் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டு விடுமாறு கூறிவிடுவார்.இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.
அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.
இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.



வாழை மரம் குறிப்பிட்ட திசையில் குலை தள்ளினால் ஆகாது எனக் கூறுவது உண்மையா?

வாழை மரம் குறிப்பிட்ட திசையில் குலை தள்ளினால் ஆகாது எனக் கூறுவது உண்மையா? நமது முன்னோர்கள் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தனர். அதனால்தான் அவர்களுக்கு மரங்கள், பறவைகள் கூறும் சமிஞ்சைகளை அறிந்து கொள்ள முடிந்தது. பட்சி சாஸ்திரத்தைப் போல் வாழை மரம் குலை தள்ளுவதை வைத்தும் தங்களுக்கு ஏற்படப் போகும் பலன்களை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
நிலத்துடன் (வயல்வெளியில்) வீடு கட்டி வாழ்பவர்கள் தோட்டத்தில் வாழை எந்தப் பக்கம் குலை தள்ளினாலும் அதனால் அந்த வீட்டுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாது. பொதுவாக வாழை மரம் வடதிசை நோக்கி குலை தள்ளுவது நல்லது. மண்ணின் தன்மை, அந்த வீட்டின் தன்மை ஆகியவற்றை அங்குள்ள செடி, கொடிகள் பிரதிபலிக்கும். அந்த வகையில் வாழையும் குறிப்பிட்ட திசையில் குலை தள்ளி அந்த வீட்டின் தன்மையை உணர்த்துகிறது. கிழக்குப் பக்கம் குலை தள்ளினாலும் பாதிப்பில்லை.
வடக்கு, கிழக்கு திசைகளில் வாழை மரம் குலை தள்ளாமல் போனாலும் கூட அந்த வீட்டில் உள்ளவர்கள் அதிகம் கவலையடையத் தேவையில்லை. தங்களது ஏற்படப் போகும் இன்னல்களை முன்கூட்டியே திட்டமிட்டு தவிர்த்துவிட்டால் போதும்.

பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்க குரு அருள் வேண்டும் என்று கூறுவது உண்மையா?

பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்க குரு அருள் வேண்டும் என்று கூறுவது உண்மையா?
ஒருவர் என்ன பரிகாரம் செய்தாலும் அவரது ஜாதகத்தில் குருவின் அருள் இல்லாவிட்டால் அந்தப் பரிகாரத்தால் எந்தப் பலனும் இல்லை என சிலர் கூறுகின்றனர். ஜோதிட ரீதியாக இதில் உண்மை உள்ளதா?
: பொதுவாக ஒருவர் பரிகாரம் செய்வதற்கே நல்ல நேரம் அமைய வேண்டும். அனைவருக்கும் பரிகாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. பரிகாரம் செய்தாலும் அதற்கு தகுதியானவரைக் கொண்டு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல தசா புக்தி வரும் போது சில குறைகளை (பரிகாரம் மூலம்) நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கிறது. எனினும், குரு அருள் இருந்தால் மட்டுமே பரிகாரம் பலன் தரும் எனக் கூறுவது ஏற்புடையதல்லை. ஏனென்றால் ‘குரு பார்த்தால் கோடி நன்மை’ என்று ஜோதிடம் கூறினாலும், ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு ஏற்ப குரு அளிக்கும் பலன்களில் மாற்றம் இருக்கும். ஒரு சில ஜாதகங்களில் குரு பார்த்தால் கெட்டது நடக்கும். ஏனென்றால் அனைவரும் குரு நல்ல பலன்களை வழங்க மாட்டார். அவரவர் நட்சத்திரம், ராசி, ஜனன கிரக அமைப்பைப் பொறுத்து குரு பலன் மாறுபடும். ஒரு சிலருக்கு பாதகாதிபதியாகவும் வருவார்.
ஆனாலும், பரிகாரம் செய்யும் தருணத்தில் குரு நல்ல நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக அந்தக் காலகட்டத்தில் பரிகார லக்னத்தை குரு பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் பரிகாரம் முழுமையான பலனைக் கொடுக்கும்

தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா?

தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? 
நீண்டி நெடிய வரலாற்றையும், பண்பாட்டையும் தந்த தமிழனத்திற்கென்று திருமண முறை என்பது எப்படிப்பட்டதாக இருந்தது. அதேபோல தமிழருக்கென்று இறந்தவர்களுக்கு செய்யக் கூடிய காரிய முறை ஏதாவது இருக்கிறதா?
நமக்கென்று சில முறைகள் இருக்கிறது. தமிழர் பண்பாடு, வேளாளர் முறை என்றெல்லாம் சங்ககால நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. இதில் பெரியவர்கள்தான் மிக மிக முக்கியம். மங்கள நாண் என்று சொல்கிறோமே தாலி, அந்த மங்கள நாணை பெரியவர்கள் கையால் எடுத்துக் கொடுப்பார்கள். பெற்றோர், அதாவது மணமகன், மணமகள் பெற்றோர், அதே நேரத்தில் அந்த பெற்றோருக்குப் பெற்றோர். தாத்தா, பாட்டி, பூட்டன் அவர்கள் கரங்களால் எடுத்துக் கொடுத்து, பிறகு மேள தாள வாத்தியங்கள் முழங்க சூட்டுவது என்பது வழக்கமாக இருந்ததுள்ளது.
நடைமுறையில், நடுவில் ஆரியர்கள் வருகை. அதன்பிறகு பார்க்கும்போதுதான் அக்னி வளர்த்தால், மந்திரங்கள் ஜெபித்தல், வேத மந்திரங்கள் ஓதுதல் இதெல்லாம் வந்தது. அதற்கு முன்பு பார்த்தால் பெரியவர்கள் வாழ்த்து கூறுவார்கள். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று அவரவர்கள் மனதிற்கு பட்டதுபோல் வாழ்த்துக் கூறுவார்கள். நம்முடைய தமிழர் பண்பாட்டு முறை என்பது இதுதான். இதில் ஓதுவார்கள் இருப்பார்கள். அவர்கள் தேவாரம், திருவாசகம் ஓதுவார்கள். இதில், மங்கள நாண் பூட்டிய பிறகு பாட வேண்டிய பாடல் என்றெல்லாம் உண்டு. அந்தப் பாடல்களை அவர்கள் எல்லா வளங்களும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று பாடுவார்கள். இதுதான் முறையாக இருந்தது. இதில் வளர்பிறை அதிகமாக பார்க்கப்பட்டது. தமிழர் திருமணம் எல்லாம் வளர்பிறையை வைத்துதான், அதாவது சந்திரனை அடிப்படையாக வைத்து பார்க்கப்பட்டது. தேய்பிறையில் திருமணம் நிகழ்த்துவதில்லை. அப்பொழுது நெருப்பு வளர்க்கிறதோ, தீ வளர்க்கிறதோ, வேதங்கள் ஓதுவதோ அதெல்லாம் இல்லாமல் இருந்தது. இது நடுவில் வந்ததுதான். அதேபோல, அடக்கம் செய்வது என்று பார்த்தீர்களானால், ஈமச் சடங்கு செய்வது, திருமூலர் தன்னுடைய திருமந்திரப் பாடல்கள் சொல்லியிருக்கிறார். யாரையுமே எரிக்கக் கூடாது. அடக்கம்தான் செய்ய வேண்டும் என்று அவர் சொல்கிறார். இப்பவும் சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அடக்கம்தான் செய்கிறார்கள். கல் உப்பு இருக்கிறதல்லவா, அதை பரப்பி, உயிர் நீத்தாரை அமர்ந்த நிலையில் வைத்து பத்மாசனம் என்று சொல்வார்கள் அந்த நிலையில் வைத்து, கிழக்கு நோக்கி முகம் இருப்பது போல் வைத்து சுற்றி விபூதிப் பெட்டகத்தால் நிரப்பி அடக்கம் செய்வார்கள். இதுதான் திருமூலர் சொல்லியிருக்கும் அடக்கம் செய்யும் முறை. இது, நம்முடைய எலும்புகள் சீக்கிரம் மண்ணோடு மண்ணாக மக்கி தாவரங்கள் முளைப்பதற்கான வழிவகைகளை கொடுக்கும். அதாவது எந்தவிதமான மாசும் படாமல். எரிக்கும் போது புகையெல்லாம் வருகிறது. இதனால் மாசுபடுகிறது. இந்த எரித்தலும் வேதம் ஓதுபவர்கள் வருகைக்கு பின்னர்தான் இந்தப் பழக்கமும் வந்தது. அதற்கு முன்பு எல்லாமே அடக்கம்தான். யாரையும் எரிப்பது என்பது கிடையாது. நடுவில் வந்ததுதான் எரிக்கும் பழக்கம். தமிழர்களுடையது அடக்கம் செய்வதுதான். அதற்கு சில பாடல்கள் தேவாரத்தில் இருந்து பாடுவார்கள். இவருடைய ஆன்மா முக்தி அடைய வேண்டும் என்று பாடி நல்லடக்கம் செய்வார்கள். இதுதான் முறையாக இருந்தது.
காரியம் என்று சொல்கிறார்களே, 16வது நாள்...
அது நீத்தார் நினைவு நாள். அதாவது 16வது நாள் என்பது என்ன? அந்த திதி வருவதுதான். எந்த ஒரு திதியாக இருந்தாலும் 14 நாள் கழித்து வந்துவிடும். அமாவாசைக்கு அடுத்த 14வது நாள் பெளர்ணமி. திதியை அடிப்படையாக வைத்துதான் அந்த நினைவு நாளை கடைபிடித்தார்கள்.

யோக‌ம், கரண‌ம் எ‌ன்றா‌ல் எ‌ன்ன?

யோக‌ம், கரண‌ம் எ‌ன்றா‌ல் எ‌ன்ன?  பஞ்சாங்கத்தை எழுதும் போது யோகம், கரணம், அமிர்தாதி என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்களே அதனுடைய அர்த்தங்கள் என்ன?
இதெல்லாம் முற்றிலும் அறிவியல். பூமியை சூரியன் எந்த அளவிற்கு கடக்கிறதோ அதைப் பொறுத்துதான் இதெல்லாம். சந்திரன் பூமியில் இருந்து எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதை அறிவதற்குதான் பிரதமை, திருதியை போன்ற திதிகளெல்லாம். அதாவது பூமிக்கும், சந்திரனுக்கும் எந்த அளவில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை காட்டக்கூடியதுதான் இது.
இதே மாதிரிதான் யோகங்களும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் பூமி எந்த மாதிரியான அமைப்பில் இருக்கிறது என்பதை காட்டக்கூடியதுதான் யோகம். அதாவது, சித்த யோகம், அமிர்த யோகம், மரண யோகம் இந்த மாதிரியெல்லாம் அமைகிறது.
இதெல்லாம் முற்றிலும் வானவியல் கணக்குமுறை (Astronomical Calculation). இதை அடிப்படையாக வைத்துதான் வானவியல் தொடர்பான வார்த்தைகளே (Astrological Terms) நிறைய வருகிறது.
கரணம் என்பது?
யோகம், கரணம் என்பது என்னவென்றால், இதுவும் அதே மாதிரிதான். சந்திரனுக்கும், சூரியனுக்கும் நடுவில் இருக்கக் கூடிய இடைப்பட்ட பகுதி பாதைகளை வைத்துதான் நிஷ்கம்ப யோகம், கரணம் எல்லாம் குறிக்கப்படுகிறது.

கோபுரங்கள் பாதிப்பு ஆபத்தின் அறிகுறியா?

கோபுரங்கள் பாதிப்பு ஆபத்தின் அறிகுறியா?

 கோயில் கோபுரங்களில் விரிசல் ஏற்படுதல், மின்னல் தாக்கி பாதிக்கப்படுவது, இடிந்து விழுதல் போன்றவை ஏதாவது ஆபத்தின் அறிகுறியா?
 கோபுரம் என்பது ஒரு அடையாளச் சின்னம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் அரசு சின்னமாகவே அமைக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் அரசையும், ஆட்சியையும் குறிப்பிடக்கூடியது என்று சொல்லலாம். கோபுரங்களில் இருக்கும் கலை, பரிணாமங்கள், சிற்பங்கள், எழுந்து நின்றிருக்கக் கூடிய கோபுரங்களின் அமைப்பு, அதற்கு மேல் முத்தாய்ப்பாய் பதித்திருக்கக் கூடிய அந்தக் கலசங்கள் போன்ற இவையெல்லாம் பாதுகாக்கப்படக் கூடியவை.
இதில் சில சென்சிடிவ்வான சில விஷயங்களும் உண்டு. கோபுரக் கலசங்கள் ஏதாவது தவறி விழுந்தாலோ, கோபுரத்தில் விரிசல்கள் அல்லது பின்னங்கள் ஏற்பட்டாலோ பொதுவாக நாட்டினுடைய பொருளாதாரம், நாட்டை ஆள்பவருடைய நிலைமை, பருவ நிலை மாறிப் பொழிதல், தற்கொலை அதிகரித்தல், முர‌ண்பாடான உறவுகள் இதுபோன்ற சீர்கேடுகள் எல்லாம் ஏற்படும்

ல‌ட்சு‌மி கடா‌ட்ச‌‌த்‌தி‌ன் பல‌ன் எ‌ன்ன?

ல‌ட்சு‌மி கடா‌ட்ச‌‌த்‌தி‌ன் பல‌ன் எ‌ன்ன?

லட்சுமி கடாட்சம் உண்டு என்று சொல்கிறார்கள். அது என்ன பலனைக் கொடுக்கும்?
லட்சுமிக்குரிய கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரன் தனஸ்தானம். 2ஆம் இடம் என்பது தனஸ்தானம். தனம், பணம் எல்லாவற்றையும் கொடுப்பது. இந்த தனம், பணம் ஸ்தானத்தில் வந்து சுக்கிரன் உட்கார்ந்திருந்தார் என்றால் அது மிகவும் விசேஷம்.
சந்திரனுக்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும், லக்னத்திற்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும் லட்சுமி கடாட்சம் உண்டு. அதேபோல, லக்னாதிபதி 2, 5, 9க்கு உரியவருடன் சேர்ந்திருந்தாலும் அவர்கள் லட்சுமி கடாட்சமாகவும் இருப்பார்கள், வீட்டிலும் லட்சுமி கடாட்சம் இருக்கும். ஒரு உயர்ந்த நிலையிலும் இருப்பார்கள்.

மு‌ன்னோ‌ர்க‌ளி‌ன் ‌பிற‌ப்பு எ‌ன்பது எ‌ப்படி?

மு‌ன்னோ‌ர்க‌ளி‌ன் ‌பிற‌ப்பு எ‌ன்பது எ‌ப்படி?
சில குழந்தைகள் முன்னோர்களின் பிறப்பு என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். மேலும் ஒத்த உருவத்தில் சிலர் பிறப்பதையும், அவர்களைப் போன்றே நடந்து கொள்வதையும் பார்க்கிறோம். இவர்களின் ஜாதகம், அவர்களின் ஜாதகத்தின் ஆதிக்கத்தில் இருக்குமா? இல்லை அவர்களுடைய ஜாதகத்தில் இவர்கள் பிறப்பார்களா?
 அறிவியல்பூர்வமாகச் சொல்லப்போனால் முன்னோர்களுடைய குரோமோசோம்ஸ், ஜீன்ஸ் காரணமாக இருப்பதைச் சொல்லலாம். மரபியல் கூறுகளின் அடிப்படையில் தொடர்கின்றன என்று சொல்லலாம்.
பொதுவாக லக்னத்தில் என்ன கிரகம் இருக்கிறதோ அது தோற்றத்தையும், நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கிறது. லக்னத்தில் சனி உட்கார்ந்திருந்தால் தாத்தா, பாட்டியைக் கொண்டுவரும். லக்னத்தில் புதன் இருந்தாலோ அல்லது பூர்வ புண்ணிய அதிபதி உட்கார்ந்திருந்தாலோ தாய்வழி உறவுகளில், தாய்மாமன் மாதிரி, அத்தை மாதிரி உறவுகளைக் கொண்டுவரும். அந்தக் குழந்தைகளுக்கு தாய்வழி உறவுகளுடைய ஜீன் அதிகமாக இருக்கும். முன்னோர்களைப் போல் இருந்தால், அது சனியினுடைய ஆதிக்கம் அதிகம் இருந்தால் கொண்டுவரும். அதாவது, தாத்தா, தாத்தாவினுடைய அப்பா, முப்பாட்டன்களைக் கொண்டுவருவது சனி. ஏனென்றால், அவர்தான் பழமைக்கும், மரபு சார்ந்த நடவடிக்கைகள், பண்பாடு சார்ந்த நடத்தைகள் போன்று பிறப்பதற்கு காரணம் சனிதான். இதையெல்லாம் நடைமுறையில் பார்க்கிறோம்.
ஒருவர் வந்திருந்தார். என்னுடைய அப்பா பிறந்த தேதி, நட்சத்திரத்திலேயே இவன் பிறந்திருக்கிறான். பார்ப்பதற்குக் கூட என்னுடைய அப்பா சாயலில்தான் இருக்கிறான். அந்தக் குழந்தைக்கு சந்திரன், சனி இரண்டும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இதுபோல சந்திரன், சனி சேர்க்கை இருந்தாலும் பாட்டன், பாட்டியைக் கொண்டுவரும். இதுபோல ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு அமைப்பிற்கு உரிய கிரகமாக இருக்கிறது

13 எ‌ன்றா‌லே அய‌ல்நாடுக‌ளி‌ல் பய‌‌ப்படுவது ஏ‌ன்

13 எ‌ன்றா‌லே அய‌ல்நாடுக‌ளி‌ல் பய‌‌ப்படுவது ஏ‌ன்? 13ஆம் தேதி அதுவும் வெள்ளிக்கிழமை என்றாலே அயல் நாடுகளில் பொதுவாக பயப்படுகிறார்கள். தற்பொழுது 13 என்ற எண்ணை பயன்படுத்துவதே இல்லை. 12, 12ஏ, 14 என்றெல்லாம் வைத்துக் கொள்கிறார்கள் என்று படிக்கிறோம். இதுகுறித்து நிறைய நாவல்களெல்லாம் கூட ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. இது எந்த விதத்திலாவது எண் கணிதம் அல்லது ஜோதிட ரீதியாக இதுபோன்ற அச்சத்திற்கு அடிப்படை இருக்கிறதா?

ஒருவருடைய ஜாதகத்தில் இராகு வலுத்திருந்தால் 13ஆம் எண்ணால் பல பயன்கள் அடைய முடியும். விருப்பப்பட்ட பயனை அடைய முடியும். தற்பொழுது முதல்வருடைய ஜாதகத்தில் 13 வலுவாக இருக்கிறது. அதனால்தான் கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில் முக்கியமானத் திட்டங்கள், முக்கியமான நிகழ்வுகள் எல்லாவற்றையும் 4 அல்லது 8இல்தான் செய்திருக்கிறார். 4ஆம் தேதி அல்லது 8, 22 ஆகிய தேதிகளாக இருக்கும். அப்படியில்லையென்றால் 8, 17, 26 ஆகிய தேதிகளாக இருக்கும். அவருக்கு அந்த அமைப்பு எல்லாவற்றையும் கொடுக்கும்.
இராகு வலுத்திருந்தால் எதுவும் பிரச்சனை கிடையாது. இராகு அசுர கிரகம். அசுரர்களின் தலைவர் சுக்ராச்சாரி. அதாவது சுக்ரன். அவருடைய வாரம்தான் சுக்ர வாரம், வெள்ளிக்கிழமை. இந்த இரண்டும் சேரும்போது ஒருவிதமான மாற்றம். அதாவது இயல்புநிலையை மாற்றியமைத்தல்தான் இராகு, சுக்ரனுடைய வேலையே. புரட்சி போன்ற சிந்தனையை கொடுப்பதே இராகுவும், சுக்ரனும்தான். அதனால், வெள்ளிக்கிழமை சுக்ரனுடைய கிழமை. 4ஆம் எண் - 13 கூட்டினால் வருவது 4 - என்பது இராகு. இதுபோல இராகுவும், சுக்ரனும் ஒன்று சேரும் போது இழப்புகளும், ஏமாற்றங்களும் வருவது என்பது இயல்பு.
ஒரு சாம்ராஜ்ஜியத்தை கவிழ்ப்பது, ஒரு விபத்தை உண்டாக்குவது போன்ற நிகழ்வுகள் மூலமாக புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது. இதுதான் இந்த இரண்டு கிரகங்களுடைய வேலையே. பறித்து மற்றொருவர் கையில் கொடுப்பது. அதனால்தான் அயல்நாடுகளில் பார்த்தால் 13ஆம் தேதியும், வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்தால் பயப்படுவதற்கு காரணம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு அந்த காம்பினேஷன் ஒத்துவராது.
நன்றாக குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. நன்றாக வியாபாரம் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு மாற்றம் வரும். புதுசாக ஒருவர் வந்து அவருக்கு கடக்கை மாறிவிட்டது என்று சொல்வார்களே அதுபோல நடக்கும். அதிகாரத்தைப் பரவலாக்கும் கிரகங்கள் இந்த இரண்டும். சுக்ரனும், இராகுவும் அதிகாரம், மகிழ்ச்சி, இதெல்லாம் ஒரு இடத்தில் முடங்கிக் கிடப்பதை பரவலாக்கக் கூடிய கிரகங்கள். அதனால்தான் இந்த கிரகங்களுக்கு அழிக்கும் சக்தியை விட ஆக்கும் சக்தி அதிகம். ஒரு வழிவால்தான் பல ஆக்கங்கள் உருவாகிறது என்பார்கள். அதுபோலத்தான் இந்த இரண்டுகளும் செய்து கொண்டிருக்கும்.

.

அனைவரு‌க்கு‌ம் எ‌ந்த வ‌ழிபாடு முத‌ன்மையானது?

 அனைவரு‌க்கு‌ம் எ‌ந்த வ‌ழிபாடு முத‌ன்மையானது?
மக்கள் தெய்வங்களை வழிபடுகிறார்கள். ஆனால் கோயில்களுக்குச் செல்பவர்கள் என்று பார்த்தீர்களென்றால் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால் பக்தி இல்லை என்று சொல்ல முடியாது. நேரமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக இருக்கிறது. ஆனாலும், பொதுவாக ஏதாவது ஒரு கோயிலிற்குச் செல்ல வேண்டுமா?

 பொதுவாக இறைவழிபாடு நல்லது. முதன்மை வழிபாடு குலதெய்வம். தினசரி நினைத்துக் கொள்வது என்பது நல்லது. ஏனென்றால் பலருக்கும் குல தெய்வம் காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடங்களில்தான் இருக்கிறது. அதனால் எப்போதும் சென்றுவர முடியாது. ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்குச் சென்று வருவது நல்லது.
இதுதவிர, தசா புத்திகளை அடிப்படையாக வைத்து இந்த திசையில் இந்த தெய்வங்களை வழிபட்டால் நல்லது என்று சொல்கிறோம். உதாரணத்திற்கு, செவ்வாய் திசை, குரு திசை நடக்கும் போது முருகரை விடாமல் வழிபடுங்கள். கந்த சஷ்டி கவசத்தைப் படியுங்கள் என்று சொல்கிறோம். இதில் முதன்மை வழிபாடாக மூலவர், முதல்வர் விநாயகருக்கு கொடுப்போம்.
இஷ்ட தெய்வம், குல தெய்வம், தசா புத்தி தெய்வம் என்று பல தெய்ங்கள் உண்டு. சிலரிடம், நீங்கள் சிவ வழிபாடுதான் செய்ய வேண்டும் என்று சொல்வோம். அதற்கு அவர்கள், நீங்க என்னதால் சொன்னாலும் திருப்பதிக்கு போகாமல் இருக்க முடியாது. மாதத்திற்கு ஒரு முறையாவது திருப்பதிக்கு போய் வருவேன் என்று சொல்வார்கள். ஆகையால், இஷ்ட தெய்வம் என்று ஒன்று வருகிறது. அவர்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்துக் கொள்ளலாம். ஏனென்றால், சிலருக்கு அவர்களுக்கு பிடித்த இடங்களுக்குச் சென்றால் திருப்தி உண்டாகும். இதுபோல அவர்களையும் மீறி ஒரு சக்தி அவர்களுக்கு நிம்மதியைத் தருவதாக உணர்வார்கள். அதன்படி வணங்கிக் கொள்ள வேண்டியதுதான்