அதிர்ஷ்டம் தரும் குபேர யந்திரத்தை புரசு இலையில், தாமிரம் அல்லது வெள்ளி அல்லது தங்கத்திலான 3+3 அளவுள்ள தகடை ஒன்பது கட்டங்களாக்கி எப்படி கூட்டினாலும் 72 வருகிற மாதிரி எழுதி, தாமரை மலர் கொண்டு துடைத்து, பால், பன்னீரால் கழுவி சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது வைத்து ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கில் நெய் தீபம் ஏற்றி குபேர படத்திற்கும் தாமரை மலரால் அர்ச்சித்து 72 நாட்கள் குபேர மந்திரத்தை ஜபித்து வந்தால் பெரும் செல்வம் சேரும்.
பிரபுக்களும், செல்வந்தர்களும் தேடி வந்து உதவுவார்கள். இந்த யந்திர பூஜைக்கு கைமேல் பலன் உண்டு. இந்த யந்திரன் சிறப்பம்சம் இதில் குறிப்பிட்டுள்ள எண்களை எந்த முறையில் கூட்டினாலும் அது 72 ஆக வரவேண்டும். இந்த 72ன் கூட்டுத் தொகை ஒன்பதாக வரும்.
No comments:
Post a Comment