Sunday, September 18, 2011

ஸ்லோகங்களுக்கு அளப்பரிய சக்தி உண்டு

சங்கீதன் மிகப்பெரிய தர்மவான். ஆனாலும், மனதில் அமைதியில்லை. காரணம் அவன் செய்த தர்மத்தை ஊரில் பலர் கேலி செய்ததும், பொறாமை கொண்டதும் தான்.
ஒருமுறை, ஒரு பெரியவர் அவன் இல்லத்துக்கு வந்தார். அவருக்கு உணவளித்த சங்கீதன், ""ஐயா! எவ்வளவு தர்மம் செய்தாலும், என் மனதில் அமைதியில்லை. என்னைச் சுற்றியுள்ளவர்கள் பொறாமைப்படுகின்றனர். கேலி செய்கின்றனர். இதனால் என் மனஅமைதி பாதிக்கப்படுகிறது,''என்றான்.
""இவ்வளவுதானா? இதற்காகவா கவலைப்படுகிறாய்,'' என்ற பெரியவர், சங்கீதா! அதுபற்றி நீ கவலைப்படாதே. நான் சில ஸ்லோகங்களை உனக்கு எழுதித்தருகிறேன். அவற்றை நீ தினமும் விடாமல் வாசி,'' என்றார்.
சங்கீதனும் அவர் எழுதிக் கொடுத்ததை வாசித்தான். அவனை விமர்சித்தவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். பலர் அவனைப் போலவே தர்மம் செய்ய ஆரம்பித்தனர். அந்த இடத்தின் சூழலே மாறிப் போனது.
ஸ்லோகங்களுக்கு அளப்பரிய சக்தி உண்டு. உங்கள் இல்லங்களிலும், கோயில்களிலும், ஊர் பொது இடங்களிலும் ஸ்லோகங்கள் ஒலிக்கட்டும். சுற்றுச்சூழல் கூட மாறி விடும்.

No comments:

Post a Comment