Saturday, September 17, 2011

காலதேவன்'

பிறவி எடுத்த உயிர்கள் அனைத்தும் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும் என்பது நியதியை மனதில் எப்போதும் நினைத்தால் இந்த பயம் நீங்கி விடும். அஷ்டதிக்பாலகர்களில் தெற்குதிசைக்குரிய எமனை வழிபட்டால் மரணபயம் நீங்கும். ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன், குழந்தை, பெரியவர் என்ற பேதம் இல்லாமல் எல்லாரையும் அவரவர் விதிப்படி உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை இறைவன் இவருக்கு வழங்கியிருக்கிறார். காலச்சக்கரத்தை இயக்கும் அதிகாரியாக இருப்பதால் "காலதேவன்' என்ற பெயரும் உண்டு. இவருடைய ஜென்ம நட்சத்திரம் மகம். மகமும், திரிதியையும் சேர்ந்த நாளில் பலாமரத்தடியில் அவதரித்தவர். திருக்கடையூர், திருப்பைஞ்ஞீலி, ஸ்ரீவாஞ்சியம் ஆகிய சிவாலயங்களில் எமனுக்கு சந்நிதி உள்ளது.இவரை வழிபட்டோருக்கு மரண அவஸ்தை இல்லாமல் உயிர் நீங்கும் என்பது நம்பிக்கை. 

No comments:

Post a Comment