Saturday, September 17, 2011

சம்ப்ரோக்ஷணம்

சித்த மருத்துவத்தில் மனித உடம்பை வாத உடம்பு, பித்த உடம்பு என்று பிரிப்பர். பித்தம் உஷ்ணதேகத்தைக் குறிக்கும். பித்தம் அதிகரித்தால் கதகதப்பு அதிகமாகும். உஷ்ண தேகம் உள்ளவர்களுக்கு எப்போதும் குளித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும். சிவபெருமான் உஷ்ண தேகம் கொண்டவர். அதனால் சிவபெருமான் அபிஷேகப்பிரியராக இருக்கிறார். சிவன்கோயில் குடமுழுக்கைக் கூட "கும்பாபிஷேகம்' என்று நீராடலாகக் குறிப்பிடுவர். சிலருக்கு உடல்நிலை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். அவர்கள் வழக்கமான குளியலுக்கு கூட கொஞ்சம் யோசிப்பதுண்டு. அப்படியானால், வாதத்தின் கூறு அதிகமாக இருக்கிறது என்று பொருள். கோயிலில் பெருமாளுக்கு திருமஞ்சனத்தை (அபிஷேகம்) காட்டிலும் அலங்காரத்திற்கே முன்னுரிமை அளிப்பர். பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை "சம்ப்ரோக்ஷணம்' என்பர். "ப்ரோக்ஷணம்' என்றால் "தெளித்தல்'என்று பொருளாகும்.

No comments:

Post a Comment