கல்பகிரி என்பவன் ஒரு கொலையைச் செய்துவிட்டு, இமயமலை பக்கம் ஓடி ஒளிந்து
கொண்டான். அங்கு பல சாதுக்கள் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துவதைக் கேட்டான். அவனது
மனம் மாறியது. தானும், ஆன்மிகச் சொற்பொழிவானாக வேண்டி, பல நூல்களைப் படித்தான்.
கருத்தூன்றி படித்ததால், அத்வைதம் உள்ளிட்ட தத்துவங்களைப் பற்றிக் கூட
மணிக்
கணக்கில் பேச ஆரம்பித்தான். துறவியைப் போல் காவியுடை அணிந்தான்.
அவனுக்கு ஷிர்டி பாபா மேல் பிரியமுண்டு. அவரது அவதாரமாக புட்டபர்த்தி சாய்பாபா இருக்கிறார் எனக்கேள்விப்பட்டு, அவரைத் தரிசிக்க வந்தான். பாபா, அவனை அழைத்தார்.
""கல்பகிரி! நீ ஆன்மிகத்தைப் படித்ததில் பயனில்லை. செய்த தவறிலிருந்து தப்பிக்கும்படி நீ படித்த நூல்களில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா! மேலும், செய்த தவறுக்கு என்றேனும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். அதை ஏன் மறுஜென்மம் வரை ஒத்திப்போடுகிறாய்? நீ இந்த காவி உடை, மாலைகளை கழற்றிவிட்டு போலீசில் சரணடை. உனக்கு மரணதண்டனை கிடைக்காது என உறுதியளிக்கிறேன். தண்டனை முடிந்து இங்கே வா. நானே உனக்கு ஜபமாலை அணிவிக்கிறேன்,'' என்றார்.
அந்த அறிவுரையை ஏற்று, அவனும் போலீசில் சரணடைந்தான். ஆனால், கிடைத்ததோ மரணதண்டனை. பாபாவின் வாக்கு மாறுமா! அவன், ஜனாதிபதிக்கு கருணை மனு சமர்ப்பித்தான். மரணதண்டனை ஆயுள்தண்டனையானது. தண்டனைக் காலம் முடிந்து வந்து, பாபாவிடம் ஆசிபெற்று, தன் ஆன்மிகப் பணியைத் தொடர்ந்தான்.

No comments:
Post a Comment