நவராத்திரி கொலுவில் வைக்க, புத்தம் புதிய பொம்மைகள் தான் வேண்டும் என்ற
அவசியமில்லை. நிறம் மங்கிய பழைய பொம்மைகளை ஏதேனும் ஒரு அடர்த்தியான கலரில் பெயிண்ட்
அடித்து, புதுப்பித்து பயன்படுத்தலாம்.
* கொலுவில் சாம்பிராணியை சின்ன டப்பாக்களில் ஆங்காங்கே வைத்தால், பார்க்க
நன்றாகவும் இருக்கும், நல்ல மணமாகவும் இருக்கும். எந்தப் பூச்சியும் கொலு
வைத்திருக்கும் இடத்தை அண்டாது.
* நவராத்திரி கொலுவில் பூங்கா போன்று செட் போடும் போது, கீழே கனமான பிளாஸ்டிக்
பேப்பரை போட்டு, அதன் மீது மண்ணை போட்டு பரப்பவும், மரத்தூளோடு, பச்சைக்கலரை
கலந்து, அதை மண்ணில் தூவி விட்டால் புல்வேளி போல் பசுமையாக அழகாக இருக்கும்.
* தினமும் கொலுவுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். பூஜை எல்லாம் முடிந்தவுடன்
கொலுவுக்கு ஆரத்தி எடுத்து யார் காலும் படாத இடத்தில் செடியில் ஆரத்தி தண்ணீரை
ஊற்றவும்.
* கொலுவுக்கு வருபவர்களுக்கு தினமும் பிரசாதம் வழங்கலாம். சுண்டல்,
ஐஸ்க்ரீம், இனிப்பு, கார வகைகள், ஸ்டிக்கர் பொட்டு ஆகியவற்றை வழங்கினால்
விருந்தினர்களும் சந்தோஷமாக செல்வார்கள்.
* கொலுவில் மலை அமைக்க, மண் கொட்டி கஷ்டப்பட வேண்டாம். மண்ணை கரைத்து ஊற்றி
காய்ந்த பழைய துணியை நான்கு குச்சிகள் மீது வைத்தால் மலை போல் இருக்கும். தேவையான
இடத்தில் மண்ணைத்தூவி கொள்ளலாம்.
* கொலுவுக்கு வரும் விருந்தினர்களுக்கு புது பொம்மைகளை தாம்பூலத்துடன்
சேர்த்து வழங்கினால், பொம்மைகள் சேரும். விருந்தினர்களுடன் வரும் குழந்தைகளும்
மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்வார்கள்.
* கோவிலில் சந்தனக் காப்பு செய்து, பூஜை முடிந்த பிறகு கலைத்த சந்தனத்தை
பிள்ளையார் போல் செய்து கொலுவில் வைத்து வணங்கினால், திருமணமாகாத பெண்களுக்கு
திருமண யோகம் கிட்டும்.
* முன்பெல்லாம் வீட்டில் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இருந்தால்
மரப்பாச்சியில் ஆண், பெண் பொம்மைகள் செய்து அலங்கரித்து கொலுவில் வைப்பார்கள்,
கொலுவில் எப்போதும் இடம் பெறும் மரப்பாச்சியிலான பொம்மைகள் இடம் பெறுவது சிறப்பாக
கருதப்படுகிறது.
No comments:
Post a Comment