Thursday, December 20, 2012

பணப்பெட்டியின் அளவு ரகசியம்

உங்கள் பணப்பெட்டியில் அதிகமாகப் பணம் சேர குபேரனது வாசம் இருக்க வேண்டும் அல்லவாப இந்த தேவரகசியத்தை காளிதாசரின் உத்தரகாலாமிர்தத்தில் உள்ள 8-வது காண்டம் பாடல் 37 சொல்கிறது... ஒரு பணப்பெட்டியின் அளவை. இதன்படி நீள அகலங்களை வைத்து விஷயம் அறிந்தோர் மூலமாகச் செய்து வைத்துக் கொள்ளலாம்.

காண்டப் பாடல்.


பேட்யா யாம விலாசயோர் வினிஹதிர் பக்தாகனக; சேசகே

த்வேகா தௌது ககக்ர மாத்ர விழுகா: ஸ்யு: கேசராஸ்தத்பலம் ஸெளம்யா ஸெளம்ய வசாச் சுபமிதி ஸ்யாதங்குலாத் யேனவை.

யத்ர ஸ்தாத் த்வியவாதிகம் த்வஜ இகஷ்டௌ ஸ்யுர்யவா அங்குலே.


இதன் பொருள்: ஒரு பெட்டியின் நீளத்தை அதன் அகலத்தால் பெருக்க வேண்டும். இது `யவ' என்னும் அலகில் இருப்பது அவசியம். பெருக்கி வரும் தொகையை 9-ஆல் வகுக்க மீதி 1,2,3 என்று வந்தால் அவை சூரியன் முதலிய கிரகங்களை குறிக்கும். `யவ' என்பது ஒரு அளவையாகிறது. `8 யவ' கொண்டது ஒரு அங்குலமாகும்.


1.சூரியன், 2.புதன், 3.சுக்ரன், 4.சனி, 5.சந்திரன், 6.செவ்வாய், 7.குரு, 8.ராகு, 9.கேது என்று வைத்துக் கொண்டு சுபகிரக எண் வந்தால் சுபம் எனவும், அசுப எண் வந்தால் பலன் குறைவு எனவும் அறியலாம். குபேரன் வாசம் செய்யும் பணப் பெட்டிக்கு சுப எண் வரும்படி பார்த்து செய்ய வேண்டும்.


இப்படி 12 ராசியினரும் தங்கள் தொழில் வியாபார ஸ்தலத்திற்காகச் செய்து கொள்ள முடியும். மேலும் அவரவர் நட்சத்திரத்துக்கு உரிய அதிதேவதை உருவத்தைப் பட உருவில் வைத்து பொருள் பணம் சேர்க்க அதிகமாகக் குவிய ஆரம்பிக்கும்.

No comments:

Post a Comment