Thursday, December 20, 2012

ஆயுஷ்ய ஹோமம்

நீண்ட நாள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் தவறாமல் ஆயுஷ்ய ஹோமம் செய்ய வேண்டும். குழந்தையின் முதல் பிறந்த நாளில் ஆயுஷ்ய ஹோமம் செய்து பலரின் ஆசியைப் பெற வைக்க வேண்டும். இந்த ஹோமத்திற்கு தேவைப்படும் இரண்டு முக்கிய பொருட்கள் :

1. கருங்காலி சமித்

2. சாதம் (அன்னம்) முதலில் சங்கல்பம் செய்து கொண்டு விக்னேசுவர பூஜை செய்து, கும்பத்தில் புண்யாஹ வசனம் செய்து ஆயுஷ்ய ஹோமம் செய்ய வேண்டும்.

குழந்தையின் நட்சத்திர ராசி பெயர் சொல்லி ஆயுஷ்ய ஸூக்தம் நட்சத்திர மந்திரம் சொல்லி கருங்காலி ஸமித், அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றிற்குத் தனித்தனியாக 108 அல்லது 1008 முறை மந்திரத்தைச் சொல்லி முதலில் ஸமித்தாலும், பிறகு அன்னத்தில் சரிபாதியைக் கொண்டும், பிறகு நெய்யாலும் ஹோமம் செய்ய வேண்டும்.

பின்னர் நெய்யால் 11 ரிக்குகளால் ஹோமம் செய்ய வேண்டும். அடுத்து சுவிஷ்டக்ருத் ஹோமம் செய்து பாதி அன்னத்தை, வெல்லம், நெய் சேர்த்துக் குழந்தைகளுக்குப் பிராசன மந்திரம் மூலம் மூன்று முறை நெல்லிக்காயளவு ஊட்டி விடவும். பிறகு குரு, தட்சிணை தர வேண்டும்.

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று மங்கள ஆரத்தி எடுத்து இனிதே ஹோமத்தை முடிக்க வேண்டும். எல்லா பிறந்த நாளிலும் தான தர்மங்களுடன் நட்சத்திர - ஆயிஷ்ய ஹோமமாக செய்தால் ஆயுள் பலம் கெட்டியாகும்

No comments:

Post a Comment