Thursday, April 11, 2013

பிராணாயம் செய்யும் வழிமுறை


பிராணாயம் செய்யும் வழிமுறை

பெருவிரலால் வலது நாசியை அடைத்துக்கொண்டு, ‘ஓம்என்ற மந்திரத்தை மனதார நான்குமுறை உச்சரித்த படியே இடது நாசி வழியாக மூச்சை நன்றாக உள்ளே இழுங்கள்.

அதன் பின்பு ஆட்காட்டி விரலை இடது நாசி மீது வைத்து, இரு நாசிகளையும் அடைத்து,’ஓம்என 16முறை மனதால் உச்சரித்தபடி மூச்சை உள்ளே இழுத்து நிறுத்தி வையுங்கள்.

பின்னர்,பெருவிரலை வலது நாசியிலிருந்து எடுத்து,’ஓம்என எட்டுமுறை உச்சரித்தபடி மெதுவாக மூச்சை வெளிப்படுத்துங்கள். உள்ளே இழுத்த மூச்சு அனைத்தையும் வெளியிடவேண்டும் என்பதால் மூச்சை வெளியே விடும்போது அடிவயிற்றை உள்ளிழுத்தபடி எல்லா மூச்சையும் வெளியேற்ற வேண்டும்.

மூச்சை உள்ளே இழுத்தல் ,உள்ளே அடக்குதல், வெளியே விடுதல் ஆகிய மூன்று செயல்களையும் செய்து முடித்தல் பிராணாயாமப் பயிற்சியினை ஒருமுறை நாம் செய்து முடித்துள்ளோம் என பொருள் .

பெருவிரலால் வலது நாசியை அடைத்து ஒருமுறை இந்த பயிற்சியை முழுமையாக செய்த பின்பு ஆட்காட்டி விரலால் இடது நாசியை அடைத்து மறுமுறை இந்த பயிற்சியை முழுமையாக செய்யவேண்டும்.இதுபோன்ற பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும்

1 comment:

  1. இடது நாசியில் இழுத்த காற்றை வெளியில் விடமால் மேலும் இரு நாசிகளில் காற்றை உள்ளே இழுப்பது தாங்கள் சரியாக எழுதவும்

    ReplyDelete