தன் தந்தைக்கு உபதேசம் செய்தது போல, அருணகிரிநாதருக்கு உபதேசம் செய்தவர் முருகன். என்ன உபதேசம் தெரியுமா? சும்மா இரு என்பது தான். இதற்கு எந்த வேலையும் செய்யாமல் இரு என்பது பொருளல்ல. பேச்சைக் குறை, இறைவன் கண்ணுக்குத் தெரிவான் என்பது தான். ஏதோ ஒரு பொருளை நினைத்து கலங்குவது, அது கிடைத்து விட்டால், இன்னொரு பொருள் கிடைக்குமா என்று கவலைப் படுவது. இந்த எண்ண ஓட்டம் தான், இறை சிந்தனையையே மனிதனிடம் இருந்து விரட்டுகிறது. இப்படிப் பட்ட எண்ண ஓட்டங்களை விட்டுவிட்டு சும்மா இரு என்றார் முருகன். இந்த மகாவாக்கியத்தை எல்லாரும் ஏற்று, தேவையில்லாமல் பேசுவதைக் குறைக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக பொருள்களை சம்பாதிக்க முயலக்கூடாது. இந்த இரண்டையும் செய்தாலே, இறைவனை சிந்திக்க நேரம் கிடைக்கும். அப்படி நினைத்தால் வானம் பொழியும். உலகம் செழிக்கும். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும்.
No comments:
Post a Comment