திருப்புகழில் அகரமும் ஆகி அதிபனும் ஆகிஅயனெனவாகி அரியெனவாகி அரனாகி என்ற பாடல் மிகவும் பொருள் பொதிந்தது. இதில் அகரம் எனப்படும் அ என்பதே தமிழில் முதலெழுத்து. அகரம் கலக்காத எழுத்தே தழிழில் இல்லை. அதுபோல, முருகப்பெருமான் எங்கும், எல்லாப்பொருளிலும் நிறைந்திருக்கிறார் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது. அதிபன் என்றால் உரிமையாளன். ஆம்...இந்த உலகத்திற்கு ஒட்டுமொத்த உரிமையாளர் முருகப்பெருமானே. அவரே, பிரம்மா, விஷ்ணு, சிவனாக உள்ளார் என்றும் சொல்வதுண்டு.
No comments:
Post a Comment