உலக அன்னையான அம்பிகை நவரசங்களை (ஒன்பது வகை பாவங்கள்) வெளிப்படுத்தியிருக்கிறாள். காமாட்சியாக தவத்தில் ஆழ்ந்திருந்தபோது, அமைதி (சாந்தம்) அவள் முகத்தில் குடிகொண்டது. சிவநிந்தை புரியும் அசுரர்களைக் கண்டபோதெல்லாம் அருவருப்புக்கு ஆளானாள். தடாதகை பிராட்டியாக மதுரையை ஆண்டபோது, வீரத்தை வெளிப்படுத்தினாள். சுடலை என்னும் பெயரில், சிவன் உக்ரதாண்டவமாடியபோது அச்சம் கொண்டாள். பகீரதனுக்காக கங்கையை தலையில் வைத்த போது அவளின் கண்களில் கோபம் கொப்பளித்தது. பாற்கடல் விஷத்தை அருந்திய நீலகண்டனைப் பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்தாள். இறைவன், தனது உடலில் சரிபாதி அளித்தபோது, சிருங்காரத்தால் முகம் சிவந்தாள். மாம்பழத்திற்காக விநாயகர் வலம் வந்து வணங்கிய போது ஹாஸ்யமாய் சிரித்தாள். உயிர்களுக்கு அருள்புரியும் சமயத்தில் எல்லாம் கனிந்த முகத்துடன் கண்களில் கருணை பொங்க காட்சி தருகிறாள்.
No comments:
Post a Comment