கடோபநிஷத் என்ற நூலில், நசிகேதன் என்னும் சிறுவன் எமதர்மனிடம் பெற்ற உபதேசம் பற்றி கூறப்பட்டுள்ளது. அவன் பெற்ற உபதேசம் பிரணவ மந்திரமான ஓம் பற்றியதாகும். எல்லா மந்திரங்களும் ஓம் என்றே தொடங்குகின்றன. எமன் நசிகேதனுக்கு நீண்ட ஆயுள், செல்வம், அரசபோகம் எத்தனையோ வரங்களை அளித்தான். ஆனால், அவற்றை மறுத்துவிட்டு ஓம் என்னும் பிரணவத்திற்குரிய விளக்கத்தை மட்டும் தன் வாழ்நாளில் கேட்டால் போதும் என்கிறான் நசிகேதன். ஓம் என்ற பிரணவத்திற்கு அந்த அளவு மகிமை இருக்கிறது. பிரணவம் என்றால் என்றும் புதியது எனப்பொருள். அதாவது, இந்த மந்திரத்திற்கு வயதே ஆகாது, என்றும் இளமையுடையது, அழியாதது, எக்காலத்திலும் எல்லாராலும் சொல்லப்படுவது. பகவத்கீதையில், பிரணவத்தின் பெருமையை அர்ஜுனனுக்கு கிருஷ்ணரும் உபதேசிக்கிறார். ஓம் வடிவமுள்ள உறுப்பாக விளங்குவது காது. அதனால் தான், காதில் நல்ல விஷயங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள். இதனால் தான் முக்கிய விஷயங்களை மற்றவர்களுக்கு தெரியாமல் காதும் காதும் வைத்தாற்போல் முடித்து விடுங்கள் என்கிறார்கள்
No comments:
Post a Comment