+
|
வ்யூகம் : வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், ஷங்கர்ஷணன் ஆகிய நான்கு வடிவங்களாக அவதரித்த நிலை. உலகத்தைப் படைக்க, காக்க, அழிக்க, தியானிக்க, பூஜை செய்யப்படவுமானவை இவை.
விபவம்: இது பகவான் எடுத்த அவதாரங்களைக் குறிப்பது. தன்வந்திரி, ஹயக்ரீவர், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், இப்படிப் பல அவதாரங்களை உலகில் ஒவ்வொரு சமயத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு வடிவில் அவதரித்தது. தருமத்தைக் காப்பாற்றவும், நல்லோர்க்கு அருளவும், தீயோரை தண்டிக்கவுமே அவதாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
அந்தர்யாமி : பரமாத்மாவாக எல்லா ஜீவராசிகளுக்கு உள்ளேயும் உறைபவராகவும், ஜீவாத்மாவாக உடலினுள் உயிர்போல இதயத்துள் வாழ்பவராயும், ஜீவனின் குற்றங்கள், குறைகளால் பாதிக்கப்படாதவராயும் இருக்கின்ற நிலை.
அர்ச்சாரூபம் : நாம் கோயில்களில் வணங்கும் கல், பொன், செம்பு, ஐம்பொன், மரம், சுதை போன்றவற்றால் செய்யப்பட்ட பலப்பல விக்ரஹங்களாக, அடையாள மூர்த்தங்களாய் இருப்பது. கோயிலில்வணங்கப்படும் இந்த சில வடிவங்களில், முழுமையாக கடவுள் வாசம் செய்கிறார். அர்ச்சாவதாரத்தில்தான் கடவுளின் தன்மை முழுமை அடைகிறது. எனவே ஆலயம் சென்று வழிபடுவது ஆண்டவனையே தரிசித்துப் பார்ப்பதற்குச் சமம்.
No comments:
Post a Comment