கோயில்களின் புனருத்தாரணப் பணியில் முக்கியமான அம்சம், யாகசாலை அமைப்பு. இது பற்றிய ஆகம சாஸ்திரங்களை அறிந்தவர் இன்று மிகச் சிலரே இருக்கிறார்கள். யாகசாலை பற்றிய சில குறிப்புகள். சிதிலம் அடைந்த கோயில்களைப் புனருத்தாரணம் (திருப்பணி) செய்து, புதியனவாக்கி, மேலும் நீண்ட காலம் நிலைத்து நிற்கச் செய்வதற்காகத் தனிப்பட்ட ஆகம சாஸ்திர விதிகள் சிலவற்றைத் தமிழ்நாட்டில் கையாளுகிறார்கள். கோயில் திருப்பணி நிகழ்ச்சிகளுள் முக்கியமானது மகாகும்பாபிஷேகம். அதாவது, கோபுர சிகரத்துக் கலசத்தையும் விக்ரகங்களையும் புனித தீர்த்தங்களால் நீராட்டுவது. அவற்றுக்கு பூஜையும் ஆராதனைகளும் நடத்துவது. இவற்றுள் மிக அடிப்படையான அம்சம், ஆகம சாஸ்திரத்தை ஒட்டி, கலசங்களை வைப்பதற்காகப் பல்வேறு முறைகளில் யாகசாலைகளையும் மேடைகளையும் அமைத்தல். கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன்பாக கோயிலில் உள்ள மூலவர் உட்பட எல்லா தெய்வங்களையும் - புண்ணிய தீர்த்தம் நிறைந்த கலசத்தில் எழுந்தருளச் செய்வார்கள். உரிய மந்திரங்களால் வழிபட்ட பின், அந்தத் தீர்த்தங்களால் கும்பாபிஷேகம் செய்வார்கள். மகா கும்பாபிஷேகம் நடத்தும்போது விக்ரகங்களை உரிய இடத்தில் மீண்டும் எழுந்தருளச் செய்வார்கள்.
யாகசாலையை அலங்கரித்தல்: யாகசாலை அமைக்கும்போது பந்தல் கால்களுக்கு உறுதியான மரங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். தென்னை ஓலைகளால் பின்னிய தடுக்குகளை மேல் கோப்பாக மூடுவார்கள். இவற்றை கேது என்பர். மழை, வெயில் முதலியவற்றிலிருந்து இவை யாகசாலையைக் காப்பதுடன் பந்தலுக்குக் கீழ் உள்ள பகுதிக்கெல்லாம் குளிர்ச்சியைத் தரும். கோயிலிலிருந்து பத்திரப்படுத்திய விக்ரகங்கள் எத்தனை உண்டோ, அத்தனைக்கும் கலசங்கள் வைக்க வேண்டும். அதற்குத் தேவையான இடத்தைக் கணக்கிட்டு, ஆகம சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி மேடை (வேதிகை) யின் பரப்பளவைத் தீர்மானிப்பர். அதற்கு வேண்டிய அளவில் யாகசாலை அமைப்பார்கள். யாகசாலைப் பகுதியை மூங்கில் பிளாச்சுகளையும் மண் சுவர்களையும் கொண்டு எளிய முறையில் தற்காலிகத் தேவைக்கு ஏற்றபடியே அமைக்கிறார்கள். இந்த எல்லைக்குள் சிவாச்சாரியார் சொன்னபடி வேதிகையை அமைப்பார்கள்.
வேதிகையின் மேல் கோப்பு, குடிசையின் மேல் கோப்பு போல் அமையும். மண் சுவர்களின் மேல் வண்ண வண்ணக் காகிதங்களை ஒட்டி அழகுபடுத்துவார்கள். வேதிகையின் மேல் கோப்புக்கு வெள்ளைத் துணியால் விதனாம் கட்டுகிறார்கள். இருபுறத்து ஓரங்களிலும் ஓலைத் தடுக்குகளை வைத்து காற்றும் வெளிச்சமும் வரும்படி செய்திருப்பார்கள். யாகசாலையின் அலங்காரம் உற்சவ காலத்துத்தேரின் அழகிய அலங்காரத்தைப் போன்றது. தெய்வ மூர்த்தங்களை வரைந்த வண்ணத் திரைச்சீலைகள், உள்ளே தூண்கள் இருப்பதுபோல் தோற்றம் அளிக்கும். இவற்றுக்கு தொம்பை என்ற துணிச் சீலைகளைப் பயன்படுத்துகிறார்கள். வேதிகையைச் சுற்றிலும் மூங்கில் பிளாச்சுகளால் தட்டி கட்டி அதன் பின்புறமாக மக்கள் நடமாட வழிவிட்டிருப்பார்கள். வேதிகையை மெழுகிக் கோலமிட்டு, செம்மண்ணால் அழகுபடுத்துகிறார்கள். பின்னர் அதற்கு மஞ்சள், குங்குமம் இடுகிறார்கள். யாகசாலை முழுவதும் வண்ணக் கோலங்கள் காட்சி தரும்.
புண்ணிய தீர்த்தங்களை நிரப்பிய கலசங்களை வைக்கும் பகுதியை ஸ்தண்டிலங்கள் வேதிகைகள் என்று இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். சம தரையில் நவதானியங்களை இறைத்து அவற்றின் மேல் கலசங்களை வைக்கப்படும் பகுதியை ஸ்தண்டிலம் என்பர். இவற்றின் எதிரில் ஹோமங்கள் நடக்கும். அப்படியின்றி, கலசங்களை மேடைகட்டி அதன் மேல் வைத்தால் அதை வேதிகை என்பர். யாகசாலை அமைப்பு, அனுபவம் மிக்க கலைஞர்களால் ஓலைப்பின்னல் வேலைப்பாடுகளால் அமையும். ஒரு யாக சாலையை அமைக்க இரண்டு, மூன்று லட்ச ரூபாய்கூட செலவாகும். கும்பாபிஷேகத்துக்கு யாகசாலை அமைப்பு மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது

No comments:
Post a Comment