Tuesday, June 2, 2015

குருவின்அருளை நிறைவாகப்பெற உதவும்சூட்சும இரகசியங்கள் !

குருவின்அருளை நிறைவாகப்பெற உதவும்சூட்சும இரகசியங்கள் !
குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரைஎன்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்துநான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின்குருவாக மாறினார்.
அத்துடன்திட்டையில்கோயில்கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன்
கிரகம்ராஜகிரகம்என்று அழைக்கப்படுகிறது.
இவர்இடம்பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி,தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன்என பதினெட்டு பெயர்கள்உள்ளன. இவரின்சொந்த வீடுகள்தனுசு மற்றும்மீனம். ஒளிபடைத்த ஞானிகளையும், மேதைகளையும்உருவாக்குபவர்இவர்.
மனித வாழ்க்கையின் ஏற்றம்-இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின்
அடிப்படையில்தான்அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரஹங்கள் எனப் போற்றப்பெறும் நவநாயகர்களே ஆவர். ஒன்பது கிரஹங்களில் ஐந்தாவதாக - நடு நாயகராகத் திகழ்பவர் குருபகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரஹம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல்உண்டு.
அதனால்தான் ”குரு பார்க்க கோடி நன்மை” ”குரு பார்வை தோஷ நிவர்த்தி”
என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப்பெறுகின்றது. குரு பெயர்ச்சி என்பது குருபகவான் ராசி மண்டலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றோர் ராசிக்குச் செல்லும் நிகழ்வாகும். இந்த குருப்பெயர்ச்சி என்பது சுமாராக ஓர் ஆண்டிற்கு ஒருமுறை நிகழ்வது ஆகும். நவகிரகங்களில் பூரண சுபகிரகமான குருபகவான், ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் பன்னிரண்டு ராசிகளைச் சேர்ந்த அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய பலாபலன்களே கோசார பலன்கள்எனப்படும்.
பொதுவாக குருபகவான்ஒரு ராசிக்கு 2, 5, 7, 9, 11 போன்ற இடங்களில்சஞ்சரிக்கும்போது சுப பலன்களையும் 1, 3, 4, 5, 8, 10, 12 இடங்களில் சஞ்சரிக்கும்போது அசுப பலன்களையும் வழங்குவார் என்பது விதி. ஆனால், இது பொதுவான விதிதான். அவரவருடைய சுய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகளின்படியும், தசாபுத்திகளின்படியும்கோசார பலன்கள்மாறுபடும்.
1ஒவ்வொருவரும் குரு பெயர்ச்சியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் காரணம் ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற பெருமையும் அந்தஸ்தையும், அதிகாரத்தையும், பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி, வியாழன் என்று அழைக்கப்படும் குருபகவான். இவர் தேவர்களுக்கு எல்லாம் குருவாக இருந்து போற்றப்படுகிறார்.
திருச்செந்தூரில் சூரனின் வரலாற்றை முருகப்பெருமானிடம் தேவர்கள் சார்பாக எடுத்துக் கூறியவர் குரு பகவான் என்பதாலும், முருகனே குருவிற்கெல்லாம் குருவாக இருப்பதாலும் திருச்செந்தூருக்கு குரு ஸ்தலம் என்கிற பெருமை ஏற்படுகிறது. எவர் ஒருவர் திருச்செந்தூருக்கு வாழ் நாளில் ஒரு முறையேனும் சென்று தரிசனம் செய்கிறாறோ அவருக்கு குரு அருள் நிச்சயம் கிடைக்கும் என்பது திண்ணம்.
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் என்று பார்த்தால் பொருட்செல்வமும், மழலைச் செல்வமும். இந்த இரண்டையும் தரும்
கிரகம் குருபகவான். குரு பலம் வந்துவிட்டதா திருமணம் செய்யலாம் என்று
கேட்காதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு குருவின் பெருமை உண்டு.
நம் ஜாதகத்தில் குரு பலமாக இருப்பதும் கோட்சார ரீதியாக குரு 2,5,7,9,11 ஆகிய இடங்களில் வரும் போது குரு பலம் வந்து விட்டது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
குரு முழு சுப கிரகமாக இருப்பதால் ஜோதிட விதிப்படி அவருக்கு ஸ்தான, கேந்திர தோஷம் ஏற்படுகிறது. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது சிறப்பானது அல்ல. இதை குறிப்பிடும் வகையில்தான் ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற பழமொழி ஏற்பட்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாக தேடி வரும். ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.
குருவின் காரகத்துவம் எனப் பார்க்கும் போது உடலில் குடல் பகுதி, மூக்கு,
கொழுப்பு, தொடை, வீட்டில் கடவுள் அறை, நீதிபதி, ஆசிரியர், வழங்குபவர், கல்வி அமைச்சர், மேலாளர், வழக்கறிஞர், கணக்காளர், கணக்காய்வாளர், வேதங்கள், கோயில்கள், தத்துவம், கடவுள், நீதிபதி, மரியாதை, உண்மை, பொறுமை, தன்னடக்கம்.
2
எல்லாவிதமான சுபம். பெரிய அளவிலான பணம். நேர்மை. சிந்தனை. சட்டபடியான ஆணை. பட்டு. பருத்தி. மஞ்சள்தொழில்கள். மிகப்பெரிய நிறுவனங்களின்கூலியாட்கள். கல்லீரல். தசைகள். மதகுருக்கள். தர்மகர்த்தாக்கள். திருப்பனி குழுக்கள். கோயில் ட்ரஸ்டிகள். எல்லாவற்றிலும் கவரவம் பார்ப்பவர்கள். திருப்தியற்ற மனிதர்கள்.
ரகசியமாக பகையை தீர்த்துக்கொள்பவர்கள், சந்தோஷம். குழந்தை. பூர்வீகம்.
ஆச்சார்யன். மதகுரு. விந்து. ஜீவன். பழங்கள். பாரம்பரியமிக்க. உணவுகள்.
வம்சம். முப்பாட்டன். பிராமணன். தங்கம். பட்டாடை ஆண்களுக்கு உயிர். மதம். மதத்தன்மை. எமபயம் நீக்கும். தசைகள். கல்லீரல். புற்று. வயிற்றுப் பகுதி நோய்கள். மஞ்சள்காமாலை. தட்சிணாமூர்த்தி. இருந்தாலும் பார்த்தாலும் சுபம்.
எல்லாவற்றிற்கும்உயிர், என ஒரு நீண்ட பட்டியல் கிடக்கிறது. ஒருவனின் முன்வினைக் கர்மப்படிதான் குரு அவனுடைய ஜாதகத்தில் வந்து அமர்வார். குரு நல்ல இடத்தில் அமர்ந்திருந்தாலும், நல்ல சேர்க்கை அல்லது பார்வை
பெற்றிருந்தாலும், அத்துடன் அஷ்டகவர்கத்தில் அதிகப்பரல்களைப் பெற்றிருந்தாலும், அவனுடைய முன்வினைகளில்குறைகள்ஏதும்இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.
ஓராண்டு கால சஞ்சாரத்தில்! இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல
தசாபுத்திகள் நடந்தால்தான் கிடைக்கும். அதே போல குரு சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட அந்த இடத்தில் உள்ள தனது பரல்களை வைத்துத்தான் பலன் கொடுப்பார். அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும், சுற்றிவரும் இடத்தில் தன்னுடைய கட்டத்தில் உள்ள பரல்களுக்குத் தக்கபடிதான் பலன்தருவார்.
இந்த குரு கவசத்தை வியாழன் தோரும் பாராயணம் செய்து உங்கள் ராசிக்கு
சொல்லியுள்ள பரிகாரங்களைக் கடை பிடித்து வந்தால் இந்த குரு பெயர்ச்சி நிச்சய நல்ன்களைத் தரும்.
குரு கவசம்
1.வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே! உன்னை தேனான
சொல்லெடுத்து செவி குளிர போற்றுகின்றேன் காணாத இன்பம்
யாவும் காண நீவழி வகுப்பாய் மீனமும் தனுசும் உந்தன் மேலான வீடதாகும்!
2.பொன்னிற முல்லையொடு புஷ்ப ராகத்தை ஏற்றாய்!
வண்ணத்தில் மஞ்சள் கொண்டாய் மரத்தினில் அரசை ஏற்றாய்!
எண்ணத்தில் நிற்கும் தேவா! எளிதினில் வெற்றி தாராய்! மண்ணினில்
3.பதினாறு ஆண்டை மறவாமல் நீயும் ஏற்றாய்!
சுண்டல் நைவேத்யதால் தொல்லைகள் தீர்ப்பவன் நீ!
கொண்டதோர் யானை உந்தன் கொண்டாடும் வாகனம் தான்!
தந்திடும் பதவி வாய்ப்பும் தடையில்லாக் காரிய சிறப்பும்
வந்திடும் பிள்ளைப் பேறும் வழங்குதல் உன் பொறுப்பே!
4. பொருளோடு புகழைத் தந்து போற்றிடும் வாழ்வைத் தந்து
வருங்காலம் அனைத்தும் செல்வம் வரும் காலம்ஆக்கி வைத்து
பெருமைகள் வழங்க வேண்டும் !
5. பேரருள் கூட்ட வேண்டும்! அருள்மிகு குருவே உன்னை
அடிப்பணிந்து வணங்குகின்றேன்!
வருடம் ஓர் ராசி வீதம் வட்டமாய் சுழன்று வந்தே தருகிற
பலனை நாங்கள் தங்கமாய் ஏற்றுகொள்வோம் ! வருகிற நாட்கள்
எல்லாம் வசந்தமாய் மாறுதற்கே அருள்தரும் உனது பார்வை
அனுதினம் எமக்கு வேண்டும்!
6. குருவே நீபார்த்தால் போதும் கோடியாய் நன்மை சேரும்!
திருவருள் இணைந்தால் வாழ்வில் திருமணம் வந்து கூடும்!
பொருள் வகை பெருகும் நாளும் பொன்னான வாழ்வும் சேரும்!
அருள் தர வேண்டி உன்னை அன்போடு துதிகின்றோமே!
ஜோதிட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பின்வரும் நற்செயல்களை செய்து, குருவின்அருளைப் பெறலாம்.
· வியாழக்கிழமைகளில், பகலில் விரதம் இருந்து, மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று, தட்சிணா மூர்த்தியை வழிபடுவதன்மூலம்குருவின்அருளைப்பெறலாம்.
· வியாழக்கிழமைகளில், கொண்டக் கடலை சுண்டல் செய்து, பக்தர்களுக்கும்,
ஏழைகளுக்கும்தானம்செய்வதாலும், குரு பகவானின்அருளைப்பெறலாம்.
· ஒரு ஏழைப் பெண்ணின் பிரசவ செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.
· ஒரு ஏழைக் குழந்தையின் கல்விச் செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.
· தாங்கள் படித்த பள்ளியின்ஆசிரியர் எவரேனும், ஓய்வு பெற்றவர் இருப்பின் அவரைத் தேடிச் சென்று வணங்கி, அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்படின் செய்து, ஆசி பெறுவதால், குருவின்அருளைப்பெறலாம்.
· வியாழக்கிழமை மாலை வேளைகளில், வீட்டில் தீபத்தின் முன் அமைதியாக
உட்கார்ந்து குருவே துணை என்று 108 முறையோ 1008 முறையோ அல்லது அதற்கு மேலோ மனதில் சொல்லி வந்தால் போதும், தங்கள் மனக்குழப்பத்தை தீர்த்து, குடும்பத்தில்அமைதியை நிலவச்செய்வார்.
· சிவனை வழிபடுபவர்கள் எனில் வேதத்தில் சொல்லப்பட்ட பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” என்ற மூல மந்திரத்தை மனதில் தியானித்தால் மௌன குருவான சிவனே, உங்களுக்கு வழித்துணையாக வருவார், இது உறுதி !
• மடப்புரம் தட்சிணா மூர்த்தி சுவாமிகளின் சமாதியில் வழிபாடு செய்தாலும்
குருவின் அருள் கிடைக்கும்.
• பெருவள நல்லூரில் (லால்குடி அருகில்) உள்ள நந்தி அடிகள் சமாதியில்
வழிபாடு செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்.
• மந்திராலயம் ராகவேந்திரர் சமாதியில் வழிபாடு செய்தாலும் குருவின்
அருள் கிடைக்கும்.
• ஷீரடி சாய் பாபா சமாதியில் வழிபாடு செய்தாலும் குருவின் அருள்
கிடைக்கும்
• திருவண்ணாமலை ஸ்ரீ ஷேசாத்ரி சுவாமிகள் சமாதியில் வழிபாடு
செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்
• திருவண்ணாமலை ஸ்ரீ ரமணர் சமாதியில் வழிபாடு செய்தாலும் குருவின்
அருள் கிடைக்கும்
• வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு
வழிபாடு செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்
• திருவான்மியூரில் உள்ள ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் சமாதியை வழிபாடு
செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்
குரு வார விரதம்:
வியாழக்கிழமை குரு வாரம் என்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்தால்
எல்லா நன்மைகளும் நம்மை தேடி வரும். ஏழ்மையில் இருப்பவர்களும்,
திருமணம் ஆகாதவர்களும், குடும்பத்தினை பிரிந்து வாழ்பவர்களும், குழந்தை
இல்லாதவர்களும் வியாழன் தோறும் விரதம் இருந்து குரு பகவானை
வணங்கி வந்தால் நலன் விளையும் என்கின்றன நமது சாத்திரங்கள்.
நாம் வியாழன் தோறும் விரதம் இருந்து நமது பிரச்சனைகளை முன் வைத்து
சாயிபாபாவிற்க்கு விரதம் இருந்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.
குருவார வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் ஆரம்பித்துச் செய்வது
சிறப்பாகும். சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக் கடன்களை
முடித்துவிட்டு, மஞ்சள் நிறம் ஆடையில் பிரதானமாக இருக்கும்படி ஆடை
அணிந்து, நெற்றியில் சந்தனம் அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை
ஆரம்பித்து செய்யவேண்டும்.
தென்முகம் கடவுளான தட்சணாமூர்த்தியின் திருவுருவ படம் அல்லது
ஒருவருடைய பெருமதிப்பிற்குரிய ஆன்மிக குருவாக விளங்குபவர்கள்,
அல்லது மனதிற்கு உகந்த மகான்களின் திருவுருவப் படங்களை பூஜைக்குப்
பயன்படுத்தலாம்.
ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் மேற்கூறிய தெய்வத்திருவுருவங்களோ
ஆன்மிக குருமார்களின் படங்களையோ நன்கு துடைத்து பொட்டிட்டு மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து நான்கு அல்லது ஆறு தீபங்களை (அகல்) ஏற்றிவைத்து, இனிப்புகளோ, கற்கண்டோ நைவேத்தியம் செய்து, தூப, தீப, கற்பூர ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.
அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதமிருந்து அடுத்த நாள் அதை
நிறைவு செய்யலாம். இல்லாவிடில் காலையில் மட்டும் பூரண உபவாசம் இருந்து மதியம் உணவு எடுத்துக் கொள்ளலாம். காலையிலிருந்து மதியம் சாப்பிடும் வரையில்மவுன விரதம்இருப்பது மிகவும்சிறந்ததாகும்.
குருவின் ஆதிக்க நிலையின் வெளிப்பாட்டை ஒருவருக்கு அமையும் குழந்தைச் செல்வங்கள், இஷ்ட தெய்வம், ஆசிரியப் பெருமக்கள், ஆன் மிக குருமார்கள், சன்னியாசிகளின்ஆசிகள்ஆகியவற்றின் மூலமாக அறிந்து அதை நடை முறையில் உணர்ந்து கொள்ளலாம்.
முக்கியமாக வயதில் மூத்தவர்களிடம் பணிவுடனும், பிரியமுடனும் இருப்பது
பிரகஸ்பதியான, குருவான, பொன்னன் எனப்படும் வியாழனுக்கு உகந்ததாகும்.
அதன்மூலம்கிடைக்கும்ஆசீர்வாத பலம்விலைமதிப்பற்ற சொத்தாகும்.
மகேஸ்வர பூஜை:
திருவண்ணாமலையில் ஸ்ரீ தயவு ஆஸ்ரமத்தில் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்
மூலம் செய்யப்படும் மகேஸ்வர பூஜை குருவையே தரிசிக்க வைக்கும்
என்றால் மிகை இல்லை. சன்னியாசிகளை அமரவைத்து அன்னதானம்
செய்து மகேஸ்வர காலமான 12 முதல் 1 மணிக்குள் சிவ பெருமானுக்கு
எப்படி பூஜை செய்யப்படுகிறதோ அது போலவே சிவனடியார்களுக்குச்
செய்யப்படுகிறது. அன்னதானத்தின் மகிமையை அறியாதார் யாரும் இல்லை.
ஆனால் சிவனடியார்களை அமர வைத்து அவர்களை சிவனாகவே பாவித்து
செய்யப்படும் அன்னதானத்தின் மகிமையை அனுபவித்து பார்த்தல்தான்
தெரியும். எந்த ஒரு லாப நோக்கமின்றி முற்றிலும் இறை பணியாகவே இந்த
பூஜை செய்யப்படுகிறது. இது எல்லாப் பரிகாரங்களையும் விட மேலான
பரிகாரம் என்று எனது குருநாதர் திருவண்ணாமலை ஸ்ரீ வகாப் ஜோதி அக்பர்
சுவாமிகள் மீனாட்சி நாடி மூலம் சொல்லியுள்ளார்கள்.

No comments:

Post a Comment