Tuesday, June 9, 2015

வலம்புரிச் சங்கின் மகிமை.

வலம்புரிச் சங்கின் மகிமை.
வலம்புரிச் சங்கு என்றும் வலது கைச் சங்கு என்றும் மற்றோரு. பெயரான தட்சிணாமூர்த்தி சங்கு என்றும் வழங்கி வரும் சங்கு இந்துக்களுக்கு ஒரு இறைத் தன்மையுடன் கூடியது!
இது ஒரு மிக மிக அசாதாரணமான ரகத்தைச் சேர்ந்தது! 
கடலிலிருந்து எடுக்கப்படும் எத்தனையோ லட்சசோப லட்ச. சாதாரணமான சங்குகளுக்கு இடையில் கிடைக்கும் ஓன்று.
அதனுடைய. Columella ஐ மேலும் apex ஐ கீழேயும் வைத்தால் அதனுடைய குழி அல்லது பள்ளம் இடது பக்கம் இருக்கும். ஆனால் வலம்புரிச் சங்கோ மேற்சொன்ன நிலையில் வைக்கப்படும் பொழுது அதனுடைய குழி அல்லது பள்ளம் வலது பக்கம் இருக்கும்.
இந்த வலம்புரிச் சங்குகள் விலை மதிபொண்ணாதவை.
பெரிய கோவில்களில் மூலவர்க்களுக்கு அபிஷேகம் பண்ணும் காலங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன.
வலம்புரிச் சங்கைப் பார்ப்பதே பெரும் புண்ணியமாகும்.

No comments:

Post a Comment