Tuesday, January 12, 2016

இந்துக்களுக்கு 33 கோடி கடவுள்கள் இருக்கிறார்கள்

இந்துக்களுக்கு 33 கோடி கடவுள்கள் இருக்கிறார்கள்
வேதங்கள் 33 ‘கோடி’ கடவுள்களை குறிக்கிறது. ‘கோடி’ என்ற வார்த்தை உச்சத்தை அல்லது சிறந்து விளங்குபவையை (உச்ச கோடி அல்லது நிம்ன கோடி) குறிப்பிடுகிறது. இங்கு கோடி என்றால் எண்ணிக்கை கோடியல்ல.
அதனால் அதற்கு அர்த்தம் – நம்மிடம் வல்லமை படைத்த 33 கடவுள்கள் (8 வசு + 11 ருத்ரா + 12 ஆதித்யா + 2 ஆகாயம் மற்றும் பூமி = 33 கடவுள்கள்) இருக்கிறார்கள் என சமயத்திரு நூல்கள் கூறுகிறது.
இந்து மதம் ஜாதி அமைப்பை வாதாடுகிறது
நாம் சொன்னதை போல் இந்து மதம் என்பது வாழ்க்கைக்கான வழியாகும். கண்டிப்பாக அது ஜாதி போன்ற பிரிவினையை உண்டாக்கும் அமைப்பிற்காக ஆதரிப்பதில்லை. பழங்கால வர்ணா அமைப்பின் படி தான் ஜாதிகள் உருவாயிற்று.
அதன் படி, சமுதாயத்தில் தொழில் ரீதியான அடிப்படையில் தான் ஜாதிகள் பிரிக்கப்பட்டது. மேலாதிக்கத்தின் படி, ஒரு குறிப்பிட்ட வர்ணா வேகத்தை பெற தொடங்கியதும், ஜாதியில் உள்ள பிரிவினை அமைப்பு உருவாயிற்று. ஆரம்பித்த நாள் முதல் இவ்வகையான அமைப்பை இந்து மதம் ஒரு போதும் ஆதரித்ததில்லை.
உருவ வழிபாட்டை பரப்புகிறது இந்து மதம்
உருவ வழிபாடு என்பது இந்து மதத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகும். கடவுளை உணர்வதற்கான கீழ் மட்ட அல்லது முதல் படியே உருவ வழிபாடு என வேதாந்தம் கருதுகிறது. தெய்வீகத்தின் பௌதிக வடிவமே சிலை. மனிதர்களை ஒருமுனைப்படுத்த இது உதவும்.
மேலும் கடவுளை உணர்வதற்கான அடுத்த கட்டத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும். உருவ வழிபாட்டில் ஈடுபடுவதால், மனதளவில் மந்திரம் ஜெபிக்கும் அடுத்த கட்டத்திற்கு ஒருவர் செல்கிறார். அப்படியே தெய்வீகத்தை உணரும் கடைசி நிலை வரை செல்கிறார். ஒரு முடிவு என்பதை குறிப்பதற்காகவே இந்த சிலைகள். சிலை என்பது பார்வைக்கு தென்படும் ஆதரவு;
நமக்கு உதவும் கடவுளை ஒருமுனைப்படுத்தி வணங்க வேண்டும் என்பதை நினைவு கூறும் விதம்.
இந்துக்கள் பசு மாடுகளை வணங்குகிறார்கள்
இந்த உலகில், தாய்வழி மரபை கொண்ட உயிரினமாக மாடுகளை சித்தரித்துள்ளார் மகாபாரதத்தை எழுதிய வேத வியாச முனிவர். அதிக அளவிலான தியாகத்தை குறிக்கிறது பசு மாடு. தன்னால் முடிந்த அனைத்தையும் வாரி வழங்கி, அதற்கு கைமாறாக தண்ணீர் மற்றும் புற்களை மட்டுமே திரும்பி பெறும் உயிரினமாகவே இந்து மதத்தில் பசு பார்க்கப்படுகிறது.
அது நமக்கு பால், வெண்ணெய், சீஸ், தயிர், மற்றும் இதர பால் பொருட்களை அளிக்கிறது. பசுமாடு என்பது நமக்கு பயனளிக்கும் உயிரினம் என்பதால், அதனை வழிபடும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. அதனை வழிபடுவதால், வருங்காலத்தில் அந்த இனம் எந்த ஒரு ஆபத்துமின்றி அழிந்து விடாமல் இருப்பதை நாம் உறுதி செய்கிறோம்.
கர்மா- அநுமானிக்கப்பட்ட கருத்து
கர்மா என கூறப்படும் ஒவ்வொரு மனிதர்களின் செயல்களுக்கும், அதற்கு சரிசமமான எதிர் இயக்கம் இருக்கும் என கூறுவது அநுமானிக்கப்பட்ட கருத்தாகும். ஆனால் பலரும் கர்மாவின் கருத்தை உணர்ந்திருக்கிறார்கள். அது நம்மை வாழ்க்கை முழுவதும் எப்படி துரத்தும் என்பதையும் அறிந்திருக்கிறார்கள். அதனால் கர்மா என்பது அனைவரையும் சம்பந்தப்படுத்தக்கூடிய மிக முக்கியமான நடைமுறை கருத்தாகும்.

No comments:

Post a Comment