Wednesday, January 13, 2016

கடமையை வலியுறுத்திய பரசுராமர்!

கடமையை வலியுறுத்திய பரசுராமர்! 

அறங்காவலராக
இருக்க வேண்டிய அரசர்களே அதர்மத்தில்
திளைத்த வேளையில்தான்... பரசுராம அவதாரம் நிகழ்ந்தது.
துஷ்ட க்ஷத்திரியர்களை வேருடன் அழித்து அறத்தை
நிலைநாட்டினார் பரசுராமன்.

மற்ற அவதாரங்களை விட பரசுராம அவதாரத்துக்கு
தனிச்சிறப்பு உண்டு. ரக்ஷகர்கள், பக்ஷகராக
மாறியதைத் திருத்துவதற்காக ஏற்பட்ட இந்த அவதாரம்,
உலக சுகங்களில் ஈடுபடவில்லை;

லீலா வினோதங்களில் ஈடுபட்டுதனது பெருமையை வெளிப்படுத்தவில்லை. சாதாரண குடிமகனாகத் தோன்றி
அறம் காத்த அவதாரம் இது.

மற்ற அவதாரங்கள் கடமை முடிந்ததும் மறைந்து
விடும். ஆனால், சிரஞ்ஜீவியாக என்றென்றும்
நிலைத்திருக்கும் அற்புத அவதாரம் ஸ்ரீபரசுராமன்.
இவரை ராமாவதாரத்திலும் தரிசிக்கலாம்;

ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திலும் தரிசிக்கலாம். ஸ்ரீராமனுக்கு வைஷ்ணவ தனுசை அளித்தருளினார்ஸ்ரீபரசுராமன். அறம் தவறிய அரசனான
ராவணனை அழிக்க ஸ்ரீராமனுக்கு உதவி
புரிந்தார்.

ஸ்ரீராமன் அறத்தை நடைமுறைப்படுத்திக் காட்டினார்;
ஸ்ரீகிருஷ்ணன் தத்துவ விளக்கம் தந்தான்.
அதேநேரம்... அறத்தின் இயக்கத்தை இடையூறு இன்றி பாதுகாக்கவும்
வேண்டுமே?

அப்போதுதானே அறம் தழைத்திருக்க முடியும்.அதைத்தான் செய்தார் ஸ்ரீபரசுராமன். அறத்தைப் பாதுகாக்கத் தவறிய க்ஷத்திரியர்களை தண்டித்தார்
அவர்.

மற்ற அவதாரங்களுக்கு கிடைத்தஅங்கீகாரம் இவருக்கு இல்லையே என்பதுகூட குறை
அல்ல; நிறைதான். நிறைபொருள் அங்கீகாரத்தை எதிர்பார்க்காது.

பகவானின் அவதாரங்களில் 6-வதான ஸ்ரீபரசுராம அவதாரம்...எவரது தூண்டுதலும் இல்லாமல், கடமையை உணர்ந்து செயல்பட
வேண்டும் என்று அறிவுறுத்தும் அவதாரம்!

ஜமதக்னி முனிவருக்கு புதல்வனாகத் தோன்றிய ஸ்ரீபரசு ராமனிடம்,
அந்தணருக்கு உரிய அமைதியும் க்ஷத்திரியர்களுக்கான
ஆற்றலும் குடிகொண்டிருந்தன. எனவே, வெற்றி அவரைத்
தேடி வந்தது.

ஹைஹய தேசத்து அரசன் கார்த்த
வீர்யார்ஜுனன் ஆயிரம் கைகள் கொண்டவன்.
இவன், ஜமதக்னி முனிவரின் ஆஸ்ரமத்தில்
இருந்த பசுவை கவர்ந்து சென்றான்.

தெய்வப் பசுவை மீட்டு வருமாறுமகனுக்கு உத்தரவிட்டார் ஜமதக்னி. இதை ஏற்று, கார்த்தவீர்யார்ஜுனனை
அழித்து பசுவை மீட்டு வந்தார்
பரசுராமன்.

மற்றொருமுறை... ஸ்ரீபரசுராமனின் தாயார் ரேணுகை நீர்
எடுத்துவரச் சென்றாள். அங்கே, சித்திநாதன் என்பவன்
மனைவியருடன் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதைக்
கண்டு மெய் மறந்தாள்.

மனைவிநீர் எடுத்து வர காலதாமதமாவது
கண்ட ஜமதக்னி முனிவர், அவள்
மனம் தடுமாறி நிற்பதை அறிந்தார்.
அவளை அழிக்கும்படி மகனுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, தாயை வதம் செய்தார்பரசுராமன். இதனால் மகிழ்ந்த முனிவர்,
'என்ன வரம் வேண்டும் கேள்?'
என்றார். உடனே, 'அன்னையை உயிர்ப்பியுங்கள்'
என்று வரம் கேட்டு தாயைக்
காப்பாற்றினார்.

இந்த நிலையில், கார்த்த வீர்யார்ஜுனன் கொல்லப்பட்டதற்கு
பழிதீர்க்கப் புறப்பட்ட அவனின் புதல்வர்கள், ஜமதக்னி
முனிவரை கொன்றனர்.

இதனால் கோபம் கொண்டபரசுராமன், அறம் தவறிய க்ஷத்திரியர்களைக்
கொன்று குவித்தார். பிறகு தனது பாவங்கள்
தீர, தீர்த்தாடனம் சென்று தவத்தில் ஆழ்ந்தார்
என்கின்றன புராணங்கள்.

தந்தையின் சொல்லுக்கு அர்த்தம் உண்டு; அதை விமர்சிக்கக்கூடாது
என்பதை நடைமுறைப் படுத்தினார் பரசுராமன். மனத் தூய்மை இழந்த
ரேணுகையை தூய்மையாக்கும்படி கட்டளையிட்டார் ஜமதக்னி.

அதன்படியே செய்தார் பரசுராமன். இதன் பலனால் பரசுராமன்பெற்ற வரம், அவரின் அன்னையை
தூய்மை யானவளாக உயிர்ப்பித்தது!

ஆம்... வாழ்க்கையின் குறிக்கோளும், அதை அடைவதற்கான வழிமுறைகளும்
தெரிந்துவிட்டால் வெற்றி நிச்சயம். இளமையிலேயே
இவற்றை அடையாளம் கண்டு மனதில் இருத்துவது
சுலபம்.

இதற்கு உறுதுணையாக இருக்கும்இதிகாசங்களையும் புராணங்களையும் உறுதியாகப் பற்றிக் கொண்டால் நீங்களும்
ஜெயிக்கலாம் ஸ்ரீபரசுராமனைப் போல!

No comments:

Post a Comment