Friday, January 8, 2016

கையில் காப்புக் கயிறு கட்டுவதன் அறிவியல் பார்வை.

கையில் காப்புக் கயிறு கட்டுவதன் அறிவியல் பார்வை.
பெரும்பாலனவர்கள் மஞ்சள், கறுப்பு, சிவப்பு நிறங்களில் கயிறுகட்டுவார்கள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒருகவசமாக செயல்படும். பட்டுநூலினால் ஆன காப்புக்கயிறுகளை அணிவது அதிக பலன் தரும். மேலும் செம்பு, வெள்ளி, தங்கம், ஐம்பொன்னில் காப்பு செய்து போட்டுகொள்வார்கள். இது சிறப்பானதாக இருந்தாலும் பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை பிரபஞ்ச சக்திகளையும், நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை அதனால் இவைகளை நூல்களாக தரித்து கைகளில் அணியலாம்.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அணிய வேண்டும். பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே இவற்றினாலான ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது, மந்திரங்கள் சொல்வது அதிக பலன் தரும். இது போலவே காப்புக்கயிறும் மந்திரங்களை ஈர்க்கும்.
இது போலவே நாம் அணியும் காப்புக்கயிறும் மந்திரங்களின் ஆற்றலை சேமித்து நம்மைக் காக்கும் மந்திரிக்கப்பட்ட எலுமிச்சங்கனியும் நம்மைக் காக்கும் ஆற்றல் கொண்டது. நாயுருவி, சீதெவிசெங்கழுநீர், அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி குளிசத்தில் (தாயத்து) அடைத்து அணிவார்கள். காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டொலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவதும் ஒரு வகையில் காப்பதே.
நாகரிகம் முற்றி வரும் இக்காலத்தில் பட்டையாக திருநீரு அணிய தயங்குபவர்கள் காசிக்கயிறு, அம்மன் கயிறு போன்ற காப்பு கயிறுகளை நாமும் அணிந்து, குழந்தைகளுக்கும் அணிவித்து காத்துக்கொள்ளுங்கள். அது நீங்கள் ஒரு இந்து என்று உணர்த்துவதாகவும் நம் சமய நம்பிக்கையை வளர்ப்பதாகவும். இருக்கும்.
சில சமுதாயங்களில் மணமகன் பெண்ணுக்கு எப்போதும் உன்னைக் காப்பேன் என்று ரசை அணிவிக்கும் சடங்குகள் உண்டு. ரசையை ஒருவருக்கொருவர் காட்டி சகொதர பந்தத்தை ஏற்படுத்தும் ரசாபந்தன் விழா ஆகஸ்டு மாத பவுர்ணமில் நாளில் கொண்டாடப்படுகிறது. இதையும் கொண்டாடி ஜாதி வேற்றுமையைக் களைந்து சகோர உறவை பலப்படுத்துவோம்.
அறிவியல் பார்வை
......................................
தூதுவளை செடியை நீங்கள் அறிவீர்கள். சாதாரணமாக சழித்தொல்லைகளுக்கு தூதுவளை செடியை பயன்படுத்துகிறோம். ஆனால் அதே தூதுவளை செடிக்கு காப்பு கட்டி அதாவது பட்டுநூல் கற்றாளை நூலில் மஞ்சள் கிழங்கை கட்டி அந்தக் கயிற்றால் செடியில் சுற்றிக்கட்டி 40 நாட்கள் சாடச மந்திரத்தை 108 முறை உச்சரித்து செடிக்கு தேங்காய் உடைத்து, தூப, தீபம் காட்டி அதன் பின் செடியை வேருடன் பிடுங்கி உலர்த்தி பொடி செய்து பல்வேறு அனுபானங்களில் பயன்படுத்த 40 வகையான நோய்களைக் குணமாக்கும். அதாவது அந்தக் காப்புக்கயிற்றின் மூலம் செடி மந்திரங்களை சேமிப்பதனால் 40 வகையான நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது.
அதுபோல நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சு பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும்.
இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள். நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது.
நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.
கையில் காப்புக்கயிறு கட்ட வேண்டியதன் அவசியத்தை நம்மில் பலர் உணர்வதேயில்லை. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும்.
ஒவ்வொரு இந்துக்களும் கையில் கட்டாயம் காப்புக்கயிறு கட்டவேண்டும். அதன் மூலம் நம் இந்துமதத்தின் அறிவியலை உலகத்துக்கு எடுத்துச்சொல்வோம்.

1 comment:

  1. நல்ல பகிர்வு...
    நானெல்லாம் ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்து கையில் கருப்புக் கயிறு இல்லாமல் இருந்ததில்லை...

    இப்போது இருப்பது அபுதாபியில் என்றாலும் கையில் எப்பவும் கட்டும் கருப்புக் கயிருடன் சாய்பாபாவின் சிவப்புக்கயிரும்...


    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete