Friday, September 16, 2011

நவராத்திரி எட்டு நாட்கள் தான் என்று கூறுகிறார்களே ஏன்

இந்த ஆண்டு நவராத்திரி எட்டு நாட்கள் தான் என்று கூறுகிறார்களே ஏன்?

நவசக்திகளையும் வழிபடும் நாட்களே நவராத்திரி. பிரதமை துவங்கி நவமி திதி வரை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிரதமை திதி கணக்கீட்டில் சில ஆண்டுகள் எட்டு நாட்களாகவும் சில ஆண்டுகள் பத்து நாட்களாகவும் கூட வருகிறது. எப்படியென்றால் பிரதமையில் துவங்கும் பொழுது அன்று காலை சிறிது நேரம் கூட அமாவாசை இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதற்கு "குஹூ தோஷம்' என்பர். எனவே மறுநாள் துவிதியை முதலே நவராத்திரி ஆரம்பிக்கப்பட வேண்டும். இப்படி வரும் பொழுது எட்டுகள் தான் நவராத்திரி. முறைப்படி பிரதமையில் துவங்கி கொண்டாடும் பொழுது கடைசியில் முதல் நாள் மதியம் முதல் மறுநாள் மதியம் வரை அஷ்டமி நீடித்து அதற்கு மறுநாள் நவமி திதியானது மதியம் வரை நீடித்தால் அந்த ஆண்டு பத்து நாட்கள் நவராத்திரியாக வழிபட வேண்டும். இந்த ஆண்டு, முதல் நாள் மாலை முதல் மறுநாள் மாலை வரை அமாவாசை நீடித்து அதன் பிறகு பிரதமை துவங்கி விடுகிறது. மறுநாள் மாலை மூன்றரை மணியுடன் பிரதமை முடிந்து துவிதியை துவங்கி விடுவதால் தொடர்ந்து வரும் நாட்களில் கடைசியாக எட்டாம் நாளே நவமி திதி முழுமையாக வந்துவிடுகிறது. எனவே இந்த ஆண்டு புரட்டாசி 11 முதல் 18ம் தேதி வரையிலான எட்டு நாட்களே நவராத்திரி வைபவமாகும். இந்த நியதி கலசம் வைத்து பிரதிஷ்டை செய்து சண்டீ ஹோமம் செய்வதற்குத் தானே தவிர, திருக்கோயில்களில் அம்பாள் படியிறங்கி உற்சவம் நடைபெறுவதற்குப் பொருந்தாது. நவமியை கணக்கிட்டு ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவாகக் கொண்டாடலாம்

No comments:

Post a Comment