Monday, October 20, 2014

மகாலட்சுமி

மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள் தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள் குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறைப் பெற முடியும். ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள்.

மந்தகாச முகமுடையவள். தங்க பிராகாரங்களைக் கொண்டது இவள் பவனம் கருணையுடையவள். வஸ்திரம், ஆபணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள். அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால் திருப்தியுடையவள் பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.

தாமரைமலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதாரண குணமுடையவள். இவள் "ஈம்'' என்ற பீஜாட்சரத்தை உடையவள் இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள். இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.

தரித்திரத்தையும் குறைவையும் இவள் அகற்றும் சக்தி படைத்தவள். மகாலட்சுமி சூரியன் போன்றும் பிரகாசிப்பாள் இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது. இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் கீர்த்தி என்பவளும் பக்தன் வீடு தேடி வந்தடைவர்.

இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம். இவளே செழிப்பைத் தருபவள் கோமயத்தில் வாசம் செய்பவள். சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈஸ்வரி. ஆசையை நிறைவேற்றி, வாக்குக்கு சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருள்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

மகாலட்சுமியின் திருக்குமாரர் கர்தமர் சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே. இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள். செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள். இந்த பெருமை களையெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மைவிட்டு அகலாதிருக்க வேண்டும் எனப்பிரார்த்திக்க வேண்டும்.

சர்வமும் சக்தி மயம்

துர்க்கை சர்வ சக்தி மயமாக இருக்கின்றாள். சிவனிடம் சிவையாகவும், நாராயணரிடம் லட்சுமியாகவும், பிரம்மாவிடம் சரஸ்வதியாகவும், கிருஷ்ணரிடம் ராதையாகவும், சந்திரனிடம் ரோகிணியாகவும், இந்திரனிடம் இந்திராணியாகவும்,

காமனிடம் ரதியாகவும், வருணனிடம் வருணானியாகவும், வாயுவிடம் அவர் சக்தியாகவும், அக்னியிடம் ஸ்வாஹாவாகவும், குபேரனிடம் அவன் சக்தியாகவும், யமனிடம் சுசீலாவாகவும், நிருருதியாகவும் கோடவீயாகவும், ஈசானனிடம் சசிகலையாகவும், மனுவிடம் சதரூபையாகவும்,

கர்தமரிடம் தேவகதியாகவும், வசிஷ்டரிடம் லோபாமுத்ரையாகவும், கௌதமரிடம் அகல்யாகவும், எல்லாவற்றிற்கும் ஆதாரபூதமான பூமியாகவும், பல சிறந்த நதிகளாகவும், இந்த துர்க்கையே விளங்குகின்றாள்.

பூஜை அறையில் வலம்புரி சங்கை வழிபடும் முறை

கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு. சிறியதாக குறுகிய அளவானவை பெண் சங்குகள்.

சற்று பருத்த திடசங்குகள் ஆண் சங்குகள். சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்) வைத்து வலம்புரிச்சங்கு, இடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள். ஒரு சங்கின் சுருள் பகுதி அதனுடைய வாய் பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரிச்சங்கு எனப்படும்.

ஒரு சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு. வலம்புரிச் சங்கு, இடம் புரிச்சங்கு அகியவற்றில் வலம் புரிச்சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும். இந்த வலம்புரிச்சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதற்கு அரிய தெய்வீக சக்தி உண்டு.

தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒரு பங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில் ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்கு சமமாக இருப்பது சிறப்பு நீளம் அதிகமாக இருந்தால் மிகச் சிறப்பு. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம் புரிச்சங்கு.

இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் `ஓம்' என்ற சப்தம் கேட்கும். வலம்புரிச்சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் மற்றும் பலவித நன்மைகள் கிடைக்கும். மாமிசம் சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது.

சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைக்கக்கூடாது.

செல்வத்திற்கு அதிதெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடிமாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பவுர்ணமியிலும், ஆனி மாதம் சுக்ல பட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பவுர்ணமியிலும் வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமியையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகியவைகளை பசு நெய்யில் செய்து பால் பாயசம் செய்து பசு நெய் ஊற்றி விளக்கேற்றி இரவு 10.00 மணியிலிருந்து 1.00 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.

இப்படிச்செய்தால் எல்லா வித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சங்கிற்கு பூஜை செய்யலாம். ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு,

சிறிது நீரை விட்டு வாசற்படியில் தெளிக்கவும். இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும். ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க சங்கில் பசும்பால் விட்டு 27 செவ்வாய்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

குழந்தைகளுக்கு இதில் பசும் பால் ஊற்றி வைத்துப் பாலாடையாகப் புகட்ட நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகள் குணமடையும்.

ஆயுத பூஜையின் போது சுண்டல் படைப்பது ஏன்?

கணவருக்கு சிறந்த பணிவிடை செய்து கற்புக்கரசியாக திகழும் அனுசுயாவை மூம்மூர்த்திகளும் ஒரு சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். அதாவது அவர்கள் மூவரும் முனிவர் போல் வேடம் அணிந்து அந்த பெண்மணி வீட்டுக்குச் சென்று யாசகம் கேட்கிறார்கள்.

அவர்களுக்கு உணவு போட வரும் போது அவளிடம் நாங்கள் ஆடை இன்றி உணவு அளித்தால் தான் ஏற்றுக் கொள்வோம் என்கிறார்கள். அனுசுயா தன் கற்பின் ஞானத்தால் வந்தது மும்மூர்த்திகள் என்பதை அறிந்து கொண்டாள். உடனே அவர்களுக்கு ஆடையின்றி உணவு படைக்க சம்மதிக்கிறாள்.

மும்மூர்த்திகளும் வீட்டில் இருக்க, அவள் உணவை தயாரிக்கிறாள். பின்னர் உணவு பரிமாறும் வேளையில் அவர்கள் மூவரையும் குழந்தைகளாக்கி விடுகிறாள். அந்த குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பம் போல் உணவு அளிக்கிறாள். பின்னர் அந்த குழந்தைகளுக்கு தொட்டில் கட்டி அதில் தூங்க வைக்கிறாள்.

இதற்கிடையே மூன்று தேவியரும் தங்கள் கணவன்மார்களை காணாது தேடுகிறார்கள். அப்போது அவர்கள் இருக்கும் இடத்தை நாரதர் கூறுகிறார். உடனே அங்கு சென்று தங்கள் கணவரை எங்கே என்று கேட்டனர். அப்போது அனுசுயா அந்த குழந்தைகளை காட்டினார்.

அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அனுசுயா மூன்று குழந்தைகளையும் தெய்வங்களாக மாற்றி அவர்கள் மனைவிமார்களிடம் அப்படைந்தாள். மூன்று தேவியருக்கும் அனுசுயா மீது கோபம். அவள் கற்புக்கு அவ்வளவு சிறப்பா என்று ஆதங்கம் கொண்டனர்.

அவளின் கற்பை வெளிக்காட்ட நாரதர் முயலுகிறார். இரும்பினால் செய்யப்பட்ட சுண்டல் கடலையை மூன்று தேவியரிடமும் கொடுத்து அதை அவிக்க சொல்கிறார். அதை அவர்கள் அவிக்கிறார்கள். ஆனால் இரும்பு சுண்டல் எப்படி வேகும்.

எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. உடனே நாரதர் அந்த சுண்டலை அனுசுயாவிடம் கொடுக்கிறார். அவள் அவிக்க முயலும் போது சுண்டல் நன்றாக வெந்து விடுகிறது. பின்னர் அவற்றை மூன்று தேவியருக்கும் கொடுக்கிறாள். அப்போதுதான் கற்பின் பெருமையை மூன்று தேவியரும் உணருகிறார்கள். அனுசுயா சுண்டல் படைத்த நாள்தான் ஆயுத பூஜை. எனவே தான் அன்று சுண்டல் படைக்கிறோம்.

ஆயுதபூஜை

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் சரஸ்வதி பூஜை என்ற ஆயுத பூஜை எல்லாப் பகுதி மக்களாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் கொண்டாடப்படுகிறது. அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலம் ஆயுதபூஜை தவறாமல் செய்கின்றனர்.

பிற சமயத்தினரின் நிறுவனம் என்றாலும் தொழிலாளர்கள் ஆயுத பூஜையை நடத்துகின்றனர். பிற சமயத்தினரும் பங்கேற்று மகிழ்கின்றனர். அவ்வகையில் கலைமகள் விழாவான ஆயுதபூஜை சமய ஒருமைப்பாட்டுக்கும் உதவுகிறது.

மகாநவமியில் புத்தகம், எழுதுகோல், ஆயுதங்கள் ஆகிய அனைத்திற்கும் வழிபாடுகள் செய்கிறோம். பொரி, அவல், கடலை, சர்க்கரை போன்ற எளிய நிவேதனங்களை சரஸ்வதி ஏற்று மகிழ்கிறாள். குழந்தைகளுக்கு கல்வி தொடங்க விஜயதசமி மிகவும் உகந்த நாள் ஆகும். அன்று தொடங்கும் பணிகள் யாவும் வெற்றியுடன் நிறைவடையும் என்பது நம்பிக்கை.


பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.

அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது

சரஸ்வதி பூஜையில் புத்தகங்கள்

சரஸ்வதி பூஜை அன்று படிக்கும் புத்தகங்களுக்கு திலகமிட்ட சரஸ்வதி படத்திற்கு முன்பு கலந்து பூஜிக்க வேண்டும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி முன்பு நாம் படிக்கும் புத்தகங்களை வைத்து அவளிடம் கல்வியை வரமாகக் கேட்பது போன்று இந்த பூஜையாகும்.

இந்த பூஜைக்கு முதலில் வீட்டை நன்றாகக் கழுவி கோலங்கள் இட்டு அழகுப்படுத்த வேண்டும். பின்னர் வீட்டில் உள்ள சரஸ்வதி படம் அல்லது பொம்மையைப் பிரதானமாக எடுத்து மணைமேல் வைத்தல் வேண்டும். படத்தின் முன்னால் கோலம் போட்ட பலகையை வைத்து அதன் மேல் புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும்.

இந்த பூஜையில் புத்தகங்களே இடம்பெற வேண்டும். வீட்டில் உள்ள மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களையும், பேனா போன்றவற்றையும் திலகமிட்ட பூஜையில் வைக்க வேண்டும்.

விஜயதசமி அன்று பூஜையில் வைத்து பூஜிக்கும் புத்தகங்களை அன்று முழுவதும் பூஜையிலேயே வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் எழுந்து குளித்து முடித்து சுத்தமாக வந்து சரஸ்வதி தேவியை வணங்கிவிட்டு புத்தகங்களை எடுத்து படிக்க வேண்டும்.

சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்ய இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.

சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும், படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களா வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.

சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும்.

இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும். எதற்கும் விநாயகரே முழு முதலானவர், எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து சுக்லாம் பரதரம் விஷ்ணும் சஸிவர்ணம் சதுர்புஜம்! ப்ரசந்த வதனம் தீயாயேத் சர்வ விக்நோப சாந்தயே'' என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.

சரஸ்வதி பூஜையின் போது ``துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம'' என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று. பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.

பூஜையின் போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம்.

நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.




கல்விச்செல்வத்தை அடைய, அறிவும், ஆற்றலும் பெறக் கலைமகளின் அருள் வேண்டும். நமது நாட்டில் சரஸ்வதிக்கு என்று தனிக்கோயில்கள் இல்லை எனவே கலைமகளை நம் வீட்டிலே நாமே பூஜை செய்து வழிபட வேண்டும்.

முதன்முதலாக பூஜையை எந்த மாதத்திலும், எந்த நாளிலும், எந்தக்கிழமையிலும் தொடங்கலாம். ஆனால் அன்று பவுர்ணமியாக மட்டும் இருக்க வேண்டும். கலைமகளுக்குப் பூஜை செய்யும் போது அலை மகளுக்கும் சேர்த்து வழிபாடு செய்ய வேண்டும்.

மலர்களுள் வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை, முல்லை, இருவாட்சி, சம்பங்கி, மருக்கொழுந்து,வெட்டிவேர், மற்றும் வாசனைத் திரவியங்கள், சந்தனம் முதலியவற்றையும் இளநீர்,மாதுளம் பழம், கொய்யா, கரும்பு, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, கற்பூரம், ஊதுவத்தி முதலியனவற்றையும் சேகரிக்கவேண்டும்.

நிவேதனப் பொருள்களாகக்கல்கண்டு, பால்பாயசம், வெண்கடலைக் சுண்டல், இனிப்புச் சுவையுள்ள பலகாரங்கள் ஆகியவற்றைக் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜைப் பொருள்களில் ஐந்துமுக விளக்கும் கலசத்திற்காக இரு தட்டுகள், இரு செம்புகள், இரு தேங்காய்கள்,நெல் பச்சஅரிசி ஆகியவையும் புதிதாக வாங்கப்பட்ட பேனா பென்சில், சில நோட்டுப்புத்தகங்கள், சிலேட்டுகள் ஆகியவையும் இடம் பெற வேண்டும்.

வீட்டின் அறையில் நடுப்பகுதியில் கிழக்கு முகமாக பீடம் அமைக்க வேண்டும். அதில் சதுரமாக நெல்லை பரப்ப வேண்டும். அதன் மீது இரு தட்டுகளில் பச்ச அரிசியை பரப்ப வேண்டும். அதில் கலசங்களை வைக்க வேண்டும்.

முதல் கலசத்தின் கீழ்ச்சுற்றில் வெண்தாமரை இதழ்களையும், இரண்டாவது கலசத்தின் கீழ்ச்சுற்றில் செந்தாமரை இதழ்களையும் சுற்றி வைக்க வேண்டும். கலசத்திற்கும் தேங்காய்க்கும் மஞ்சள், குங்குமத்திலகம் இடவேண்டும். அவற்றை மலர்ச்சரங்களால் சூடி அலங்கரித்து வைக்க வேண்டும்.

மஞ்சள் தூளிலோ, பசும் சாணியிலோ பிடித்த விநாயகரை அறுகம்புல் ஆசனத்தில் அமர்த்த வேண்டும். அதற்குத் திலக மிட்டு மலரிட வேண்டும். ஐந்துமுக விளக்கை இரு கலசத்தின் நடுவே வைத்து, திலகமிட்டு மலர்ச்சரம் சுற்றி வைக்க வேண்டும்.

விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றிய பின் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். பின்பு ஸ்தோத்திரங்களைச் சொல்லி கற்பூர தூப தீப ஆராதனை முடித்து விநாயகரை வணங்க வேண்டும். பவுர்ணமி உதயமாகும் போது கலசங்களுக்குக்கற்பூர தீபம் காட்ட வேண்டும்.

அடுத்து கலைமகள் அலைமகள் ஸ்தோத்திரங்களை மனம் உருக எல்லாரும் சேர்ந்து சொல்ல வேண்டும். ஸ்தோத்திரங்கள் சொல்லி முடித்ததும் கற்பூர தூப தீப நிவேதனம் காட்ட வேண்டும். எல்லாரும் சாஷ்டாங்கமாக வீழ்ந்துவணங்க வேண்டும்.

சிறுவர் சிறுமியர்க்குப் பேனா, பென்சில, சிலேட், நோட்டுப்புத்தகம் ஆகியவற்றைத் தானமாகவும், மற்ற பிரசாதப் பொருள்களையும் தர வேண்டும், அதற்குப் பிறகே பிரசாதங்களைப் பயன்படுத்த வேண்டும்.

துர்க்கை அன்னையை வீட்டில் வழிபடும் முறை

துர்க்கை அன்னையை வீட்டிலேயே தீப பூஜை செய்ய விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முறையில் அனுசரித்து வழிபட வேண்டும். பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும்.

அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும். வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் நடுவில் ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். மஞ்சள் நிறமுடைய பத்து எலுமிச்சம் பழங்களை வாங்கி, பழங்களை இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

அந்த இருபது துண்டுகளில் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து சாறுபிழிந்து விட்டு- பிழிந்த முடிகளை உள்பக்கம் வெளிப்பக்கம் வருமாறு திருப்பி குழிவான கின்னம் போல் செய்து கொள்ள வேண்டும்.

அந்த எலுமிச்சம் பழக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட துர்க்கா தேவியின் படத்தின் முன்போ, அல்லது சிலையின் முன்போ வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். துர்க்காதேவிக்கு நிவேதனைப் பொருளாக தயிர் சாதம், உளுத்துவடை, அவல், பாயாசம், எலுமிச்சம் பழச்சாதம் ஆகியவற்றை படைத்து பூஜை செய்ய வேண்டும்.

இரண்டு துண்டாக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து அதில் வெல்ல சர்க்கரை கலந்து பானமாக்கி நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் துர்க்கா தேவியின் பாமாலைகள், துதிப்பாடல்கள், ராகு காலத்தில் பாடவேண்டிய பாடல்கள் ஆகியவற்றைப் மனம் உருகிப்பாட வேண்டும்.

பூஜையின் முடிவில் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பானகத்தைக் கொடுத்து தாங்களும் பருகலாம். துர்க்கா தேவியின் பூஜையை வீட்டிலேயே செய்வதால் குடும்பம் என்றென்றும் செல்வச் செழிப்புடன் இருக்கும்.
மேலும் வழிபாடு

அன்னையை ஆலயத்தில் தரிசிக்கும் முறை

துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சம்பத்துகளும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும். எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.

தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபடவேண்டும். துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும்.

அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும். துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.

அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கிக்கொள்ளலாம். நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம் பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக குறுக்கு வசத்தில் அறுத்துச்சாறு பிழிந்துவிட்டு குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.

அதில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

துர்க்கைக்கு எலுமிச்சம் பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம் பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு செலுத்துவார். அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும்.

ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும். பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றிஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம். திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.

எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள். தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள். மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள்.

உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள். அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள். அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள்.

பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள். தீபாரதனை முடித்து-அர்ச்சகர் அர்ச்சனைத்தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார். அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக்கிடைக்கும்.

பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்

மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது.

காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும். காலையில் 4.30லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது. விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது.

விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது. பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது. நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்.

அர்ஜுனனுக்கு அருளிய ஸ்ரீதுர்காம்பிகை

மகாபாரதத்தின் உச்சமாய் விளங்குவது 18 நாட்கள் நடந்த மகாபாரத போர் தான். போரில் ஸ்ரீகிருஷ்ணரின் துணையோடும் 7 அசௌணி சேனைகளோடும் பாண்டவர்கள் அணிவகுத்து நின்றார்கள்.

கவுரவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் சேனை உள்பட 11 அசௌணி சேனைகளோடும் பீஷ்மர் துரோணர், கிருபர் போன்ற சிறந்த போர் தளபதிகளுடனும் எதிர் வரிசையில் நின்றார்கள். பாண்டவ சேனை முழுவதும் அர்ஜுனையே நம்பி நின்றது.

`தன்னை விட அதிக சேனை பலத்துடன் எதிரில் நிற்கும் கவுரவ சேனையை எப்படி வெல்வது' என்று அர்ச்சுணன் யோசித்தான். அர்ஜுணனின் நிலையை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மா அர்ஜுணனிடம் அவனை கவலைப்படாதிருக்குமாறும் போரில் எதிரிகள் தோற்க எல்லாம் வல்ல ஸ்ரீதுர்கா தேவியை துதிக்கும்படியும் அறிவுறுத்தினார்.

ஸ்ரீகிருஷ்ணனின் உபதேசத்தை சிரமேற்கொண்டு ரதத்திலிருந்து கீழே இறங்கி தன் இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் ஸ்ரீ துர்கா தேவியை துதித்தார் அர்ச்சுணன்.

``நமஸ்தே ஸித்தஸேனாணி ஆர்யே மந்த்ர வாஸினி
குமாரிகாளி காபாலி கபிலே கிருஷ்ண பிங்களே''

என்று தொடங்கி பலவாறாகத் துர்க்கையை துதித்தார் அர்ஜுணன். துதியில் மகிழ்ந்த ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி அர்ஜுணனுக்கு ஆகாயத்தில் காட்சியளித்தாள்.

`அர்ச்சுணா விரைவில் பகைவர்களை வெற்றி கொள்வாய். நர நாராயணர்களின் உதவியைப் பெற்ற உன்னை சத்ருக்கள் மட்டுமல்லாமல் வஜ்ராயுதம் தரித்த இந்திரனே கூட வெல்ல முடியாது' என்று அர்ஜுணனை ஆசிர்வதித்து மறைந்தாள்.

ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியின் அருளைப் பெற்று புத்துணர்வு கொண்ட அர்ஜுணனின் காண்டீபத்தின்று புறப்பட்ட அம்புகள் எதிரிகளை துவம்சம் செய்தன.

போரில் வெற்றி பெறுவதற்காக அர்ச்சுணனால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்ரம், சத்ருக்களை வெல்வதற்காகவும் எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டவும் பாராயணம் செய்ய உகந்தது.

துர்க்காவை பல்வேறு பெயர்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

துர்க்காவை பல்வேறு பெயர்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அன்னையைப் போற்றும் அனைவருக்கும் நல்லருள் தந்து வெற்றிகளைக் கொடுப்பதினால் "ஜெய துர்க்கை'' என்று போற்றுகின்றனர். பதினெட்டு கரங்களுடன் பக்தர்களைப் பரவசப்படுத்துவதினால், "அஷ்டா தசபுஜ துர்க்கை'' என்று போற்றி வணங்குகின்றனர்.

அன்னையை ராகு காலத்தில் வழிபடுவதினால் "இராகு கால துர்க்கை'' என துதிக்கின்றனர். சினம் கொண்டு சிவந்த கண்களுடன், சிவந்த மேனியுடன் திகழ்வதினால் "கெம்பம்மா துர்க்கை'' என்று வழிபடுகின்றனர். வீராவேசம் கொண்டு அரக்கர்களை அழித்து தேவர்களுக்கு அரணாக இருந்தமையால் கொற்றவை என்றும் துதிக்கின்றனர்.

வலக்கையில் மழுவுடன் காட்சியளிக்கும் துர்க்கையை "சிவ துர்க்கை'' என்று வணங்குகின்றனர். இடக்கையில் சங்கும், வலக்கையில் சக்கரமும் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் துர்க்காதேவியை "விஷ்ணு துர்க்கை'' என வழிபடுகின்றனர்.

அன்னையை பலநாமங்களில் அழைத்து மனம் உருகி வணங்கி வழிபட்டாலும் பக்தர்களுக்கு துர்க்கா அம்மன் பேரருளை வழங்கி வாழ்வளிக்கின்றனர். அன்னை துர்க்கைக்கு உரிய திதி எட்டாம் நாளான அஷ்டமி திதியாகும். அதனையே பக்தர்கள் `ஸ்ரீதுர்க்காஷ்டமி' என்று கூறி சிறப்பாக வழிப்படுகின்றனர்.

நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகள்

நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகள் வருமாறு:-

1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

6. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

8. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

9. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

10. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

11. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.

12. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

13. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.

14. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

15. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

16. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

17. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

18. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

19. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

20. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

21. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

22. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.

23. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

24. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

25. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

26. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

27. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

28.ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

29. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

30. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

31. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

32. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

33. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

34. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

35. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

36. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

37. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.

38. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

39. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

40. நவராத்திரி 5-ம் நாளான வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

41. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

42. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையாப கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

43. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

44. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவி யரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

45. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

46. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.


47. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

48. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

49. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

50. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.

நவராத்திரிக்குரிய சிவ பூஜை முறைகள்

புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சம் முடிந்த பின்னர் நவராத்திரி பூஜை ஆரம்பமாகின்றது. ஆனால், மகாளய அமாசையன்று பித்ரு காரியங்களை முறையாகச் செய்தால் தான் நவராத்திரி பூஜைகளைக் கடைப்பிடிக்க நாம் தகுதி பெற்றவர்கள் ஆவோம். எனவே மகாளய அமாவாசை பூஜையை தவறாமல் செய்ய வேண்டும்.

அமாவாசை திதி:-

மகாளய அமாவாசை பூஜை என்றாலே நம் முன்னோர்களை நினைத்து வழிபடும் பித்ரு பூஜை தான். ஆனால் தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் பித்ருக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகவே தெரியவில்லை. அவர்களுக்கு உரிய பூஜைகளை முறையாகச் செய்வதும் கிடையாது.

வருடத்திற்கு ஒருமுறை மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையில் மட்டும் தர்ப்பணம் கொடுத்து விட்டுப் பேசாமல் இருந்து விடுகின்றனர். அது தவறு. பித்ரு பூஜைகளை தினமுமோ, மாதாமாதமோ கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

மகாளய அமாவாசையன்று பித்ரு தேவதைகள் அனைவரும் வைத்தியர்கள் ரூபத்தில் தான் வருகின்றனர். எனவே, அன்று வைத்தியர்களுக்கு பாத பூஜை செய்து, அவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும்.

மகாளய அமாவாசை தின அதிதி போஜனத்தில் பன்னிரண்டு பேர்களுக்குக் குறையாமல் உணவு அளிக்க வேண்டும். இது உத்தமப் பலன்களைப் பெற்றுத் தரும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தல் அல்லது வீட்டிற்குக் கூரை வேய்ந்து தருதல் வேண்டும்.

முதல்நாள்-பிரதமை திதி:-

பகலில் கண்டிப்பாக சிவ பூஜை செய்தல் வேண்டும். அப்போது தான் இரவில் சக்தி பூஜை செய் வதற்கு உரித்தான தகுதியைப் பெறுகின்றோம். பிரதமை திதியில் மாமரத்து வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து, 1008 நாமாவளிகளைச் சொல்லி, சிவ பூஜை செய்தல் வேண்டும். இது மிக முக்கியம். அவ்வாறு செய்யவில்லையெனில் பாதி நவராத்திரி பூஜை செய்த தாகத்தான் பொருள்.

இரண்டாம் நாள் - துவிதியை திதி:-

பலா மரத்தின் வடக்கு வேர் கொண்டு சிவ லிங்கம் செய்து, பகலில் சிவலிங்க பூஜை செய்ய வேண் டும்.துவிதியை திதியன்று இவ்வாறு பூஜை செய்வதால் உடல்சூடு ரகசியத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

மூன்றாம் நாள் - திருதியை திதி:-

வில்வ மரத்து வடக்கு வேர் கொண்டு சிவலிங்கம் செய்து, பகலில் சிவ பூஜை செய்தல் வேண்டும். இவ்வாறு சிவ பூஜை செய்வதால் `தேவர்கள் யார்ப மனிதர்கள் யார்?' என அவர்கள் உருமாறி வந்தாலும் அவர்களைக் கண்டு கொள்ளும் சக்தி கிடைக்கும்.

நான்காம் நாள் - சதுர்த்தி திதி:-

அத்தி மரத்தின் வடக்கு வேர் அல்லது வெள்ளெருக்கு வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து, பகலில் பூஜை செய்தல் வேண்டும். இதனால் கணவனுக்கு ஜாதகத்தில் எத்தகைய கண்டங்கள் இருந்தாலும், எந்தக் காரணத்தாலும், எத்தகைய ஆபத்துக்கள் வந்தாலும் அவனைத் தீண்டாது. இந்த பூஜை மாங்கல்ய பலத்தை அளிக்கும்.

ஐந்தாம் நாள் - பஞ்சமி திதி:-

வேப்ப மரத்தின் வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு பூஜை செய்வதால் எதிர்காலத்தை அறியும் ஆற்றல் தேடி வரும்.

ஆறாம் நாள் - சஷ்டி திதி:-

வேங்கை மரத்தின் வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜை செய்து வந்தால் ஒருவரது நாடியைப் பிடித்துப் பார்க்காமலேயே நோயினை அறியும் ஆற்றல் உண்டாகும்.

ஏழாம் நாள் - சப்தமி திதி:-

பலா மரத்தின் வடக்கு வேர் அல்லது அரச மரத்தின் வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து பூஜை செய்தல் வேண்டும். அறுவை சிகிச்சை செய்யும் முன்னர் இந்த சிவலிங்க பூஜை செய்து விட்டுப் பின்னர் செய்தால், கண்டிப்பாக ஆபரேஷன் வெற்றிகரமாக முடியும்.

எட்டாம் நாள் - அஷ்டமி திதி:-

அரச மரத்தின் வடக்கு வேர் அல்லது ஆல மர வடக்கு வேர் அல்லது குருந்த மர வடக்கு வேர் எடுத்து, சிவலிங்கம் செய்து, பூஜை செய்தல் வேண்டும். இந்த பூஜையில் தன் முன்னால் யார் எந்த ரூபத்தை எடுத்தாலும், சுயரூபத் தத்துவத்தால் தன் கணவனையும் கரையேற்றும் சக்தி கிட்டும்.

தீய வழிகளில் கணவர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களைத் திருத்தும் சக்தியை பெண்கள் பெறுவார்கள். ஆண்களாக இருந்தால் எப்படிப்பட்ட முரட்டு குணம் உள்ள மனைவியையும் திருத்தும் ஆற்றல் கிட்டும்.

ஒன்பதாம் நாள் - நவமி திதி:-

அத்தி மரத்து வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து பூஜை செய்தல் வேண்டும். இதனால் தனம், தான்யம், போகம், பாக்கியங்கள், ஐஸ்வர்யங்கள் அனைத்தும் கிட்டும்.

நம்மை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும், கோபித்துக் கொண்டு பல காலத்திற்கு முன் சென்று இருந்தாலும், அவர்களைப் பற்றிய தகவல்கள் வந்து சேரும்.

பத்தாம் நாள் - தசமி திதி:-

வன்னி மரத்து வடக்கு வேர் எடுத்து, அதில் சிவலிங்கம் செய்து பூஜை செய்தல் வேண்டும். இதனால் சித்திகள் உண்டாகும்.
மேலும் வழிபாடு

நவராத்திரியில் அம்மனின் 9 வித கோலம்

நவராத்திரி பண்டிகையின் முதல் நாள் மதுகடைபர் அழிவுக்கு காரணமான தேவியை குமாரி வடிவமாக வழிபட வேண்டும்.

இரண்டாம் நாள் மகிஷாசுரனின் சேனைகளை வதம் செய்ய புறப்பட்ட ராஜராஜேஸ்வரியாக துர்க்கையின் வடிவத்தை அலங்கரித்துப் பூஜிக்க வேண்டும்.

மூன்றாம் நாள் மகிஷாசுரனை வதைத்த அம்பிகையை சூலத்துடன் மகிஷன் தலை மீது நிற்கும் கோலத்தில் வழிபட வேண்டும்.

நான்காம் நாள் அம்பிகையின் வெற்றித் திருக்கோலமாக வழிபட வேண்டும்.

ஐந்தாம் நாள் அம்பிகை சும்பன் என்ற அசுரனின் தூதன் வந்து பேசுவதை கேட்கும் கோலத்தில் பூஜிக்க வேண்டும்.

ஆறாம் நாள் அன்று சர்ப்ப ராஜா ஆசனத்தில் ஸ்ரீ சண்டிகா தேவி அமர்ந்திருக்கும் கோலம் பூஜைக்குரியதாகும்.

ஏழாம் நாளில் சண்ட முண்டர்களை வதைத்த பின் பொன் பீடத்தில் அம்பிகை அமர்ந்து வீணை வாசிக்கும் கோலத்தில் பூஜைகள் செய்யப்பட வேண்டும்.

எட்டாம் நாளில் ரக்த பீஜன் வதமான பின் கருணை நிறைந்த தோற்றத்துடன் உள்ள அம்பிகையை பூஜிக்க வேண்டும்.

ஒன்பதாம் நாளில் வில், அம்பு, அங்குசம், சூலம் முதலியவைகளை தரித்த கோலத்தில் அம்பிகையை பூஜிக்க வேண்டும்.

பத்தாம் நாளன்று அம்பிகை லிங்கத்தைப் பூஜித்து சிவசக்தி ஐக்கிய ரூபிணியாக விளங்குகிறாள்.

எனவே அந்த கோலத்தில் அம்பிகையை வழிபடுதல் வேண்டும். நவராத்திரியில் கன்னிகை பூஜை, சுவாஸினி பூஜை, மிகவும் முக்கியம். ஒவ்வொரு நாளும் 2 வயதுப் பெண் குழந்தை முதல் முறையே பத்து வயது பெண் வரை ஒவ்வொன்றாகவோ அல்லது முதல் நாள் ஒன்று இரண்டாம் நாள் இரண்டு என்ற முறையாகவோ குமாரி பூஜை செய்ய வேண்டும்.

நாள்   வயது     பெயர்           பயன்
1        2        குமாரி           தொல்லைகள் நீங்கும்
2        3        திருமூர்த்தி      தனதான்ய வளம்
3        4        கல்யாணி        பகை ஒழித்தல்
4        5        ரோகிணி         கல்வி வளர்ச்சி
5        6        காளிகா           துன்பம் நீங்குதல்
6        7        சண்டிகா           செல்வ வளர்ச்சி
7        8        ஸாம்பவி          நலம் விரும்பி
8        9        துர்க்கா            பயம் நீக்குதல்
9        10       ஸீபத்ரா            உண்டாகுதல்  

/ இந்த முறையில் பூஜை செய்ய வேண்டும்.

நவ கன்னிகை வழிபாடு

முதல் நாளில் 2 வயதுக் குழந்தை – குமாரி
இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை – திரிமூர்த்தி
மூன்றாம் நாள் 4 வயதுக் குழந்தை – கல்யாணி

நான்காம் நாள் 5 வயதுக் குழந்தை – ரோகிணி
ஐந்தாம் நாள் 6 வயதுக் குழந்தை – காளிகா
ஆறாம் நாள் 7 வயதுக் குழந்தை – சண்டிகா

ஏழாம் நாள் 8 வயதுக் குழந்தை – சாம்பவி
எட்டாம் நாள் 9 வயதுக் குழந்தை – துர்க்கா
ஒன்பதாம் நாள் 10 வயதுக் குழந்தை – சுபத்ரா

என்று ஒவ்வொரு நாளும் ஒரு பெயரில் நவ கன்னிகை வழிபாட்டை செய்ய வேண்டும்.

நவ துர்க்கை வழிபாடு

முதல் நாள் – ஷைலபுத்ரி
இரண்டாம் நாள் – பிரம்மசாரிணி
மூன்றாம் நாள் – சந்தரகாந்தா

நான்காம் நாள் – கூஷ்மாண்டா
ஐந்தாம் நாள் – ஸ்கந்த மாதா
ஆறாம் நாள்– காத்யாயனி

ஏழாம் நாள் – காலராத்ரி
எட்டாம் நாள் – மஹா கவுரி
ஒன்பதாம் நாள் – சித்திதாத்ரி

என்று ஒன்பது நாட்களும் நவ துர்க்கை வழிபாடு செய்வது சிறப்பு தரும்.

நவராத்திரிக்கு பூஜை செய்ய வேண்டிய தெய்வங்கள்

நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபட வேண்டும். வந்ஹி துர்கா, வன துர்கா, ஜல துர்கா, ஸ்தூல துர்கா, விஷ்ணு துர்கா, பிரம்ம துர்கா, ருத்ர துர்கா, மகா துர்கா, சூலினி துர்கா போன்ற அன்னைகளின் சக்திகளை ஒவ்வொரு உயிரும் வாழ்வில் பெற்றிருக்கும்.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நவராத்திரி விழாவில் தேவதைகளைச் சிறப்பிக்க வேண்டும். நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம், மன அமைதி பெறலாம். அறிவு பெருகும். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம்.

நவராத்திரி பண்டிகையின் போது ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒவ்வொரு நவ தானியமாக ஒன்பது வகை சுண்டல் செய்து கடவுளுக்குப் படைத்து வழிபடுவர். நவதானிய வகைகள்:– 1.கோதுமை, 2.பச்சரிசி, 3.துவரை, 4.பச்சைப் பயறு, 5.கடலை, 6.மொச்சை, 7.எள்ளு, 8.உளுந்து, 9.கொள்ளு.

துர்க்கை

நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவ பிரியை. இச்சா சக்தியான துர்க்கையை, ‘கொற்றவை’, ‘காளி’ என்றும் அழைப்பார்கள்.

வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபாட்டுக்குரியவர் துர்க்கை. மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

வெற்றியை கொண்டாடிய 10–ம் நாள் விஜயதசமியாகும். வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் நவ துர்க்கை என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் துர்க்கையின் அம்சங்கள்

மகா லட்சுமி

மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள்.

பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பவள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து, வறுமையை அகற்றி அருள் புரிபவள். திருப்பதியிலுள்ள திருச்சானூரில் லட்சுமிக்கு தனி கோவில் அமைந்துள்ளது.

ஆதி லட்சுமி, மகா லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமிகள் எனப்படுவர். இவர்கள் அனைவரும் லட்சுமி தேவியின் அம்சங்கள் ஆவர்.

சரஸ்வதி

வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிப்பவள். கல்வியின் தெய்வம். பிரம்ம பிரியை. ஞான சக்தி. சரஸ்வதி தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் தனிக் கோவில் அமைந்துள்ளது.

நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வழிபாடு செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை திருவோணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது.

திருவோணம் அன்றே விஜயதசமி. ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. பல குழந்தைகள் கல்வியை இன்று தான் தொடங்குவார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.

வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் அஷ்ட சரஸ்வதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

மகிஷம் என்றால் எருமை நவராத்திரி பிறந்த கதை

நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள்.

மகிஷம் என்றால் எருமை. இது சோம்பல் மற்றும் அறியாமையின் சின்னமாகும். அறியாமையை அழித்த அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாள் விழா கொண்டாடப்படுகிறது.

இந்த நாட்களில் நம்மை சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் விலக அம்பிகையை இரவு நேரத்தில் பூஜை செய்கிறோம்.இருள் விலகி ஒளி பிறந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடுகிறோம். ஒரு நாளில் பகல் என்பது சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.

பகலும் இரவும் இல்லாவிட்டால் நாள் என்பது கிடையாது. பகலில் உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன் மடியில் கிடத்தி தாலாட்டி உறங்க செய்கிறாள். இரவெல்லாம் விழித்திருந்து உலகை காக்கும் அம்பிகைக்காக ஒன்பது நாள் இரவு மட்டும் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பர்.

இதன் பின்னணியில் உள்ள கதை வருமாறு:- சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தனர்.

எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர். அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர்.காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.

பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை, கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும் மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும் கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி மயூர வாகனத்தில் வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற

இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும் சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள்.

இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர். அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர்.

இந்த வைபவம் நவராத்திரிஎனப்படுகிறது.  படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள்பவள் அவளே.

முத்தொழில் புரியும் மும் மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே. தினமும் அம்பிகையை வணங்கினாலும் புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும். புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும்.

அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும் போது, முதல் மூன்று நாள்கள் துர்கா பரமேஸ்வரியையும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியையும் வணங்கவேண்டும்.

வணங்குவதால் எதையும் பெறலாம். கல்வி, இசை, புகழ், செல்வம் தானியம்,வெற்றி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள். ஆதிபராசக்தியை துர்க் கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.லட்சுமி வடிவில் தரிசித் தால் செல்வம் பெருகும்.

சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும். பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும். எனவே தான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள். தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப்பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.

இதற்கு காரணம், தேவியால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி,லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மனி ஆகிய சக்திகளுக்குள் அடக்கமாக உள்ளனர். எனவே சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.*

நவராத்திரியின் 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும்.

நவராத்திரியின் 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும்.

முதல் நாள்:- காலை: பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதத்தை பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும், இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.

மாலை:

துர்க்கைக்கும் உகந்த தான சிவப்பு காராமணி சுண்டலை வினியோகிக்கலாம்.

இரண்டாம் நாள்:- காலை:

தயிர் சாதம் பிரசாதம், இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம்.

மாலை:  பாசிப்பருப்பை சுண்டலாக நிவேதனம் செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.

மூன்றாம் நாள்:- காலை:

தேங்காய் சாதத்தை பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி செல்வம் பெருகும். எதிர்ப்புகள் விலகும்.

மாலை:  அன்றைய தினம் கொண்டைக்கடலை சுண்டல் விநியோகிக்கலாம்.

நான்காம் நாள்:- காலை:

எலுமிச்சை சாதத்தை பிரசாதமாக அளிக்கலாம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும்.

மாலை:

அரிசியுடன் வெல்லம், தேங்காய் சேர்த்து அரிசிப்புட்டு செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.

ஐந்தாம் நாள்:- காலை:

வெண்பொங்கலை பிரசாதமாகக் கொடுப்பது உகந்தது. இதன் மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும்.

மாலை: இது தவிர நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் கொடுப்பது நல்லது.

ஆறாம் நாள்:- காலை:

புளியோதரையை பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன் மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.

மாலை: கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு, போன்றவற்றை தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.

ஏழாம் நாள்:- காலை:

சர்க்கரைப் பொங்கல், இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும், பொருளாதார முன்னேற்றம் ஏற்பாடும்.

மாலை: அரிசி கலந்த தேன் குழல், தட்டை முதலியவற்றை தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.

எட்டாம் நாள்:- காலை:

பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, ஆகியவை சேர்ந்த பருப்பு பாயசத்தை, உடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும். கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம்.

மாலை: மாலையில் நவதானியம் சுண்டல் கொடுக்கலாம்.

ஒன்பதாம் நாள்:- காலை: சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசலை நிவேதனம் செய்யலாம்.

மாலை: கருப்பு கொண்டைக்கடலை சுண்டலுடன் தாம்பூலத்துடன் கொடுக்கலாம்

நவராத்திரி 9 நாள் வழிகாட்டுதலும் பூஜை முறைகளும்

பராசக்தி நவராத்திரியை முன்னிட்டு மூன்று சக்திகளாக 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சித் தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்?

என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். "மாலைமலர்'' வாசகர்களுக்காகவே நவராத்திரி 9 நாட்கள் வழிபாட்டை தொகுத்து கொடுத்துள்ளோம். 9 நாட்களும் இதன்படி பூஜைகள் செய்தால் அளவற்ற பலன்களை பெறலாம்.

1-வது நாள்-

வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவ தாரத்தில் வணங்க வேண்டும்.
திதி : பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை. ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

2-வது நாள்

வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)
பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.
திதி : துவிதியை
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : புளி யோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம். ராகம்: கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

3-வது நாள்

வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்)
பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.
ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.
பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

4-வது நாள்

வடிவம் : மகாலட்சுமி (சிங்காசனத்தில் வெற்றி திருக் கோலம்)
பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : சதுர்த்தி
கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
பூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.
ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம்.
மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
பலன் : கடன் தொல்லை தீரும்.

5-வது நாள்

வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)
பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : பஞ்சமி
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூëக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

6-வது நாள்

வடிவம் : சண்டிகாதேவி (சர்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்)
பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.
திதி : சஷ்டி.
கோலம் : கடலை மாவினால் தேவி நாமதத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.
நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

7-வது நாள்
வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)
பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.
திதி : சப்தமி.
கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் : தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை.
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.
ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

8-வது நாள்

வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)
பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.
திதி : அஷ்டமி
கோலம் : பத்ம கோலம்
பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.
நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.
ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.
பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

9-வது நாள் 

வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)
பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.
திதி : நவமி
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை. ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.
பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.

நவராத்திரி நவகன்னிகை வழிபாடு

நவராத்திரி நாட்களில் தினமும் அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும் என்ற வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அன்னையை நவ கன்னிகையாகவும், சில இடங்களில் நவ துர்க்கையாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.

10 வயது நிரம்பாத கன்னிகையாக நாள் ஒரு பருவத்தில் அம்பிகையை . அது போல பார்வதிதேவியின் பல்வேறு நிலைகளில் அம்பாளை, துர்க்கையாக கருதி வழிபாட்டை செய்வது நவதுர்க்கை வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. 0

நவராத்திரி கொலு உணர்த்தும் மூன்று குணங்கள்

நவராத்திரியின் சிறப்புகளில் ஒன்றாக கொலு வைக்கும் நிகழ்வு உள்ளது. இந்த கொலு வைக்கும் முறையில் ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கியுள்ளன. நவராத்திரியின் ஒன்பது நாட்களை குறிக்கும் வகையில் ஒன்பது படிகள் அமைக்கப்பட்டு கொலு வைக்கப்படும்.

இதில் கீழே உள்ள முதல் மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை தாமச குணத்தை குறிக்கும். அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை ரஜோ குணத்தை எடுத்துரைக்கும். மேலே உள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்துவ குணத்தை அடையும் வழியை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

காருண்ய பித்ருக்கள்

சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது.

ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது.

எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான். இவர்கள் "காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''.

எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.
பெரும் ஆரவாரமும், அதைத் தொடர்ந்து வந்த கூச்சலும், அதுவரை அமைதியாக இருந்த அந்த இடத்தை பெரும் களேபர பூமியாக மாற்றியிருந்தது. தொடர் விவாதங்கள், கேள்விகள், பதில்கள் என்று அந்த இடம் சந்தைக் காடாகிப் போயிருந்தது.

அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த குருவுக்கு அது மிகவும் வினோதமாக தெரிந்தது. நாலா புறங்களிலும் இருந்து வந்த குரல்களில் ஒன்று அவருக்கு மிகவும் தெரிந்த குரல் போன்று இருக்கவே, அந்தக் குரலை உற்றுக்கேட்டார். அது தன் பிரதான சீடர்களுள் ஒருவனின் குரல் என்பதை அவர் கண்டு கொண்டார்.

உடனடியாக அந்த சீடனை தன் அறைக்கு வரும்படி வரவழைத்தார் குரு. பின்னர் கூச்சல், குழப்பத்திற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த சீடன், ‘குருவே! அறிஞர்களின் குழு ஒன்று உங்களைக் காண்பதற்காக வந்துள்ளது. ஆனால் அவர்கள் உங்களைப் பார்ப்பதற்கு நான் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டேன்.

அதனால் ஏற்பட்ட ஆட்சேபக் குரல்கள்தான் அவை’ என்றான் சீடன். அவனது கூற்றை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் குரு. சீடன் தொடர்ந்தான். ‘உண்மையான ஞானம் இல்லாமல், வெறும் அறிவை மட்டுமே வைத்திருப்பவர்களுடன் எங்கள் குரு பேசி, நேரத்தை வீணாக்கமாட்டார் என்று அடித்துச் சொல்லி விட்டேன்.

குருவே! வந்திருப்பவர்கள் வெறும் தர்க்கவாதிகள். போகும் இடமெல்லாம் பற்பல நியாய வாதங்களையும், தர்க்க ரீதியான கொள்கைகளையும் பேசிப் பேசி மக்களிடையே எண்ணற்ற முரண்பாடுகளை உண்டாக்குபவர்கள்’ என்றான்.

அதுவரை அமைதியாக இருந்த குரு, ‘உண்மை தான். ஆனால் அந்த தர்க்கவாதிகளில் நீயும் ஒருவனாக மாறிப்போய்விட்டாய் என்பதை மறந்து விட்டாயே! உன்னை மிகவும் வித்தியாசமானவன் என்று அவர்களுக்கு காட்ட முற்பட்டு, அதே சச்சரவுக்கும், பிரிவுக்கும் நீயே காரணமாகி விட்டாய்’ என்றார்.

சீடன் வெட்கித் தலை குனிந்தான். மவுனம் தன்னை மவுனம் என்று எப்போதும் சொல்வதில்லை. அதுபோலவே, உண்மையானது பண்பாட்டு விளக்கத்தால் நிறுவப்படுவதில்லை.

இயல்பான ஒன்றே வழிபாடு

ஜென் குரு ஒருவர் இருந்தார். அவர் உயர்ந்த பண்புள்ள ஞானியாக திகழ்ந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல பகுதியைச் சேர்ந்தவர்களும் அங்கு வந்து குருவிடம் நலம் விசாரித்து, உரையாடி மகிழ்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஒருமுறை குருவைக் காண்பதற்காக, ஒருவர் வந்திருந்தார். அவர் வந்திருந்த நேரத்தில் குருவானவர், புத்தரை வணங்கி வழிபட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அந்த நபர் வியந்து போனார். அங்கிருந்த ஆசிரமச் சீடர்களிடம் அந்த நபர் இதுபற்றி விசாரித்தார்.

அதற்கு அவர்கள், தங்கள் குரு தினந்தோறும் தவறாமல் புத்தரை வணங்குவதாக கூறினார்கள். ‘ஏன்?’ என்று வந்தவர் கேட்க, தங்களுக்கு தெரியாது என்று சீடர்கள் கைவிரித்து விட்டார்கள். புத்தரை வழிபட்டுக் கொண்டிருந்த குரு, தன் வழிபாடு முடிந்ததும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்போது வந்திருந்தவர்கள் குருவிடம் சென்று வணங்கி அவர் முன்பாக அமர்ந்தார். பின்னர் ‘இறைவன் என்று தனியாக ஒன்று உண்டா?’ என்ற கேள்வியை குருவின் முன்பாக வைத்தார். அதற்கு குரு, ‘கிடையாது’ என்று பதிலளித்தார்.

‘இறைத் தன்மை என்பது ஒருவனுக்கு உள்ளே இருப்பதா? அல்லது வெளியே இருப்பதா?’ என்று மீண்டும் கேள்வி எழுப்பினார் வந்தவர். ‘உள்ளே தான்’ என்றார் குரு. வந்தவரின் கேள்வி தொடர்ந்தது. ‘இந்திரியங்களை அடக்கித் தன்னுள்ளே தான் லயிப்பதன் மூலம்தானே, ஒருவன் உள் ஒளியைக் காண முடியும்?’. ‘ஆமாம்’ என்றார் குரு.

இப்போது தன்னுடைய சந்தேகத்தை கேள்வியாக வைத்தார் வந்த நபர். ‘அப்படியிருக்க ஆலய வழிபாடுகளால் என்ன பயன்?’ என்றார். குருவோ, ‘ஒன்றுமில்லை’ என்று பதிலளித்தார். ‘சம்சார வாழ்வில் சிக்கி உழலும் மனிதன் ஆன்ம அறிவு பெற வேண்டும் என்றால், உருவ வழிபாடு, ஆலய தரிசனம், யாத்திரை எனப் பல படிகளைத் தாண்டித் தானே ஆக வேண்டும்.

அதன் இறுதியில்தானே அவன் ஞானம் பெறுவான்?’ என்றார் வந்தவர். ‘இருக்கலாம்’ என்று ஒரே சொல்லில் பதிலளித்தார் குரு. ‘நீங்களோ அனைத்தையும் துறந்தவர். ஞானம் பெற்றவர். அப்படியிருக்க இன்னும் புத்தரை விடாமல், தினந்தோறும் அவரை வணங்குகிறீர்களே!,

புத்தரிடம் எதையாவது கேட்கிறீர்களா? அல்லது இன்னமும் உண்மையைத் தேடுகிறீர்களா?’ என்றார் வந்த நபர். ‘புத்தரிடம் நான் எதையும் கேட்பதும் இல்லை. எந்த உண்மையையும் தேடுவதும் இல்லை’ – இது குருவின் பதில். ‘பிறகு எதற்காக புத்தரை தினந்தோறும் வழிபடுகிறீர்கள்?’ என்றார் அந்த நபர்.

‘சும்மா தான்’ என்றார் குரு. அவரது பதில், அந்த நபரின் தலையை கிறுகிறுக்கத் செய்தது. இலக்கின்றி இருத்தலே இயல்பு என்பதை இந்த கதை உணர்த்துகிறது. எதையோ நாடிச் செய்வதல்ல வழிபாடு. எதையும் நாடாது இயல்பாகச் செய்வதும் வழிபாடுதான். இயல்பான ஒன்றை எதற் காக நிறுத்த வேண்டும்

ராகு பகவான் தலையை வெட்டிய மோகினி

அமிர்தம் கிடைக்க வேண்டி அசுரர்களும், தேவர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது தன்வந்திரி பகவான், அமிர்த கலசத்தை ஏந்தியபடி தோன்றினார். அவரிடம் இருந்து அசுரர்கள் அமிர்தத்தை பறித்துக் கொண்டு சென்றனர்.

இதைக் கண்ட மகாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்து வந்தார். அவரைக் கண்டு மயங்கிய அசுரர்கள், அமிர்தத்தை தேவர்களுக்கும் தங்களுக்கும் பங்கிட்டுத் தருமாறு மோகினியிடமே வேண்டினர். மோகினி தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தை அளித்து வந்தாள்.

அப்போது சிம்ஹிகையின் புத்திரர்களான ராகு–கேது என்ற இரு அசுரர்கள் தேவர்களைப் போல உருவம் கொண்டு சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் உள்ள இடத்தில் அமர்ந்தனர். மோகினி கொடுத்த அமிர்தத்தை இறைவழிபாடு செய்யாமல் அப்படியே உண்ண ஆரம்பித்தனர்.

எனவே இவர்கள் அசுரர்கள் என சந்திரனும், சூரியனும் சுட்டிக்காட்டினர். இதைக் கண்ட மோகினி, கரண்டியால் ராகுவின் தலையை வெட்டினாள். ராகுவின் தலை ஆகாயத்தில் சென்றது. வெட்டும்போது கேதுவுக்கு இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி துண்டானது. பிரம்மன் தந்த வரத்தால் ராகு கிரக அந்தஸ்து பெற்றார்.

கேது அமிர்தம் பெற்ற காரணத்தால் உயிர் பெற்று பல வால்களைப் பெற்று சிவனருளால் கிரக அந்தஸ்து பெற்றார். ராகு சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். சூலம், கத்தி, கேடயம், வரத முத்திரை ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தியிருக்கிறார்.

ராகு அலிக் கிரகம் ஆகும். இவர் தாமஸ குணம் கொண்டவர். தென்மேற்கு திசைக்கு உரியவர். பஞ்ச பூதங்களில் வானம் ஆவார். இவருக்கு புளிப்புச் சுவை மிகவும் பிடித்தமாகும். உலோகங்களில் கருங்கல். விருச்சிகம் உச்ச வீடு, ரிஷபம் நீச்ச வீடு, கன்னி சொந்த வீடு. ராகு மனிதன் உடலில் எலும்பு ஆவார்.

நவக்கிரகங்கள் துதிப் பிரியர்கள்

நவக்கிரகம் என்றால் ஒன்பது கிரகங்கள் இணைந்ததாகும். நவக்கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்களும் தான்.

பிரம்மனின் தலை கொய்யப்பட்டது, ராமர், லட்சுமணர் வனவாசம் சென்றது, பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் சென்றது, நளன் தன் மனைவி, மக்களை பிரிந்தது.. ராவணன் உயிர் இழந்தது.. இவை எல்லாம் நவக்கிரகங்கள் நல்ல நிலையில் இல்லாத போது நடந்தவையாகும்.

புதுமனை புகுவிழா நடத்தும் பொழுது கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை கண்டிப்பாக வைக்க வேண்டும். நவக்கிரகங்கள் துதிப் பிரியர்கள். எனவே துதித்தால் துயர் போக்குவர்