Monday, October 14, 2013

அகத்தியரின் மாணவர்கள் யார்?

அகத்தியரின் மாணவர்கள் யார்?

'அகத்தியம்' என்ற மிகப்பெரிய இலக்கண நூலைப் படைத்தவர் அகத்திய முனிவர். தமிழ்மொழியில் கூரிய அறிவும், ஆழ்ந்த புலமையும் கொண்டவர் அகத்தியர். பொதிய மலையில் இருந்து இன்றைக்கும் தமிழ்மொழியை வளர்த்துக்
கொண்டிருக்கிறார் என்று கூறுவது சான்றோர் மரபு. இவருடைய மாணாக்கர்களாக இருந்தவர்கள் யார்யார் என்பதை புறப்பொருள் வெண்பாமாலை சிறப்புப் பாயிரத்தின் மூலம் அறியலாம்.
...
மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன்.

தொல்காப்பியர், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகள், வாய்ப்பியன், பனம்பாரனர், கழாரம்பன், அவிநயன், காக்கைப்பாடினி, நற்றத்தன், வாமனன் ஆகிய பன்னிருவர் அகத்தியரின் மாணவர்கள் என்பதையும் அவர்கள் யாத்த நூல்தான் பன்னிருபடலம் என்பதையும் மேற்கண்ட பாடல் கூறுகிறது.

No comments:

Post a Comment