Monday, May 6, 2013

தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறுவது ஏன்?


சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் வடக்கில் இருக்கும் போது, தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறுவது ஏன்?



வடக்கில் இருப்பது பூலோக கயிலாயம். சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் என்பது எல்லா உலகங்களுக்கும் மேலான இடம். மோட்சம் எனப்படும் வீடுபேறு அங்கே தான் உள்ளது. வடக்கு, தெற்கு பிரச்னை வழிபாட்டில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் மாணிக்கவாசகர் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடினார்.

 

 

சிவனைப் போற்றி 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்கின்றனர். அப்படியென்றால் என்ன? தென்னாடு, அதாவது தமிழ்நாடு. தமிழ்நாட்டினை உறைவிடமாகக் கொண்ட சிவனே போற்றி என்று வாழ்த்துகின்றனர். ஆரியர்கள் வருமுன்னர் சிவனை மனித உரு கொண்டு தமிழர்கள் வழிபடவில்லை. மாறாக, லிங்க வழிபாட்டினையே கொண்டிருந்தனர்தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்பதை என்று மணிவாசகப் பெருந்தகை அருளினார். 'தென் நாட்டில் குடி கொண்ட என் இறைவா எல்லா நாட்டினருக்கும் துணையாய் இருப்பாயாக' என்பதே இதன் பொருள் எனலாம்

No comments:

Post a Comment