தனி நபர் கோயில் கட்டக்கூடாது என்று சொல்கிறார்களே, சரியா?பலருடைய பொருள், கோயில் கட்டுமான சேவையாகப் பயன்பட்டால், வீட்டில் பூஜை செய்ய இயலாத ஆயிரக்கணக்கானவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அவர்கள் எல்லாம் கோயிலுக்கு வந்து இறைவழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டினுள் பூஜை செய்ய இயலாதவர்கள் இவ்வாறு கோயி லுக்கு வருவதால், வீட்டிலேயே பூஜை செய்த நிறைவைக் காணலாம்; குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் எந்தத் தடையும் இன்றி நிகழும். தேவீ மகாத்மியம் 4ம் அத்யாயம் 4வது சுலோகத்தில் நாசாயச அசுப பயஸ்ய மதிம் கரோது என தேவீ வேண்டப்படுகிறாள். குற்றம் படிந்து விடாத செயல்களையே நாம் செய்ய வேண்டும் என உபநிஷதம் கூறுகிறது. எனவேதான் தனி நபர் கோயில் கட்டக்கூடாது; அனைவருக்கும் புண்ணியம் கிட்ட, அனைவரும் ஒன்றுகூடி தத்தமது பங்களிப்பை நல்கி கோயிலை உருவாக்க வேண்டும் என்பார்கள்.
No comments:
Post a Comment