கோயிலுக்குள் செல்லும்போது பலிபீடத்தை வணங்கிய பிறகு, கொடி மரத்தை கீழே விழுந்து மூன்று முறை வணங்க வேண்டும். பலிபீடம், கொடி மரம், நந்தி ஆகியவற்றை சேர்த்து மூன்று முறை வலம் வரவேண்டும்.
அவ்வாறு வலம் வரும்போது கொடி மரத்தின் நிழல் தரையில் பட்டால் அதை மிதிக்காமல் தாண்டியோ, சுற்றியோதான் செல்ல வேண்டும். கொடி மர வலத்தின்போது யாருடனும் பேசக்கூடாது. தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும்.
சுவாமிக்கோ, அம்பாளுக்கோ கோயிலுக்குள் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தால் அந்நேரத்தில் கொடி மரத்தைச் சுற்றி வரக்கூடாது. கொடி மர வணக்கத்தின் போது, எவ்வளவு உயர்ந்தவர்கள் வந்தாலும் அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கக் கூடாது.
No comments:
Post a Comment