Thursday, May 9, 2013

அந்தணர்களும் சில முதியவர்களும் சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பு இலையில் பரிமாறப்பட்டதில் ஒரு பிடி அன்னத்தை இலையின் நுனியில் வைக்கிறார்களே? அதன் தத்துவம் என்ன?

அந்தணர்களும் சில முதியவர்களும் சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பு இலையில் பரிமாறப்பட்டதில் ஒரு பிடி அன்னத்தை இலையின் நுனியில் வைக்கிறார்களே? அதன் தத்துவம் என்ன? ‘கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்’ என்கிறார், உலகநாதன். நூல்களில் கூறப்பட்ட, செய்ய வேண்டிய, செய்யும் வழியை தெரிந்து கொள்ளா மல் முடிக்க முயலாதே என்கிறார். ஔவையார் ‘ஐயமிட்டு உண்’ என்கிறார். அதாவது, ஒருவருக்காவது உணவு கொடுக்காமல் நாம் சாப்பிடக்கூடாது. வேதமும் ‘அதிதி தேவோ பவ, அதிதி அப்யாசுதான்வா’ என்கிறது. திடீரென்று வந்தவர்களுக்கு நம்மிடமுள்ளதை உணவாகக் கொடுப்பது மிகச் சிறந்த புண்ணியமாகும். ஒருவருமே வரவில்லை, நமக்கும் காத்திருக்க முடியவில்லை என வரும்போது, தான் சாப்பிடும் அன்னத்தை...

யமாய நமஹ
தர்ம ராஜாய நமஹ,
ம்ருத்யவே நமஹ,
அந்தகாய நமஹ
வைவஸ்வதாய நமஹ
காலாய நமஹ
ஸர்வபூத க்ஷயாய நமஹ
ஔதும்பராய தத்னாய,
வ்ருகோதராய சித்ராய
நீலாய பரமேஷ்டினே
சித்ர குப்தாயவை நமஹ
-என்று கூறி இலையின் நுனியில் ஒரு பிடி அன்னத்தை வைக்க வேண்டுமாம்.

No comments:

Post a Comment