Sunday, April 5, 2015

உடுக்கை ஒலி

உடுக்கை ஒலி
images
 
உடுக்கை என்றும் தமருகம் என்றும் அழைக்கப்படும் சின்னஞ்சிறு இசைக்கருவி  ஆனந்த தாண்டவம் நிகழ்த்தும் சிவபெருமானின் கரத்தில் இருப்பதைக் காணலாம். இதன் ஒலியிலிருந்தே சமஸ்கிருத இலக்கணத்தை பாணினி வகுத்தார் என்றும் சொல்லப்படுகிறது. ‘ உடுக்கை பிறந்ததம்மா ருத்ராட்ச பூமியிலே ‘ என்று குறிப்பிடும் மாரியம்மன் தாலாட்டு  பைரவர்  தட்சிணாமூர்த்தி  மாரியம்மன் என பல்வேறு தயவ மூர்த்திகளின் கரங்களில் நாம் காண்கின்ற இசைக்கருவி இது. இதன் ஒலியிலிருந்தே பிரபஞ்சம் தொடங்குகிறது என்று சொல்வார்கள்.
கிராமக் கோவில்களிலும் சமயச் சடங்குகளிலும் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக்கருவி உடுக்கை. மரத்தால் அல்லது உலோகத்தால் ஆனது  இதன் உடல்பாகம் இருபுற வட்டங்களிலும் மாட்டுத் தோலினை இழுத்து வைத்து இணைத்திருப்பர். இடை சிறுத்து இருபுற வட்டமும் விரிந்து பருத்திருக்கும். இதனை இடை சுருங்குப்பறை  என்றும் துடி என்றும் குறிப்பிடுகின்றனர். தஞ்சாவூர் சரஸ்வதி மகால் ஓலைச்சுவடிகளில் உடுக்கை என்பது டமருகம் என்று பதிவாகியுள்ளது. உடுக்கைக்கு மாற்றுப் பெயர் முத்திரை எனப்படுவதும் உண்டு. பொதுவாக சொல் வழக்கில் உடுக்கை அல்லது கோடங்கி download
இதை இசைத்துப் பாடும் கலையே உடுக்கைப்பாட்டு. கிராமியப் பாடல் இசைத்தட்டுக்களில் உடுக்கை ஓசைக்கு பெரும் பங்கு அமைந்துள்ளது. உடுக்கடித்துப் பாட தொடங்கிவிட்டால் மணிக்கணக்கில் பாடும் ஆற்றல் பெற்ற பூசாரிகள்  பலர் உண்டு 
 
உடுக்கைப் பாடலின் போது முதலிலிருந்து இப்படித்தான் தொடங்கி அடுத்தடுத்து பாடித் தொடர வேண்டும் என்பது மரபு. முதலில் குரு நாதரை அழைப்பார்கள். அடுத்து விநாயகரை துதிப்பார்கள். எல்லை தெய்வத்தையும் அடுத்து  கொல்லிமலை  மாசி பெரியண்ண சுவாமியையும் அழைத்து இஷ்ட தெய்வங்களையும் வரிசை கட்டி பாடி  அதன் பின்னரே எவர் உடுக்கை அடித்து குறி கேட்க வந்துள்ளாரோ அவரது குலதெய்வத்தை அழைத்து உடுக்கை பாடலைத் தொடங்குவார்கள் பூசார்கள்.download (1)
 
தமிழ் நாட்டில் நாமக்கல் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் உடுக்கை தயார் செய்கிறார்கள். வேங்கை உடுக்கை  பலா உடுக்கை  வெண்கல உடுக்கை  என மூன்று வகை உடுக்கைகள்  உள்ளன.இதில் வெண்கல உடுக்கை கும்பகோணத்தில் மட்டுமே தயார் செய்யப்படுகிறது. இதில் அதிகப் பயன்பாட்டில் இருப்பது வேங்கை உடுக்கைதான்  இதுவே விலை சற்று அதிகம். உடுக்கு அடிக்கும் பூசாரிகளுக்கு வரம்பும் உண்டு பாரம்பரியமும் உண்டு. அவர்கள் மாமிசம் உண்ணக் கூடாது. மது அருந்தக் கூடாது.மிகவும் ஒழுக்கமாக வாழ வேண்டும். 
 
 

No comments:

Post a Comment