Friday, April 24, 2015

ஓ ஹோ நீங்கள் என்ன கலப்பு ஜாதியா ?

ரயில் பயணம் செய்து கொண்டிருந்த வியாபாரி ஒருவர்,தனது அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரின் ஜாதியைத் தெரிந்து கொள்ள விரும்பினார் .அந்தப் பெரியவரோ ஜாதியைக் குறிப்பிடுவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தார் .

வியாபாரியும் விடாமல் நச்சரிக்கவே ,"நான் ஏதாவது ஒரு ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்திருந்தால் கூறியிருப்பேன் "என்றார் .

இதைக் கேட்டவுடன் "ஓ ஹோ நீங்கள் என்ன கலப்பு ஜாதியா ?... உங்கள் பெற்றோர்கள் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களா ?"என்று கேட்டார் வியாபாரி .

"சரி ..... நீங்கள் இவ்வளவு துரம் கேட்பதால் ஏன் ஜாதியைச் சொல்கிறேன் ...கேளுங்கள் "என்றார் பெரியவர் .

"காலையில் நான் என் வீட்டினை,கழிவறைகளைச் சுத்தம் செய்யும் போதும் நான் முழுமையான சூத்திரனாகவும் ,எனக்கு நானே முகச்சவரம் செய்யும் போது நாவிதனாகவும் ,எனது 'ஷு ' க்களை பாலிஷ் செய்யும் போது அருந்ததியராகவும் ,துணி துவைக்கும்போது வண்ணாகவும்,கணக்கு எழுதும்போது வியாபாரியாகவும் ,கல்லூரியில் பாடம் நடத்தும்போது பிராமணனாகவும் ஆகிறேன்.தற்போது தாங்களே சொல்லுங்கள் .நன் எந்த ஜாதி ? "என்று வினா எழுப்பினார் பெரியவர் .

இதற்குள் பெரியவர் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்தது .அந்தப் பெரியவரை வரவேற்க ரயில் நிலையத்தில் பெரும்கூட்டம் காத்திருந்தது .

அவர் இறங்கியவுடன் அவருக்கு மாலை அணிவித்து ,'ஆச்சாரிய கிருபளானி ஜிந்தாபாத் '

என்று கோஷமிட்டனர் .

அந்த காட்சியைப் பார்த்து அந்த வியாபாரி பிரமித்து நின்றவுடன் ,தனது தவறுக்கு வருந்தினர்

No comments:

Post a Comment