Tuesday, April 28, 2015

சங்குகள்

சங்குகள் 
உருவத்தில் சிறியது இப்பி, ஆயிரம் இப்பிகளுக்கு தலைவன் ஒரு சிப்பி, ஆயிரம் சிப்பிகளுக்கு தலைவன் ஒரு சங்கு, ஆயிரம் சங்குகளுக்கு தலைவன் ஒரு இடம்புரி, ஆயிரம் இடம்புரிக்கு தலைவன் ஒரு வலம்புரி, ஆயிரம் வலம்புரிக்கு ஒரு சலஞ்சலம், ஆயிரம் சலஞ்சலத்திற்க்கு தலைவன் ஒரு பாஞ்சசன்னியம்.
நாம தீப நிகண்டு கூறும் பாடலின் பொருள் இது.
உலகம் முழுவது சங்குகளில் பலவகை உண்டு ஆனால் பொதுவாக இந்தியாவில் சங்கு என குறிப்பிடுவது சாங்கஸ் பைரம்(Xancus Pyrum) என்பதைத்தான். நம் நாட்டு கடல்கள் தவிர வேறெங்கும் இவைகள் கிடையாது. குறிப்பாக வங்காள விரிகுடாவில் தூத்துக்குடி, ராமேஸ்வரம், மணப்பாடு, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கிடைக்கின்றன. செம்மை, வெண்மை நிறங்களில் கிடைக்கின்றன.இவை எல்லா காலங்களிலும் கிடைப்பதில்லை. கார்த்திகை மார்கழி, தை ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் கிடைக்கிறது.இதில் தை மாதம் திங்கள் கிழமைகளில் அதிக அளவில கிடைக்கும்.
சங்கு ஒரோட்டு உடலி ஆகும் உடலை சுற்றி உள்ள ஓடு கடினமானதாகும் அந்த ஓடு சங்கு எனப்படுகிறது. இவை ஊன் உண்ணிகள் கடலடியில் உள்ள புழுக்களை தின்று உயிர்வாழும். சங்கில் ஆண் சங்கு பெண் சங்கு என இரு வகை இருந்தாலும் பிரித்தறிவது கடினம் . தமிழகத்தில் 2000ஆண்டுகளாக சங்கு எடுப்பது தொடர்கிறது. கடலில் பிறக்கும் சங்குகள் பலவகை இருந்தாலும் 25 வகை சங்குகளே ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை,9 வகை பெருமாளுக்கு உரியதாகவும், 16 வகை சிவனுக்கு உரியதாகவும் கருதப்படுகிறது.
இந்த உயிரினங்கள் உயிருடன் பிடித்துவரப்பட்டு கொடுமையாக ஹைட்ரோ குளோரிக் அமிலத்தினால் கொல்லப்பட்டு சொரசொரப்பு நீக்கபடுகிறது, பின் இயந்திரங்களால் மெருகேற்றப்படுகிறது. வலம்புரி சங்குகள் அரசுக்கு சொந்தமானவை, இவ்வகை சங்குகள் கிடைக்கபெற்றால் மீன்துறை இயக்குனரிடம் அளிக்கப்படவேண்டும் அவை மதிப்பீட்டாளர் மூலம் நிறம், நீளம், எடை, இனம் மதிப்பிடப்பட்டு ஏலம் விடப்பட்டு அரசு நிர்ணயப்படி எடுத்தவருக்கு குறிப்பிட்ட அளவு வெகுமதி கிடைக்கும்.
ஆனால் தற்போது வலம்புரிகளிலும் போலிகள் உள்ளன, Busycon contrariumஎன்ற நத்தை இனங்கள் (கடைசி படம்) உள்ளது ,,இவற்றினை வலம்புரி என விற்றுவிடுவார்கள். வாய் நீண்டிருந்தால் அவை போலி நத்தை கூடுகள். எனவே நன்கு அறிந்தவர்கள் கொண்டு மட்டுமே வலம்புரிகள் வாங்க வேண்டும் ..ஒருகிலோ வலம்புரி 15000ரூபாயாக இருக்கும்
சங்கினை வைத்து தான் பூஜை செய்ய வேண்டுமா? வேண்டியதில்லை அதற்காக தான் இறைவன் எளியோர்க்காக சங்கு பூவினை படைத்துள்ளான். சங்கு பூ ஒரு சலஞ்சலத்தின் பலனை தரும் வெண்சங்கு பூ சிவனுக்குரியது, நீல சங்கு விஷ்ணுவுக்கு உரியது. அப்பனுக்கு மட்டும் தான் உரித்ததா? இல்லை அம்மையும் விரும்புகிறாள்.
திருமீயச்சூர் லலிதாம்பிகை யை சதய நட்சத்திரத்தன்று தாமரை இலைகளில் சங்குபூவினை வைத்து அம்மையையும், மேகனாதரையும் பூசித்து அதே இலையில் சுத்தான்னத்தினை வைத்து நிவேதம் செய்து அதனை உட்கொண்டால் எல்லா பிணிகளும் காணமல் போகும்.

No comments:

Post a Comment