Wednesday, April 29, 2015

நாயன்மாரில் பெண்கள்

நாயன்மாரில் பெண்கள்
!) காரைக்கால் அம்மையார்:
அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். 
கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைக்கப்பட்டார். 
பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார்.
இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன. இவருக்கென காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.
2) மங்கையர்க்கரசியார்:
பாண்டிய நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த போது, சைவ சமயத்தினை பின்பற்றிய இருவர்களில் மங்கையர்கரசியாரும் ஒருவர். இதனால் சைவர்கள் மங்கையர்களுக்கு அரசி என்ற பொருளில் மங்கையர்கரசி என்று பிற்பாடு வழங்கினார்கள். ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார்.
3) இசைஞானியார்:
திருவாரூரிலே கௌதம கோத்திரத்தில் அவதரித்த ஞானசிவாச்சாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவருக்குத் திருமகளாக அவதரித்தவர் இசைஞானியார். அவர் திருவாரூர் இறைவரது திருவடி மறவாதவர். திருமணப் பருவம் அடைந்ததும் திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் உரிமைத் திருமனைவியானார். ஆளுடைய நம்பியைப் புத்திரனாகப் பெறும் பேறு பெற்ற இசைஞானிப் பிராட்டியாரின் பெருமை எம்மால் புகழக் கூடியதோ? என்று கூறுமளவு சிவபக்தியில் சிறந்து விளங்கினார்......
இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.

2 comments:

  1. திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதி அம்மையார் பற்றிய முழுமையான வரலாறு மேற்கண்ட பெண்ணரசிகளின் சிவதொண்டுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

    பெரும்பாலோருக்கு திலகவதி அம்மையார் தன் சகோதரனின் சூலை நோய் தீர்க்கும் பொருட்டு எம்பெருமான் அருள் வேண்டியது வரையிலான வரலாறு மட்டுமே தெரிந்திருக்கும. அதற்குப் பிந்தைய நாள் அவ்வம்மையார் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் முக்தி பெற்றது எவ்வாறு என்பது போன்ற தகவல்கள் இருந்தால் மேலும் சிறப்பு.

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  2. நான் அதிகை வாழ் அடியேன் திலகவதியார் ஜீவமாதியில் வேண்டினால் எதையும் தெரிந்துனரலாம் அம்மையார் வாழ்வில் என் வாழ்வும் தொடர்புடையது.

    ReplyDelete